Tuesday, 25 August 2020

ஜோதிடத்தின் அடிப்படை

 ஜோதிடம் என்றால என்ன?


ஜோதிடம் என்பது, வானமண்டலத்தில் உள்ள கிரகங்களின் கதிர்கள் மனித வாழ்வை எப்படி நிர்ணயிக்கிறது என்பது பற்றிய அறிவியலே ஜோதிடம். அவரவர் முற்பிறவியில் செய்த நல் தீவினைகளால் அவரவர்க்கு ஏற்படும்  நன்மை, தீமைகளை அறிந்து நன்மையால் மகிழ்ச்சியும், தீமை என்றால் பரிகாரங்கள் செய்தும் பிரயோசனம் அடைதல் பொருட்டு  உருவானதே ஜோதிடம் ஆகும்.


இனி ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம்.


1.1 வாய்பாடுகள்

1 நாள் = 60 நாழிகை = 24 மணி

1 நாழிகை = 60 விநாழிகை = 24 நிமிடம்

1 விநாழிகை = 60 தற்பரை = 24 வினாடி


ராசி மண்டலம் = 360 பாகைகள் = 12 ராசிகள்
1 ராசி = 30 பாகைகள்= 2 ¼ நட்சத்திரங்கள்

1 நட்சத்திரம் = 13 பாகை 20 கலை = 4 பாதங்கள்

1 பாதம் = 3 பாகை 20 கலை


1 பாகை = 60 கலை

1 கலை = 60 விகலை


1.2 
கிரகங்கள் 9

1. சூரியன்

2 சந்திரன்

3. செவ்வாய்

4. புதன்

5. குரு

6. சுக்கிரன்

7. சனி

8. ராகு

9. கேது



1.3 
ராசிகள் 12

1. மேஷம் 

2. ரிஷபம்

3. மிதுனம்

4. கடகம்

5. சிம்மம்

6. கன்னி

7. துலாம்

8. விருச்சிகம்

9. தனுசு

10. மகரம்

11. கும்பம்

12. மீனம்


1.4 
நட்சத்திரங்கள் 27

1 அசுவனி

2. பரணி

3. கார்த்திகை

4. ரோகினி 

5. மிருகசீரிஷம்

6. திருவாதிரை

7. புனர்பூசம்

8. பூசம்

9. ஆயில்யம்

10. மகம்

11. பூரம்

12. உத்திரம்

13. அஸ்த்தம்

14. சித்திரை

15. சுவாதி

16. விசாகம்

17. அனுஷம்

18. கேட்டை

19. மூலம்

20. பூராடம்

21. உத்திராடம்

22. திருவோணம்

23. அவிட்டம்

24. சதயம்

25. பூரட்டாதி

26. உத்திரட்டாதி

27. ரேவதி.



1.5 
ராசிகளும் அவற்றின் அதிபதிகளும்




மேஷத்தின் அதிபதி செவ்வாய்
ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்
மிதுனத்தின் அதிபதி புதன்
கடகத்தின் அதிபதி சந்திரன்
சிம்மத்தின் அதிபதி சூரியன்
கன்னியின் அதிபதி புதன்
துலாத்தின் அதிபதி சுக்கிரன்
விருசிகத்தின் அதிபதி செவ்வாய்
தனுசுவின் அதிபதி குரு
மகரம் மற்றும் கும்பத்தின் அதிபதி சனி
மீனத்தின் அதிபதி குரு.


1.6. 
கிரகங்களும் அவற்றின் நட்சத்திரங்களும்



1.7. 
நட்சத்திரத்தின் உட்பிரிவு

ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வரு பாகத்தையும் “பாதம்” என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாகப்பிரிக்கப் பட்டிருக்கிறது.

அதாவது அசுவனியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் அசுவனி முதல் பாதம் என்றும், இரண்டாம் பாகம் அசுவனி இரண்டாம் பாதம் என்றும், மூன்றாம் பாகம் அசுவனி மூன்றாம் பாதம் என்றும், நான்காம் பாகம் அசுவனி நான்காம் பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதாவது பரணியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் பரணி முதல் பாதம் என்றும், இரண்டாம் பாகம் பரணி இரண்டாம் பாதம் என்றும், மூன்றாம் பாகம் பரணி மூன்றாம் பாதம் என்றும், நான்காம் பாகம் பரணி நான்காம் பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதே போல மற்ற நட்சத்திரங்களுக்கும் தெரிந்து கொள்க.

1.8 
ராசிகளும் அவற்றில் அடங்கும் நட்சத்திரங்களும்

ஒரு ராசிக்கு ௨ ¼ நட்சத்திரங்கள் என்று முன்னமே தலைப்பு 1.1 – ல் பார்த்ததை நினைவு கொள்ளவும். அதாவது ஒரு ராசிக்கு (2 x 4) + 1 = 9 பாதங்கள்





மேஷ ராசியில் அசுவனியின் 4 பாதங்களும், பரணியின் 4 பாதங்களும், கார்திகையின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

ரிஷப ராசியில் கார்த்திகையின் மீதம் 3 பாதங்களும், ரோகினியின் 4 பாதங்களும், மிருகசீரிடத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

மிதுன ராசியில் மிருகசீரிடத்தின் கடைசி 2 பாதங்களும், திருவாதிரையின் 4 பாதங்களும், புனர்பூசதின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

கடக ராசியில் புனபூசத்தின் கடைசி 1 பாதமும், பூசத்தின் 4 பாதங்களும், ஆயில்யத்தின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)

சிம்ம ராசியில் மகத்தின் 4 பாதங்களும், பூரத்தின் 4 பாதங்களும், உத்திரத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

கன்னி ராசியில் உத்திரத்தின் மீதம் 3 பாதங்களும், அஸ்தத்தின் 4 பாதங்களும், சித்திரையின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

துலா ராசியில் சித்திரையின் கடைசி 2 பாதங்களும், சுவாதியின் 4 பாதங்களும், விசாகத்தின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

விருச்சிக ராசியில் விசாகத்தின் கடைசி 3 பாதங்களும், அனுஷத்தின் 4 பாதங்களும், கேட்டையின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)

தனுசு ராசியில் மூலத்தின் 4 பாதங்களும், பூராடத்தின் 4 பாதங்களும், உத்திராடத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

மகர ராசியில் உத்திராடத்தின் கடைசி 3 பாதங்களும், திருவோனத்தின் 4 பாதங்களும், அவிட்டத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

கும்ப ராசியில் அவிட்டத்தின் கடைசி 2 பாதங்களும், சதயத்தின் 4 பாதங்களும், பூரட்டாதியின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

மீன ராசியில் பூரட்டாதியின் கடைசி 3 பாதங்களும், உத்திரட்டாதியின் 4 பாதங்களும், ரேவதியின் 4 பாதங்களும்ம் அடங்கும். (1 + 4 + 4 = 9)


1.9 ராசிகளின் வகைகள்




1.9.1. சரம், ஸ்திரம், உபயம் என்ற அடிப்படையில் மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது...

மேஷம், கடகம், துலாம், மகரம் இந்நான்கும் சர ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்பம் இந்நான்கும் ஸ்திர ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு மீனம் இந்நான்கும் உபய ராசிகள்.


1.9.2 &3. 
ஒற்றை (ஆண்) ராசி, இரட்டை (பெண்) ராசி என்ற அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது...

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இந்த ஆறு ராசிகளும் ஆண் ராசிகள் அல்லது ஒற்றை ராசிகள்.

ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ஆறு ராசிகளும் பெண் ராசிகள் அல்லது இரட்டை ராசிகள்.

1.9.4 & 5 
மேலும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற அடிப்படையிலும், கிழக்கு, மேற்கு வடக்கு தெற்கு என்ற அடிப்படையிலும் நான்கு வகையாக பிரித்திருக்கிறார்கள்

மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்றும் கிழக்கு ராசிகள், நெருப்பு ராசிகள்.
ரிஷபம், கன்னி, மகரம், இம்மூன்றும் தெற்கு ராசிகள், நிலம் ராசிகள்.
மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்றும் மேற்கு ராசிகள், காற்று ராசிகள்.
கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்றும் வடக்கு ராசிகள், நீர் ராசிகள்




1.10. 
ராசிகளில் கிரக பலம்.

1.10.1. உச்சம், நீச்சம்

 

சூரியன் மேஷத்தில் உச்சம், துலாத்தில் நீச்சம்
சந்திரன் ரிஷபத்தில் உச்சம், விருச்சிகத்தில் நீச்சம்
செவ்வாய் மகரத்தில் உச்சம், கடகத்தில் நீச்சம்
புதன் கண்ணியில் உச்சம், மீனத்தில் நீச்சம்
குரு கடகத்தில் உச்சம், மகரத்தில் நீச்சம்
சுக்கிரன் மீனத்தில் உச்சம், கண்ணியில் நீச்சம்
சனி துலாதில் உச்சம், மேஷத்தில் நீச்சம்


 

 1.10.2. ராசிகளில் பகை பெரும் கிரகங்கள்


கிரகங்களின் உச்சம், நீசம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகள் அனைவருக்கும் எளிதாக தெரியும்.  ஆனால் நட்பு, சமம், பகை போன்ற நிலைகளை தெரிந்து வைத்திருப்பது என்பது ஆரம்ப நிலை ஜோதிடர்களுக்கு சற்று தடுமாற்றத்தை தரும்.

அதற்கான ஒரு சூத்திரம் கீழே தந்திருக்கிறேன் பாருங்கள்.

1.  கிரகங்கள் தாங்கள் மூலத்திரிகோணம் அடையும் ராசிகளுக்கு 2,12, 4, 5, 8, 9 ஆகிய வீடுகள் நட்பு வீடுகளாகும்.

2.  ஏனைய வீடுகள் (3,6,7,10,11) பகை வீடுகளாகும்.  இவற்றில் ஒரு வீடு நட்பாகவும் மற்றது பகையாகவும் இருந்தால் அது சம வீடாகும்.

3. கிரகங்கள் உச்சம் அடையும் வீட்டிற்கு அதிபதியான கிரகத்தின் மற்றொரு வீடு பகையாக வந்தாலும் சமம் என்று கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணம் தருகிறேன் பாருங்கள்.
சூரியன் உச்சம் அடைவது மேஷ ராசி
நீசம் அடைவது அதற்கு 7-ம் வீடான துலா ராசி
ஆட்சி பெறுவது சிம்ம ராசி
மூலத்திரிகோணம் பெறுவதும் சிம்ம ராசி

எனவே சிம்மத்திலிருந்து 2, 12, 4, 5, 8, 9-ம் வீடுகள் நட்பு ராசிகளாகும்  சூரியனுக்கு 2ம் வீடாக கன்னி ராசி வருவதால் புதன் முதலில் நட்பாக வருகிறார்.  பின்பு 11ம் வீடாக மிதுனம் வருவதால் அது பகை என வருகிறது.  எனவே ஒரு நட்பும், பகையும் கலந்து வருவதால் சூரியனுக்கு புதன் சமம் என்ற நிலையைப் பெறும்.

எனவே சூரியன் மிதுன, கன்னி ராசிகளில் சமம் என்ற நிலையை அடைகிறார்.
செவ்வாய் உச்சம் பெறும் ராசி மகரம்.  அதன் மூலத்திரிகோண ராசி மேஷம் எனவே சூத்திரத்தின் படி மேஷத்திலிருந்து 10, 11ம் வீடுகளாக வரும் மகரம் மற்றும் கும்ப ராசிகளில் செவ்வாய் பகை பெற வேண்டும்.  ஆனால் மகரம் உச்ச வீடாக வருவதால் மற்றொரு வீடான கும்பம் பகை என்ற நிலை பெறாமல் சமம் என்ற நிலையைப் பெறுகிறது.
இதே முறையில் மற்ற கிரகங்களுக்கும் நட்பு, பகை, சமம் ஆகிய நிலைகளை எளிதாக அறிந்துகொள்ளலாம்.

மூலத்திரிகோண ராசிகள்

சூரியன் - சிம்மம்
சந்திரன் - ரிஷபம்
செவ்வாய் - மேஷம்
புதன் - கன்னி
குரு - தனுசு
சுக்கிரன் - துலாம்
சனி - கும்பம்.

இதில் சூரியன், மற்றும் புதன் தங்களது ஆட்சி வீட்டிலேயே மூலத்திரிகோணம் அடைகின்றன.
சந்திரன் உச்ச வீடான ரிஷபத்தில் மூலத்திரிகோணம் அடைகிறார்.
மற்ற கிரகங்கள் தங்களது இரண்டு வீடுகளில் ஆண் ராசிகளில் மூலத்திரிகோணம் அடைகின்றனர்.
 
1.11 திதி

ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம் 
 ஆகும்.  திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி வரை உள்ள  
பதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள  
பதினைந்து நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்.



1.12 ராசிகளின் வகைகள்

1.12.1 வறண்ட ராசிகள்
மேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி ஆகிய ராசிகள் வறண்ட ராசிகள்.

1.12.2 முரட்டு ராசிகள்
மேஷம்,விருச்சிகம் ஆகிய ராசிகள் முரட்டு ராசிகள் ஆகும்.

1.12.3 ஊமை ராசிகள்
கடகம்,விருச்சிகம்,மீனம் ஆகிய ராசிகள் ஊமை ராசிகள் ஆகும்.

1.12.4 நான்கு கால் ராசிகள்
மேஷம்,ரிஷபம்,சிம்மம்,மகரம் ஆகிய ராசிகள் நான்கு கால் ராசிகள் ஆகும்.

1.12.5 இரட்டை ராசிகள்
மிதுனம்,தனுசு,மீனம் ஆகிய ராசிகள் இரட்டை ராசிகள் ஆகும்.



1.13  லக்னம்  

ஒரு ஜாதகத்தில் இடம் பெறும் ராசிக் கட்டத்தில் 'ல' என்றோ, அல்லது 'லக்' என்றோ, அல்லது 'லக்னம்' என்றோ குறிப்பிட்டிருக்கும் ராசியே முதல் வீடாகும். இங்கே கொடுத்திருக்கும் ராசிக் கட்டத்தைப் பாருங்கள். இங்கே 'லக்னம்' என்று குறிப்பிட்டிருக்கும் ராசி மேஷ ராசி. எனவே இதுவே முதல் வீடு. இதிலிருந்து வரிசைக் கிரமமாக எண்ணினோம் என்றால் ரிஷபம் 2வது வீடு. மிதுனம் 3வது வீடு. கடகம் 4வது வீடு. சிம்மம் 5வது வீடு. கன்னி 6வது வீடு. துலாம் 7வது வீடு. விருச்சிகம் 8வது வீடு. தனுசு 9வது வீடு. மகரம் 10வது வீடு. கும்பம் 11வது வீடு. மீனம் 12வது வீடு


மீனம்  12
மேஷம்   1  (லக்னம்)
ரிஷபம்   2
மிதுனம்   3
கும்பம்  11

கடகம் 
 4
மகரம்  10
சிம்மம்   
5
தனுசு    9
விருச்சிகம்   8
துலாம்   7
கன்னி  
6

லக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள் - See more at: http://www.tamilastrology.net/astrology-basics/ascendent.html#sthash.pO392gn5.dpuf

லக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள் - See more at: http://www.tamilastrology.net/astrology-basics/ascendent.html#sthash.pO392gn5.dpuf
லக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள் - See more at: http://www.tamilastrology.net/astrology-basics/ascendent.html#sthash.pO392gn5.dpuf

லக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள்.

1.14 கேந்திர, திரி கோண, மறைவு வீடுகள்

ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு
என்பார்கள்.உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது.
அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.

லக்கினத்தை - முதல் வீடு என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

- 1 , 5 , 9 - ஆகிய வீடுகள் - திரி கோண ஸ்தானம். (லக்ஷ்மி ஸ்தானம்)
- 1 , 4 , 7 ,10 - கேந்திர வீடுகள் என்பர். ( விஷ்ணு ஸ்தானம் )
- 3, 6 , 8 , 12 

- மறைவு வீடுகள் என்று கூறுவர். அதாவது , இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் - பலம் இழந்து இருக்கும்..
- 2 , 11 - உப , ஜெய ஸ்தானங்கள் என்பர்.

1 
ஆம் வீடு - திரி கோணமும் , கேந்திரமும் ஆகிறது...
எந்த ஒரு கிரகமும் - திரி கோணத்திலோ , கேந்திரத்திலோ - நின்றால் - அது  பலத்துடன் நிற்கிறது என்று அர்த்தம்.

2 , 11 - வீடுகளில் நின்றால் - பரவா இல்லை , நல்லது.
3 ஆம் வீடு - சுமார்.
6 ,8 ,12 - ஆம் வீடுகள் - நல்லதுக்கு இல்லை. அப்படினா என்ன, ஒரு சுப கிரகம் , இந்த வீடுகள் லே இருந்தா, அதுனாலே ஏதும் , பெருசா நல்லது பண்ண முடியாது.


1.15 
ஒரு கிரகம் கெட்டு விட்டது , பலம் இல்லை என்று எப்படி கூறுவது?

ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால்.... மறைவு வீடுகளில் இருந்தால்... பகை வீட்டில் இருந்தால்... பகை கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால்... அந்த கிரகம் சரியான நிலைமையில் இல்லை என்று பொருள்.

1.16 கிரகங்களின் பார்வைகள் :

எல்லா கிரகத்துக்கும் ஏழாம் பார்வை - பொது.
சனி க்கு - 3 , 10 ஆம் பார்வைகள் உண்டு.
செவ்வாய்க்கு - 4 , 8 ஆம் பார்வைகளும் உண்டு.
குருவுக்கு - 5 , 9 ஆம் பார்வைகளும் உண்டு.


1.17 காரகன்:(authority)

தந்தைக்குக் காரகன் சூரியன்
உடல் காரகன் சூரியன்
மனம், தாய்க்குக் காரகன் சந்திரன் 
ஆயுள், தொழில் காரகன் சனி
களத்திர காரகன் சுக்கிரன்
தனம், புத்திர காரகன் குரு
கல்வி, புத்தி காரகன் புதன்
நிலம், ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்


1.18  சந்திர ராசி என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டது?

ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி, சந்திர ராசி எனப்படும். அது ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டது.
 
1.19 . லக்கினம் எதற்குப் பயன்படும்? சந்திர ராசி எதற்குப் பயன்படும்?

பிறந்த ஜாதகம் (Birth Chart) 
என்பது வாகனம்,தசாபுத்தி என்பது ரோடு,கோள்சாரம் என்பது டிரைவர்.லக்கினத்தையும் அதை அடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளையும் வைத்து ஜாதகனுடைய வாழ்க்கையையும், தசாபுத்தியைவைத்து அந்த ஜாதகன் பயனடையப் போகும் காலத்தையும் கோள்சாரத்தைவைத்து அந்தப் பலன்கள் கையில் கிடைக்கும் காலத்தையும் அறியலாம்.
 
1.20. கோச்சாரம் (கோள் சாரம் - Transit of planets) என்பது என்ன?

ஒவ்வொரு கோளும் வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோள்சாரம் எனப்படும்.
 
1.21. தசா / புத்தி என்பது என்ன? அதன் பயன் என்ன?

ஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசாதான் ஜாதகனின் ஆரம்ப தசா, அதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர் (Sub period). 

ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்.

ஒரு தசையை ஒன்பது பகுதிகளாக பகுப்பதுதான் புக்தி:

அதாவது ஒன்பது கிரகங்களும் ஒவ்வொரு தசையின் காலத்தில் புக்தியாக பங்கெடுத்து பரிபாலனம் செய்யும். ஒரு தசை 10 வருடம் என்றல் அதில் ஒன்பது சமம் இல்லாத காலமாக புக்திகள் பிரிக்கபடுகிறது. அதில் எந்த ஒரு தசையும் தனது புக்தி கொண்டு ஆரம்பிக்கும். 

அதாவது ராகு தசை என்றால் அதில் ராகு புக்தி முதலில் தொடங்கும் (தனது புக்தி ). அதாவது தனது கிரகத்தின் பங்களிப்பை முதலில் செய்து விடும். அதன் பின்பு மேலே உள்ள வரிசை படி, குரு புக்தி, சனி புக்தி, புதன் புக்தி, கேது புக்தி, சுக்கிர புக்தி என தொடரும். அதேபோல் புதன் தசை என்றால் முதலில் புதன் புக்தி, (தனது புக்தி ) அதன் பின்பு வரிசையாக கேது புக்தி, சுக்கிர புக்தி, சூரிய புக்தி என ஒன்பது புக்திகளும் நடந்து வரும்.

ஜோதிட துறையில் வழமையாக சொல்லுவது என்னவென்றால் எந்த ஒரு தசையில் தனது புக்தி ஒருவருக்கு நல்லதை செய்கிறதோ அந்த தசையில் மற்ற புக்திகள் கெடுதல் செய்யும். அதாவது கொடுத்து கெடுப்பது. ஆக ஒரு தசையின் தனது புக்தி காலமானது பலருக்கு நல்லது செய்யாமல் கெட்டதும் செய்யாமல் மந்தமாக அல்லது நடுத்தரமாக நடந்தால் மற்ற புக்திகள் விசேஷமாக இருக்கும் என்று சொல்லுகின்றனர்.

ஒரு புக்தியை ஒன்பது பகுதி காலங்களாக பிரிப்பது தான் அந்தரம்.

எப்படி தசையில் ஒன்பது பகுதி புக்தியோ அதுபோல் புக்தியில் ஒன்பது பகுதிதான் அந்தரம். அதாவது ஒரு தசை நடந்தால் ஒன்பது கிரகங்கள் புக்தியாக பங்கு கொள்கிறதோ அதேபோல் ஒரு புக்தியில் ஒன்பது பகுதிகளாக அந்தரம் என்ற காலம் பங்கேடுக்கிறது.

உதாரணமாக ஒருவருக்கு குரு தசை நடக்கிறது என்றால் முதலில் குரு புக்தி, சனி புக்தி, புதன் புக்தி, என ஒன்பது கிரகங்கள் தொடரும். அதுபோல் அந்த குருதசையின் குரு புக்தி எடுத்துக்கொண்டால் குரு அந்தரம், சனி அந்தரம், புதன் அந்தரம் என ஒன்பது கிரகங்களும் அந்தரம் காலமாக செயல்படும்.

ஆக ஒரு மனிதனின் ஆயுள் = 9 தசையாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தசைக்கும் ஒன்பது புக்திகளாக பிரிக்கப்பட்டு ஒன்பது புக்திகளுக்கும் ஒன்பது அந்தரங்களாக பிரிக்கப்படும் கால புருஷன் ஒருவரின் வாழ்வை நிர்ணயிக்கின்றான்.

இதில் பெரும்பாலும் யாரும் அனைத்து தசைகளை நிறைவு செய்வது இல்லை. 70 வயது ஆயுள் என்றால் 3 அல்லது 4 தசைகள் நடக்காமலே ஆயுள் முடிந்து விடும்.

மேலும் ஒரு கிரகம் ஒரு ஜாதகத்தில் நல்ல பலம் பெற்றால் அந்த தசை முழுவதும் நல்லதே நடக்கும் என்றும் சொல்ல இயலாது. என் என்றால் புக்தி என்ற பங்களிப்பு ஓவ்வொரு தசையிலும் அனைத்து கிரகங்களுக்கும் உள்ளது. அதைவிட அந்தரம் என்ற பங்களிப்பும் அனைத்து கிரகங்களுக்கும் உள்ளது.

எனக்கு குரு தசை நடக்கிறது எனக்கு ஜாதகத்தில் குரு உட்சமாக இருக்கிறது நல்ல பலன் நடக்கும் என்று நினைக்ககூடாது. குரு தசையில் சனி புக்தி சேவை புக்தி கேது அந்தரம் என்று வரும் அல்லவா அப்போது நம்மை போட்டு பார்த்து விடும்.

சனி எனக்கு ஜாதகத்தில் கெட்டு போய் உள்ளது சனி தசை முழுவதும் கேடுதலே நடக்கும் என்று கலங்க வேண்டாம். அதில் நல்ல கிரகங்கள் புக்தி மற்றும் அந்தரம் நடக்கும்போது மூச்சு விட வாய்ப்பு வரும்.

 
1.22. தசா புத்திகள்

ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை.
 தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன?

சூரிய தசை - 6 ஆண்டுகள்  
சந்திர தசை - 10 ஆண்டுகள்  
செவ்வாய் தசை - 7 ஆண்டுகள் 
 ராகு தசை - 18 ஆண்டுகள் 
குரு தசை - 16 ஆண்டுகள்  
சனி தசை - 19 ஆண்டுகள் 
 புதன் தசை - 17 ஆண்டுகள் 
 கேது தசை - 7 ஆண்டுகள்  
சுக்கிர தசை - 20 ஆண்டுகள் 

மொத்தம் 120 ஆண்டுகள்

1.23 அஸ்தமனம்

ஒரு கிரகம் வலிமை இழந்து போவதுதான் அஸ்தமனம் இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் அமர்ந்திருந்தால், 2-வதாக இருக்கும் கிரகம் வலிமை இழக்கும். இந்த விதிப்படி சூரியனுடன் ஒரு கிரகம் 10 பாகைக்குள் இருக்கும்போது வலிமை இழந்துவிடும்

1.24 அஷ்டகவர்கம்

அஷ்டவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் வலிமையையும், ஒரு வீட்டின் தன்மையையும் மதிப்பெண்கள் கொடுத்துக் கணிப்பது.ஒரு வீட்டில் ஒருகிரகத்தின் அதிகபட்ச மதிப்பெண் 8,  ஒரு ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337
(
யாராக இருந்தாலும் 337 மட்டுமே)
ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் - 28 (337/12)
இந்த மதிப்பெண்களை வைத்து ஒரு ஜாதகத்தில் உள்ள நன்மை தீமைகளை சுலபமாக அறியலாம்.

1.25 .நவாம்சம்

Navamsam is the magnified version of a Rasi Chart
ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம் அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம்.குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்)

1.26 சுற்றும் காலம்

ஜோதிடப்பலன்கள்  அறிய  முதலில் ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என அறிந்துக்கொளவது  அவசியம் முதலாவதாக சந்திரன் ஒன்றுதான் 12 ராசிகளை முப்பது நாட்களில் சுற்றி வருகிறான் அதாவது ஒவ்வொரு ராசியிலும் அவன் 2 ½ நாடகள் தான்  தங்குவான்

அடுத்தபடியாக நாம் சூரியனைச்சொல்லலாம்   .சூரியன், சுக்கிரன், புதன் 12 ராசிகளை ஒரு ஆண்டில் சுற்றிவருகிறான்.
  
செவ்வாய் கிரகம் 1 ½ ஆண்டுகளில்  12 ராசிகளைக்  கடக்கின்றன .இவை  ஒவ்வொரு ராசியிலும் சுமாராக 45 நாட்கள் தங்கி இருக்கும் ஆனால் சில சம்யம் செவ்வாய்  ஒரு ராசியில் அதிக மாதங்கள் தங்க வாய்ப்புண்டு. சிலசமயம்  ஆறு மாதங்கள் கூட அந்த இடத்திலேயே இருக்கும்.

பின் வருவது குரு ,இந்தக்கிரகம்  12  ராசிகளை  12 ஆண்டுகளில் கடக்கிறது ஒரு ராசியில் ஒரு வருடம்  தங்கி இருக்கும் சில சம்யம் வக்ரமாகி  ஒரு சில மாறுதல் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மந்தன் என்ற பெயரிலேயே தெரிகிறது சனி மிகவும் மெதுவாக 12 ராசிகளைக் கட்க்கும் என்று ,,,சனி 12 ரசிகளைக்கடக்க முப்பது ஆண்டுகள் பிடிக்கின்றன  இவர் ஒரு ராசியில் 2 1/2 வருடங்கள் தங்குகிறார்.

ராகு கேது  18 ஆண்டுகளில்  12 ராசிகளைக் கடக்கின்றன  இவை ஒரு ராசியில் 1 1/2 வருடம்தங்கி இருக்கும் .எல்லா கிரகங்களும் முறைப்படி ராசிகளை வலம் வர இந்த ராகு கேது மட்டும்  ராசிகளை இடது பக்கமாக எதிர்திசையில் செல்கின்றன மேலும் இரண்டும் ஒரே  நேரத்தில் ஒரு ராசியிலிருந்து  மற்றொரு ராசிக்கு செல்கின்றன  மற்ற எல்லா கிரகங்களும் தனித்தனியே நகர ராகு கேது மட்டும் சேர்ந்தே நகருகின்றன  ராகு கேது பெயர்ச்சி என்று இரண்டையும் சேர்த்தே தான் சொல்லுவார்கள் ராகு  கேது ஒருவர்க்கொருவர்  பார்த்த வண்ணம் ஒருவர்க்கொருவர் 7 ம் இடத்தில் சஞ்சரிப்பார்கள் உம்...  மேஷ்த்தில் ராகு இருந்தால் அதற்கு 7ம் இடமான துலாத்தில் கேது இருக்கும்  ரிஷ்பத்தில் ராகு இருந்தால் விருச்ச்சிகத்தில்  கேது இருக்கும்


1.27 
வக்ரகதி  ..

ராகு கேது  எப்போதுமே இடமிலிருந்து வல்மாக் எல்லா ராசிகளையும் வளைய வரும் anticlockwise .எல்லா கிரகங்களும்  மேஷ்த்திலிருந்து ஆரம்பித்து  ரிஷபம்   மிதுனம் என்று சுற்ற ராகு  கேது  கடகத்திலிருந்து ஆரம்பித்து மிதுனம் ரிஷபம் மேஷம் என்று பின்னுக்கு வந்து சுற்றும் இதே போல்  தான்  நட்சத்திர நிலை.யும்  .எல்லா கிரகங்களும் அசுவனி பரணி கிருத்திகை  ரோஹிணி என்று சுற்றி வர  ராகு கேது  ரோகிணி கிருத்திகை பரணி  அஸ்வினி என்று சஞ்சரிக்கும் ஆனால் சில சந்தர்ப்பங்க்ளில்  செவ்வாய்  புதன்  குரு  சுக்கிரன் சனி என்ற ஐந்து கிரகங்க்ளும்  திடீரென்று பின்னுக்கு வருவதுண்டு இதைத் தான் வக்கிரகதி என்கிறார்கள்  இந்த வக்கிரகதி  தன்மை சில சமயம் வரைதான் நீடிக்கும் பின்  வழக்கம் போல் சுற்ற ஆரம்பித்துவிடும் உதாரணமாக குரு தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்குப்போனபின் சில சம்யங்க்ளுக்கு திரும்பவும் தனுர் ராசிக்கே வந்துவிட்டு பின்  திரும்ப மகர  ராசிக்கு செல்லும் ,இதையே குரு வக்கிரகதியில் சஞ்சரிக்கிறார் என்பார்கள் சூரிய சந்திரனுக்கு இதுபோல்  வக்ரகதி  கிடையாது

1.28 
கிரஹங்கள் பலன் தரும் காலங்கள்

சூரியன், செவ்வாய், கிரஹங்கள் ஆரம்ப காலத்திலேயே பலன்களைக் கொடுப்பார்கள்.
 
சந்திரன், புதன் கிரஹங்கள் அவர்கள் காலம் முழுவதும் பலன்களைக் கொடுப்பார்கள்.
 
குருவும், சுக்ரனும் அவர்கள் காலத்தின் மத்தியில் பலன்களைக் கொடுப்பார்கள்.
 
சனி, ராகு, கேது பிற்காலத்திலேயே பலனைக் கொடுப்பார்கள். 


1.29 
கிரஹங்கள் அடுத்த ராசிகளின் பார்வை 

ஒரு ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்போது, அதை விட்டுப் போவதற்குமுன்பே அடுத்த ராசிகளைப் பார்ப்பார்கள். கிரஹங்கள், தாங்கள் இருக்கும் ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாறுமுன், அந்தந்த அடுத்த ராசியின் குண விசேஷங்களை முன்னதாகவே அடையப்பெற்று, அதற்குத் தகுந்தவாறு அடுத்த ராசியின் பலாபலன்களை ஜாதகருக்கு கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அதாவது,
சூரியன் -5 நாள்
புதன்,சுக்ரன் -7 நாள்
செவ்வாய் -8 நாள்
குரு -2 மாதம்
ராகு,கேது -3 மாதம்
சனி                                  - 6 மாதம்  

1.30 கிரஹங்கள் வலிமை 

உச்சம்  - 100% வலிமை
மூலத்திரிகோணம் - 90% வலிமை
சொந்த வீடு - 80% வலிமை
நட்பு வீடுகள் - 60% வலிமை
சம வீடுகள் - 50% வலிமை
பகை வீடுகள் - 40% வலிமை
நீச வீடுகள் - 10% வலிமை
இந்த அளவுகள் எல்லாம் எடைபார்க்கும் இயந்திரத்தை வைத்துச் சொல்லப் பட்டதல்ல! அனுபவத்தில் பெற்ற உத்தேச அளவுகள்

1.31 ஷட்பலம்

ஷட்பலம் என்பது ஆறுவகை பலமாகும். அவை ஸ்தானபலம், திக் பலம், சேஷ்ட பலம், கால பலம், திருக் பலம், நைசர்கிக பலம் என்பனவாகும்.


திக் பலம் :

லக்னத்தில் குருவும் புதனும்,
நான்கில் சந்திரன் சுக்கிரன், 
ஏழில் சனி, பத்தில் 
சூரியன் செவ்வாய் இருப்பது

ஷட்பலம் அறிவதன் மூலமே கிரகத்தின் உண்மையான வலிமையை அறிய முடியும். மேலும் பாவ பலத்தையும் அறிய வேண்டும். இதன் பிறகே ஜாதகத்தின் பலாபலன்களை சரியாக கணிக்க முடியும். இதை கணிக்க விரிவான ஜோதிட அறிவும் ஓரளவு கணித அறிவும் அவசியம்.


1.32  




1.33 பஞ்சாங்கம் என்றால் என்ன?


பஞ்சாங்கம்னா ஐந்து  அங்கங்கள்னு அர்த்தம்.

அந்த ஐந்து அங்கங்கள்:

1.
வாரம் / நாள்  

2   திதி     

3. நட்சத்திரம்        

4. யோகம்            

5. கரணம்

ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம்.

திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி
வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப்
பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து
நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்.



1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. 
துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. 
திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. 
சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. 
பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. 
சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. 
சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. 
அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. 
நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. 
தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. 
ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. 
துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. 
திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. 
சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.
 


பிரதம திதியில்:- அதிபதி :- அக்னி பகவான் 
துதியை திதியில்:-அதிபதி :- துவஷ்டா தேவதை 
திருதியை திதி:- அதிபதி  :- பார்வதி
சதுர்த்தி திதி:- அதிபதி    :- கஜநாதன் [விநாயகர்] 
 பஞ்சமி திதி:- அதிபதி    :- சர்ப்பம்
சஷ்டி திதி:- அதிபதி      :-முருகன்
சப்தமி திதி:- அதிபதி     :- சூரியன் 
அஷ்டமி திதி:- அதிபதி   :- சிவபெருமான் 
நவமி திதி:- அதிபதி      :-பாராசக்தி 
தசமி திதி:- அதிபதி      :- ஆதிசேஷன்
ஏகாதசி திதி:- அதிபதி    :- தர்ம தேவதை
 துவாதசி திதி:- அதிபதி   :- விஷ்ணு 
 திரயோதசி திதி:- அதிபதி :- மன்மதன் 
சதுர்தசி திதி:- அதிபதி    :- கலிபுருஷன்


திதியில் இருந்து பிறந்ததுதான் தேதி

வானவெளியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரத்தைச் சொல்வதுதான் திதி

விரதங்கள் இருப்பவர்கள், இறைவனுக்கு அபிஷேகம் செய்பவர்கள் இந்தத் திதி பார்த்துத்தான் செய்வார்கள்

அதேபோல் புதுக் கணக்குப் போடுபவர்கள் அதிகம்  விரும்புவது தசமித் திதி

3. 
திருமணம்,  இடம் வாங்குவது போனற சுப காரியங்களைச் செய்பவர்கள் அஷ்டமி, நவமி திதியில் செய்வதில்லை.

4. ஒரு மனிதனின் மரணத்தை திதியை வைத்துதான் குறிப்பிடுவார்கள். ஒருவன் ஐப்பசி  மாதம் வளர்பிறை நவமி திதியில் காலமானால், ஒரு ஆண்டு கழித்து அல்லது வருடா வருடம் அவனது சந்ததியினர்அதே ஐப்பசி மாதம் வளர்பிறை நவமி திதியில் தான் அவனுக்கு நினைவுச் சடங்குகளைச்  செய்வார்கள்.கிராமங்களில் தங்கள் வீட்டில் படையல் போடுவார்கள். இதுபோன்று இன்னும் பல பழக்கங்கள் இந்தத் திதியை வைத்துப் பல சமூகங்களில் பலவிதமாக உள்ளது.



 நட்சத்திரம் என்பது அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள். பூமியை சுற்றி சந்திரன் செல்லும் பாதையில் எந்த நட்சத்திரம் உள்ளதோ  அதுதான் அன்றைய ந்ட்சத்திரம். 27 நாட்களில் சந்திரன் வானவெளியில் ஒரு சுற்றை முடித்துவிட்டு அடுத்த சுற்றை அரம்பித்துவிடும்

தினசரி ஒரு நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு நாளும் சந்திரனை வைத்துப் பிறந்த நட்சத்திரம் மாறும், அதேபோல 2.25 நாட்களுக்கு ஒருமுறை பிறந்த ராசியும் மாறும்.

மொத்தம் இருக்கிற 27 நட்சத்திரங்களைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்.. இல்லையா?


கரணம் - என்பது திதியில் பாதி தூரத்தைக் குறிக்கும். 

கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன: 

1. பவ,  
2. பாலவ,  
3. கெலவ,  
4. தைதூலை,  
5. கரசை,  
6. வணிசை,  
7. பத்தரை,  
8. சகுனி,  
9. சதுஷ்பாதம்,   
10.  நாகவம்,  
11. கிம்ஸ்துக்னம்.

வானவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனும், சந்திரனும் செல்கிற மொத்த தூரத்தைக் குறிப்பது யோகம். 





1.34 காரகோ பாவ நாஸ்தி



நாம் ஏற்கனவே - பன்னிரண்டு வீடுகளைப் பற்றி , பாடம் பார்த்தோமே, ...அந்த ,   அந்த வீடுகளுக்கு காரகத்துவம் பெரும் கிரகங்களைப் பற்றி கூறி இருந்தேன்... ஞாபகம் இருக்கிறதா?



உதாரணத்திற்கு - ஏழாம் வீடு - களத்திர ஸ்தானம் - காரகம் பெறுவது - சுக்கிரன். ஐந்தாம் வீடு - குழந்தைகள் ஸ்தானம் - காரகம் பெறுவது  - குரு .

கரெக்டா ?  இந்த ஏழு கிரகங்களுமே, தனது  காரகம்   பெறும் இடங்களில் நின்றால் - சொதப்பி விடுகிறார்கள். அவர்கள் வேலை பார்ப்பதே இல்லை. 
தனியாக நின்றால் , வெகு நிச்சயமாக சொதப்பல். மற்ற கிரகங்களுடன் இணைந்து இருப்பது - பரவா இல்லை.

அதாவது - எந்த லக்கினமாக இருந்தாலும், ஏழில் - சுக்கிரன் தனித்து இருந்தால் , அவர்களுக்கு திருமண விஷயம் , அவ்வளவு எளிதாக இருப்பது இல்லை. நிறைய பேருக்கு திருமணமே நடப்பது இல்லை. அல்லது வெகு தாமத திருமணம்... முறைப்படி திருமணம் செய்து குடித்தனம் நடத்த முடியாத நிலை இப்படி..தவறி, விதி விலக்காய்  நடந்தாலும் - கல்யாணம் பண்ணியும் பிரயோஜனம் இல்லாத நிலைமை.  இப்படி....

அதைப் போலவே ,  ஐந்தாம் வீட்டில் - குரு தனித்து நின்றால் - அவர்களுக்கு - குழந்தை பாக்கியம் இருப்பது இல்லை. ஆகா , பிரமாதம், ஐந்தில் குரு - நல்லா பக்காவா - திரிகோண ஸ்தானத்தில் இருக்கிறார் என அவசரப் பட்டு விடாதீர்கள்.. 

இதற்க்கு பெயர் தான் காரகோ பாவ நாஸ்தி .... 

இதைக் கூட நிறைய ஜோதிடர்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.. ஆனால் , நாம் அடுத்து பார்க்க விருக்கும் விஷயம் - நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை என்பது என் அனுபவம்...

எந்த ஒரு விஷயமும் தெரிஞ்சுக்கிட ரெண்டு வகை இருக்கு. -- ஒன்னு உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற குரு - பக்காவா , வெளிப்படையா சொல்லிக் கொடுக்கிறவரா இருக்கணும். ... இல்லையா , உங்களுக்கு இயல்பா இருக்கிற ஆர்வம் , உங்க தேடுதல் ... உங்களுக்கு நிறைய விஷய ஞானத்தைக்  கொடுக்கும்.


1.35 கேந்திராதிபத்திய தோஷம்  பற்றி :

சுப கிரகங்கள் - கேந்திர அதிபதிகளாக இருந்து  , கேந்திரங்களிலேயே நிற்க - அவராலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்கிறது விதி.. இது எல்லா கிரகங்களுக்கும் இல்லை. முழுக்க , முழுக்க சுப கிரகங்களுக்கு மட்டுமே.
இயல்பிலேயே - அசுப கிரகங்களான - செவ்வாய் , சனி, சூரியன் , தேய்பிறை சந்திரன், தீய கிரகங்களுடன் சேர்ந்தால் அசுப கிரகமான புதன் , ராகு , கேது  - ஆகியோர் கேந்திரங்களில் நின்றால் - தோஷமில்லை.

எனவே , கேந்திராதிபத்திய தோஷம் பெறும் கிரகங்கள் - குரு, சுக்கிரன் , வளர்பிறை சந்திரன், தனியாக நிற்கும் புதன்.

இவர்கள் , வேறு கிரகங்களுடன் இணைந்து - கேந்திரத்தில் இருந்தால் , பரவா இல்லை. தனியே நிற்க கூடாது. 

1.36 பாதகாதிபத்யம், பாதகாதிபதி - விளக்கம்.


மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ஆகிய லக்னங்களுக்கு - 11 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.

ரிஷபம் , சிம்மம் , விருச்சிகம் , கும்பம் ஆகிய லக்னங்களுக்கு - 9 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.

மிதுனம் , கன்னி , தனுசு , மீனம் ஆகிய லக்னங்களுக்கு - 7 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.

பாதகாதிபதி பலம் வாய்ந்த எந்த பாவங்களில் இருக்கிறாரோ அந்த பாவங்களில் உருவாகும் பலன்களில் பாதகத்தை செய்வர் .மேலும் பாதகாதிபதி எந்த இடத்தை பார்க்கிறாரோ அந்த இடத்தின் பலன்களும் பாதிக்கப்படும்   இந்த பாதகாதிபதி தீமையான பலன்களை தமது தசா புக்தி காலங்களில் தருவார்.  பாதகாதிபதியை விட பாதக ஸ்தானத்தில் அமரும் கிரகம் அதிக பாதகத்தை தரும் என்பது ஜோதிட விதி.


1.37 பாதகாதிபதி/ மாரகாதிபதி/ யோகாதிபதி தசை

             
பாதகாதிபதி தசை நடகின்றது அப்பொழுது அவனுக்கு பாதகமான செயல்கள் நடக்கும். அவனை அதிகம் துன்பபட வைக்கும்.
           
இதே போல் பார்த்தால் மாரகாதிபதி தசை எப்படி இருக்கும்? 
இந்த காலங்களில் மரணம் அல்லது மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் வரும்.

அதே போல் தான், ஒருவனுக்கு யோகாதிபதி தசை நடக்கும் போது, அனைத்து வசதிகளும் வந்து சேரும்.

1.38 போதகன்/ வேதகன்/  பாசகன்/ காரகன்

தசையின் காரக பலன்கள்

தசை
போதகன்
வேதகன்
பாசகன்
   காரகன்






1
சூரியதசை
செவ்வாய்
சுக்கிரன்
சனி
   குரு
2
சந்திரதசை
செவ்வாய்
சூரியன்
சுக்கிரன்
    சனி
3
செவ்வாய் தசை
சந்திரன்
புதன்
சூரியன் 
    சனி
4
குரு தசை
செவ்வாய்
சூரியன்
சனி
  சந்திரன்
5
சுக்கிரன் தசை
குரு
சனி
புதன்
   சூரியன்
6
சனி தசை
சந்திரன்
செவ்வாய்
சுக்கிரன்
    குரு
7
புதன் தசை
குரு
செவ்வாய்
சுக்கிரன்
 சுக்கிரன்

போதகன் :   தனது தசைகளில் வரும் புத்திகளில் தனது பலனைக் கொடுக்கும்.
வேதகன் : பாவத்தின் பலனை மாறுபடச் செய்யும். [ நன்மை தருவதில்லை]
பாசகன் : பாவத்தின் பலன் கிடைக்க உதவி செய்யும்.
காரகன்: சம்பாதித்த பொருளை கிடைக்க உதவி செய்யும்.

1.39 சந்திராஷ்டமம்

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். 
சந்திரன் இருக்கும் நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.
சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோச்சார பலன்களைப் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கிறோம்.
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள், அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன. அந்த
  வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் ‘சந்திராஷ்டமம்’ ஒன்று.
 

நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே
  சந்திராஷ்டமம் என்கிறோம்.  சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான்  ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ் சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள்,  இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக  தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன. 

ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய
  இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம்,  வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள்,  புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களை யும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.  

எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம்
  எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம்  போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள் ஆகும்.
 

வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது, அதே
  நேரத்தில் லாப-நஷ்டங்கள்,  நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன  பலன்கள் ஏற்படும்?
சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம். இரண்டாம் இடத்தில் இருக்கும்போது: பணவரவுக்கு வாய்ப்புண்டு. பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.

மூன்றாம் இடத்தில் இருக்கும்போது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள். நான்காம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய்வழி ஆதரவு.

ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள், தெய்வ பக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம். தாய் மாமன்
  ஆதரவு.

ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன். வீண் விரயங்கள். மறதி, நஷ்டங்கள்.

ஏழாம் இடத்தில் இருக்கும்போது: காதல் நளினங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம். பெண்களால் லாபம், மகிழ்ச்சி.

எட்டாம் இடத்தில் இருக்கும்போது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளலாம். கோயிலுக்குச் சென்று வரலாம்.

ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.

பத்தாம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், நிறை-குறைகள், பண வரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.

பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன
  அமைதி, தரும சிந்தனை.

பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது: வீண் விரயங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள்
  நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

பிறந்த நட்சத்திரம் சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி
   - அனுஷம்
பரணி
      -  கேட்டை
கிருத்திகை
  - மூலம்
ரோகிணி
    - பூராடம்
மிருகசீரிஷம்
-உத்திராடம்
திருவாதிரை
 -திருவோணம்
புனர்பூசம்
    - அவிட்டம்
பூசம்
        - சதயம்
ஆயில்யம்
   - பூரட்டாதி
மகம்
        - உத்திரட்டாதி
பூரம்
        - ரேவதி
உத்திரம்
     - அஸ்வினி
அஸ்தம்
     - பரணி
சித்திரை
     - கிருத்திகை
சுவாதி
       - ரோகிணி
விசாகம்
    - மிருகசீரிஷம்
அனுஷம்
    - திருவாதிரை
கேட்டை
     - புனர்பூசம்
மூலம்
       - பூசம்
பூராடம்
      - ஆயில்யம்
உத்திராடம்
  - மகம்
திருவோணம்
- பூரம்
அவிட்டம்
    - உத்திரம்
சதயம்
       - அஸ்தம்
பூரட்டாதி
     - சித்திரை
உத்திரட்டாதி
 -சுவாதி
ரேவதி
       - விசாகம்

1.40 ஜோதிடத்தில் விதி, மதி, கதி 


விதி என்பது இலக்கினம். மதி என்பது சந்திரன் நிற்கும் ராசி. கதி என்பது சூரியன் நிற்கும் ராசி என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இலக்கினம் சந்திரன் சூரியன் இம்மூன்றில் எது வலுவாக இருக்கிறதோ அதை அடிப்படையாக வைத்துத்தான் பலன்கள் நிர்ணயம் செய்யயப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.



Thursday, 13 August 2020

ஜேர்மன் காலனித்துவ பேரரசின் ஹெரெரோ மற்றும் நாமாஸ் இனப்படுகொலை (நமீபியா) 1904

 1884 முதல் 1915 வரை ஜெர்மனி நமீபியாவை நிர்வகித்தது. ஒரு ஜெர்மன் வர்த்தகர் நாட்டின் மேற்கில் ஒரு பெரிய வைர சுரங்கத்தைக் கண்டுபிடித்த பிறகு. உள்ளூர் மக்கள் (ஹீரோக்கள்) மற்றும் பல்வேறு துஷ்பிரயோகங்களைத் தொடர்ந்த குடியேறியவர்களிடையே விரைவில் மோதல்கள் வெடித்தன: நிலம், கால்நடைகள், பெண்கள் மற்றும் ஹீரோ ஆண்களின் நிரந்தரக் கொலை, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மக்களை விரைவாக சோர்வடையச் செய்த துஷ்பிரயோகங்கள் . அந்த நேரத்தில் ஜேர்மன் குடியேற்றவாசிகளின் அச்சம் உள்ளூர் மக்களின் பொதுவான கிளர்ச்சிக்கு உட்பட்டது. 1904 ஆம் ஆண்டில் ஹீரோஸ் ஒகாஹண்ட்ஜோ நகரில் குடியேறியவர்களுக்கு எதிராக ஒரு தாக்குதலை நடத்தி 200 க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றார். மக்களை ஒழிப்பதற்கான சாக்குப்போக்கு இடமளிப்பதாகத் தோன்றியது.



ஹீரோஸின் தாக்குதலுக்குப் பிறகு, சீனாவிலும் கிழக்கு ஆபிரிக்காவிலும் கொடுமைக்கு புகழ் பெற்ற ஒரு அதிகாரி ஜெனரல் வான் ட்ரோத்தா நமீபியாவிற்கு மாற்றப்பட்டு, அதில் வசிக்கும் ஜேர்மன் குடியேறியவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட கடிதத்தை அனுப்பினார் பிரதேசம் “ஹீரோக்கள் இனி ஜெர்மன் குடிமக்கள் அல்ல. அவர்கள் தங்கள் விருப்பப்படி வெளியேற ஒப்புக் கொள்ளாவிட்டால், அவர்கள் ஆயுதங்களால் கட்டாயப்படுத்தப்படுவார்கள். அவர்கள் இல்லையெனில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், நான் அவர்களை எனது "ரோஹர் க்ரூட்" (பெரிய பீரங்கி) மூலம் வெளியேற்றுவேன் ... நமீபிய எல்லைகளுக்குள் ஆயுதங்களுடன் அல்லது இல்லாமல் காணப்பட்ட எந்த ஹீரோவும் தூக்கிலிடப்படுவார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீண்டும் தொழிலாளர் முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள். ஆண் கைதிகள் யாரும் எடுக்கப்பட மாட்டார்கள். அவர்கள் சுடப்படுவார்கள். ஹீரோ மக்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு. நான் கிளர்ச்சியடைந்த பழங்குடியினரை இரத்தம் மற்றும் பணத்தின் நீரோடைகளில் அழிக்கிறேன். நிலையானதாக இருக்கும் புதிய ஒன்றை வளர்ப்பதற்கான ஒரே விதை இது. ”

ஆகஸ்ட் 1904 இல், ஜெனரல் வான் ட்ரோதா ஹீரோக்களைச் சூழ்ந்திருந்தார், இதனால் தப்பிக்க ஒரே வழி கிழக்கு நோக்கி, கலாஹரி பாலைவனத்தை நோக்கி ஒரு சூழலில் அவர்கள் உயிர்வாழ அனுமதிக்காத மற்றும் உறுதிசெய்யும் சூழலில் அவரது திட்டத்தின் வெற்றி, வான் ட்ரோதா பாலைவனத்தில் ஒரு இராணுவ வளைவை நிறுவினார் மற்றும் நீர் புள்ளிகள் விஷம் வைத்திருந்தார். இந்த கொடூரமான தண்டனைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகினர். மூன்று ஆண்டுகளாக, ஹீரோக்களுக்கு எதிராக முறையான அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டது: சுருக்கமான மரணதண்டனை, தூக்கு, பயோனெட்டால் கடந்து செல்லப்பட்ட குழந்தைகள், பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் ஒரு எடுத்துக்காட்டு. படுகொலையின் முடிவில், இறந்தவர்களின் எண்ணிக்கை பேரழிவுகரமானது: 86 ஹீரோக்களில், 000 இல் 15 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். தப்பிப்பிழைத்தவர்களில் சிலர் அண்டை காலனிகளுக்கு தப்பிச் செல்ல முடிந்தது, கடைசி எதிர்ப்பாளர்கள் பூட்டப்பட்டனர் தொழிலாளர் முகாம்கள் சுரங்கங்களில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் (உணவு பற்றாக்குறை, கவனிப்பு) தங்கள் நிலத்தை இழந்தன. பல ஜெர்மன் அதிகாரிகளுக்கு பெண்கள் பாலியல் அடிமைகளாக செயல்படுவார்கள்.



முதல் உலகப் போரின் முடிவில், ஜெர்மனி அதன் அனைத்து ஆபிரிக்க காலனிகளையும் திரும்பப் பெற்றபோது, ​​அண்டை நாட்டில் (தென்னாப்பிரிக்கா) குடியேறிய ஆங்கில காலனித்துவவாதிகள் நமீபிய அரசாங்கத்தை நிர்வகிக்க முடியும் என்பதற்காக இந்த நிகழ்வுகள் குறித்து ஒரு மோசமான அறிக்கையை வரைந்தனர். பயன்படுத்திக்கொள்ள. பல ஆண்டுகளாக, ஹெரெரோஸ் படுகொலை சர்வதேச சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையில், இந்த வேதனையான காலத்தின் அடையாளமான தலைவரான ஹெரோ ஹோசியா குட்டாக்கோவால் முறையீடுகள் செய்யப்பட்டன.

நிகழ்வுகள் நடந்த 2004 ஆண்டுகளுக்குப் பிறகு 97 வரை, ஜேர்மன் அரசாங்கம் ஹீரோ இனப்படுகொலையை அங்கீகரித்தது மற்றும் நமீபியாவின் வடக்கில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு விழாவின் போது அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரப்பட்டது. திருமதி விக்ஸோரெக்-ஜீல்: “நாங்கள் தார்மீக மற்றும் வரலாற்றுப் பொறுப்பை ஜேர்மனியர்கள் ஏற்றுக்கொள்கிறோம், எங்களை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” இது நமீபிய அரசாங்கமும் கடைசி ஹீரோ சந்ததியினரால் வரவேற்கப்பட்ட ஒரு சைகை

Saturday, 9 May 2020

ஜெரூசலேம்: உலகின் சர்ச்சை மிகுந்த பிராந்தியமாக இருப்பது ஏன்?

ஒன்றுபட்ட ஜெரூசலேம் தனது தலைநகர் என்று இஸ்ரேல் கூறுகிறது. அரபு-இஸ்ரேல் போரில் 1967இல் கிழக்கு ஜெரூசலேமை தனது கட்டுப்பாட்டிற்கு இஸ்ரேல் கொண்டு வந்தது. எதிர்காலத்தில் உருவாக்கப்படும் தன்னுரிமைகொண்ட பாலத்தீன நாட்டின் தலைநகராக ஜெரூசலேம் இருக்கும் என்பது பாலத்தீனர்களின் வாதம்.




இஸ்ரேலியர்களுக்கும், பாலத்தீனர்களுக்கும் புனித நகராக திகழும் ஜெரூசலேம் நகர் மட்டும் மிகவும் புராதனமானது அல்ல அதைப் பற்றிய சர்ச்சைகளும் பழமையானவையே.

இஸ்லாம், கிறித்துவம், யூதம் ஆகிய மூன்று மதங்களுக்கும் புனித்ததலம் ஜெரூசலேம்.

இதனாலேயே பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள், யூதர்கள் மற்றும் கிறித்துவர்கள் ஜெரூசலேமிற்கு உரிமை கொண்டாடுகின்றனர். 5,000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட ஜெரூசலேம் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகி, முற்றுகையிடப்பட்டுள்ளது. தரைமட்டமாக்கப்பட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்த நகரின் மண்ணில் சரித்திரத்தின் சுவடுகள் பொதிந்துள்ளதாக கருதப்படுகிறது. உலகின் பழம்பெரும் நகரங்களில் ஒன்றாக ஜெரூசலேம் கருதப்படுகிறது.

பல்வேறு மதங்களின் மக்களிடையே ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் மோதல் காரணமாக இன்று ஜெரூசலேம் உலக மக்களின் கவனத்தை பெற்றிருக்கலாம். ஆனால் இந்த நகரத்தின் வரலாறோ மக்களை ஒன்றிணைப்பது.

நகரின் மையப் பகுதியில் பழைய ஜெரூசலேம் என்று அழைக்கப்படும் புராதன நகரம் அமைந்திருக்கிறது. இது, உலகப் பாரம்பரியச் சொத்தாக (World Heritage) வகைப்படுத்தப்பட்டுள்ளது. அர்மீனியக் குடியிருப்பு, 

கிறித்தவக் குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்பு என நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது பழைய ஜெரூசலேம்.

உலகின் மிக புனிதமாக கருதப்படும் இந்த நகரின் நான்கு குடியிருப்புகளும் கோட்டை போன்ற பாதுகாப்பு சுவரால் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு பகுதிகள் கிறித்துவர்களுக்கு சொந்தமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் அர்மீனியர்களும் கிறித்துவர்களே. நான்கு பகுதிகளிலும் மிகவும் பழமையானது அர்மீனியக் குடியிருப்பு பகுதிதான்.

மேலும், உலகின் மிகப் பழமையான அர்மீனிய மையம் இங்கிருக்கும் அவர்களது குடியிருப்பு பகுதியே. செயிண்ட் ஜேம்ஸ் தேவாலயம் மற்றும் மடாலயத்தில், ஆர்மீனியர்கள் தங்கள் வரலாறு மற்றும் கலாசாரத்தை பாதுகாத்து வருகின்றனர்.


கிறித்துவர்களின் பகுதியில் திருக்கல்லறை தேவாலயம் (The Church of the Holy Seppelker) அமைந்துள்ளது. இது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை மையமாக கொண்டதாக நம்பப்படுவதால், உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்களின் நம்பிக்கைக்கு உரிய இடமாக இருக்கிறது. பைபிளின் புதிய ஏற்பாட்டின்படி, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது, இறந்தது, உயிருண்டு எழுந்தது அனைத்துமே ஜெரூசலேமில்தான்.

கிறித்துவ மரபுகளின்படி, இந்த இடம் கல்வாரி மலை என்று கூறப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட கல்லறை இங்குதான் இருக்கிறது. அவர் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்ததும் இங்கிருந்துதான் என்று நம்பப்படுகிறது. கிறித்துவ சமூகத்தினர், குறிப்பாக கிரேக்க பழமைவாத பேட்ரியார்ச்செட், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பிரான்சிஸ்கன் ஃபிரையர்ஸ், ஆர்மீனிய பேட்ரியார்ச்சார்ட் போன்றவற்றை தவிர, எத்தியோப்பியன், காப்டிக் மற்றும் சிரியாவின் பழமைவாத தேவாலயங்கள் அதோடு தொடர்புடைய போதகர்கள் என இந்த தேவாலயம் கிறிஸ்தவ சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளால் நிர்வகிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான கிறித்துவர்களின் புனித மையம் இது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கிறிஸ்துவின் கல்லறைக்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர். இங்கு வந்து பிரார்த்திப்பதும், பாவமன்னிப்பு பெறுவதும் கிறித்துவர்களுக்கு மனநிறைவு தருவதாக கருதப்படுகிறது.
மசூதியின் கதை என்ன?

ஜெரூசலேமின் நான்கு குடியிருப்புகளில் மிகப்பெரிய குடியிருப்பு பகுதி இஸ்லாமியர்களுடையதுதான். பாறைக் குவிமாடம் மற்றும் அல் அக்ஸா மசூதி இங்கு அமைந்துள்ளது.

ஹரம் அல் ஷரீஃப் (புனித இடம்) என்று அழைக்கப்படும் இடமும் ஜெரூசலேமில் அமைந்துள்ளது.

இஸ்லாமியர்களின் மிகவும் புனிதமான இடங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றிருக்கும் அல்-அக்ஸா மசூதி வக்ஃப் என்ற இஸ்லாமிய அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.

நபிகள் நாயகம் மெக்காவில் இருந்து ஒரே இரவு பயணத்தில் இங்கு வந்ததாகவும், அவர் இங்கிருந்து தீர்க்கதரிசிகளின் ஆவிகளுடன் பேசியதாகவும் முஸ்லிம் மக்கள் நம்புகின்றனர்.

இதன் அருகிலேயே பாறைக் குவிமாடம் அமைந்துள்ளது. முகமது நபி ஜெரூசலேமிலிருந்து விண்ணகப் பயணம் சென்றதாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.

ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் நாள்தோறும் இந்த புனித இடத்திற்கு வந்து தொழுகை நடத்துகின்றனர். ரம்ஜான் மாதத்தின் வெள்ளிக்கிழமை நாட்களில், இங்கு தொழுகை நடத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும்.

யூதர்களின் பகுதியில்தான், கோட்டை அல்லது மேற்கு சுவர் அமைந்துள்ளது. அல் அக்ஸா மசூதியின் சுற்றுமதிலின் ஒருபகுதியாக அமைந்திருக்கும் மேற்கு சுவர், சிதைந்துபோன நீண்ட சுவரின் எஞ்சியிருக்கும் பகுதியாகும். இந்த இடத்தில் யூதர்களின் புனித கோயில் இருந்ததாக நம்பப்படுகிறது.
இந்த புனித தலத்திற்குள் பரிசுத்தமான புனிதப் பகுதி (The Holy of the Holy) அல்லது யூதர்களின் மிகவும் புனிதமான இடம் அமைந்திருந்தது.

உலகமே இந்த இடத்தில் இருந்துதான் உருவானது என்றும், நபி இப்ராஹீம் தனது மகன் இஷாக்கை தியாகம் செய்யத் தயாராக இருந்த இடம் என்றும் யூதர்கள் நம்புகின்றனர். பரிசுத்தமான புனிதப் பகுதி (The Holy of the Holy) என்பதே பாறைக் குவிமாடம் (Dome of the Rock) என்று யூதர்கள் நம்புகின்றனர்.

தற்போது மேற்கு சுவரின் அருகில் உள்ள பரிசுத்தமான புனிதப் பகுதியில் (The Holy of the Holy) யூதர்கள் வழிபாடு செய்கின்றனர். தங்கள் பாரம்பரியத்துடன் தொடர்புடையதாக கருதும் யூதர்கள் இங்கு ஆண்டுதோறும் வருகின்றனர் .

ஜெரூசலேமின் நிலைமையில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் வன்முறை மோதல்கள் வெடிக்கின்றன. புராதன நகரமான ஜெரூசலேம் தொடர்பாக பாலத்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே சர்ச்சைகள் தொடர்கதையாக நீள்கின்றன.

ஜெரூசலேமின் நிலைமையில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் வன்முறை மோதல்கள் வெடிக்கின்றன. இதனால் இங்கு நடைபெறும் சிறிய அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிரது.

இந்த புராதான நகரம், யூதர்கள், கிறித்துவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு மதரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு, அரசாங்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

1948இல் இஸ்ரேல் நிறுவப்பட்டதும், அந்நாட்டு நாடாளுமன்றம் நகரின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டது.

1967ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெரூசலேமை கைப்பற்றியது. புராதான நகரம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை.

ஜெரூசலேமின் மீதான இஸ்ரேலின் முழு இறையாண்மையும் ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால், இஸ்ரேலிய தலைவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

பாலத்தீனர்கள் கிழக்கு ஜெரூசலேமை தங்கள் தலைநகர் என்று உரிமை கோருகின்றனர். இஸ்ரேல்-பாலத்தீன சர்ச்சையில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜெரூசலேம் இரு நாடுகளின் தீர்வு என்றும் அறியப்படுகிறது. 1967-க்கு முன்னர் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் சுதந்திர பாலத்தீன நாட்டை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது, அது ஐ.நா. தீர்மானத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெரூசலேம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பாலத்தீன வழித்தோன்றல்கள். இவர்கள் பல நூற்றாண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். நகரத்தின் கிழக்கில் அமைந்துள்ள யூத குடியேற்றப் பகுதி விரிவாக்கப்படுவதும் சர்ச்சைக்கு முக்கிய காரணம். இங்கு விரிவாக்கம் செய்வதும், கட்டுமானங்கள் கட்டப்படுவதும் சர்வதேச சட்டத்திற்கு விரோதமானவை. ஆனால் இஸ்ரேல் அதை மறுக்கின்றது.

ஜெரூசலேமின் நிலைமையில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமாகவே வரக்கூடும் என்று சர்வதேச சமூகம் பல தசாப்தங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Wednesday, 15 April 2020

காலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா?

காலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா?

கடவுளின் அருள் கிடைக்கும் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது.  நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் புரிய வேண்டும் என்றால் அது கடவுளோடு நாம் சேர்ந்து பயணிப்பதால் மட்டுமே முடியும். இந்த உலகத்தையே உருவாக்கி வழிநடத்தும் ஒரு மாபெரும் சக்தி என்றால் அவர் நம் கடவுள் தான். அப்படி சர்வ வல்லமை படைத்த கடவுளிடம் நெருங்குவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நாம் அவரை தினமும் வணங்கலாம், மலர்களால் அர்ச்சிக்கலாம், அவரை நினைத்து மந்திரம் ஓதலாம் இப்படி அவரின் ஆசிர்வாதத்தை பெற தினமும் நாமும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம்.



ஆன்மீகச் சக்தி

உலகத்தையே ஒற்றை சொல்லால் இயக்கி வரும் கடவுளின் முழு அருளையும் சக்தியையும் பெற நாங்கள் சில வழிமுறைகளை இங்கே கூறயுள்ளோம்.

அவரின் இதயத்தில் இடம் பிடிக்க நாமும் தினமும் விரதம் கூட இருந்து தான் பார்க்கிறோம். உண்மையான அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான பக்தர்கள் எப்பொழுதும் அதிர்ஷ்டக்காரர்கள். கண்டிப்பாக அவர்களால் அவரின் அருகில் செல்ல இயலும்.

நமது புராண இந்து மத இலக்கியங்களின் படி இந்த மாதிரியான வழிமுறைகளை நீங்கள் தினமும் மேற்கொண்டு வந்தால் கண்டிப்பாக நீங்கள் கடவுளின் நெருங்கிய நபர் ஆகிவிடுவீர்கள். அவரின் முழு ஆசிர்வாதமும், பாசமும், அன்பும் மகிமையும் உங்களுக்கு எப்பொழுதும் வரும் என்பதில் சிறுதளவும் ஐயமில்லை என்றே கூறலாம்.

சூரிய பகவான்

இந்த உலகத்தில் புழுவிலிருத்து மனிதன் வரை கோடிக்கணக்காண உயிர்கள் வாழ ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி அவைகளுக்கு தேவையான நிலம், நீர், ஆகாயம் என்ற ஐந்து பூ தங்களையும் படைத்த வல்லமை பெற்ற மாபெரும் சக்தி சூரியன். இவர் தன் பக்தர்களின் பரிபூரண அன்பிற்கு பாத்தியப்பட்டவர். தன் பக்தர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பையும் மரியாதையையும் நிலை நிறுத்துபவர். அவர்களின் எதிரிகளை வீழ்த்து வெற்றி காற்றை சுவாசிக்க வைப்பவர். இவரின் அருளால் நீண்ட ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிட்டும். 

தண்ணீர் படைத்தல்

சூரிய பகவான் தான் நாம் இந்த பரந்த உலகத்தை கண் கொண்டு பார்க்க உதவுகிறார். கொஞ்சம் யோசித்து பாருங்கள் சூரியன் உதிக்கவில்லை என்றால் என்னவாகும் இந்த உலகமே இருண்டு விடும். கண்ணிருந்தும் நம்மால் இந்த உலகத்தையே காண இயலாது. அப்பேற்பட்ட பெருமைக்கு பாத்தியப்பட்டவர். எனவே நமது கண்களை தினமும் பாதுகாக்கும் மாபெரும் கடவுள். இவரின் அருளை பெற நாம் தினமும் விரதம், தானம் செய்யக் கூட வேண்டாம். நாம் உயிர் வாழக் காரணமாக இருக்கும் அவருக்கு தினமும் நீரை படைத்தாலே போதும் அவரின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்று அவரின் அருகில் சென்று விடலாம்.


கும்பம்

தினமும் சூரிய உதயத்தின் போது ஒரு காப்பர் பாத்திரத்தில் சிறுதளவு தண்ணீர் வைத்தாலே போதும். அதனுடன் வெல்லம், அரிசி, குங்குமம் மற்றும் சிவப்பு நிற மலர்கள் இவற்றை படைத்து வணங்கி வந்தால் அண்ட சமாச்சாரங்களை ஆளும் அவரின் அருளால் நீடுழி வாழ்வீர்கள்.

பசுவிற்கு உணவு

இவ்பூவுலகில் பிறந்த அனைத்து உயிர்களும் கடவுளின் ஒரு அங்கம் என்றே கூறப்படுகிறது. நம்மிடம் இருப்பதை இல்லாத ஒரு ஏழைக்கு கொடுத்தாலே போதும் அது கடவுளுக்கு செய்யும் சேவையாக கருதப்படுகிறது. இந்து மதத்தை பொருத்த வரை தியாகத்தின் மறு வடிவம் என்றால் அது பசுவின் வாழ்க்கை தான். அதனால் பசுவை கடவுளுக்கு நிகராக வைத்து நாம் வழிபடுகிறோம்.
கிட்டத்தட்ட 36 கோடி தெய்வங்களை பற்றி இந்து புராணம் கூறுகிறது. அந்த 36 கோடி தெய்வங்களும் அடங்கி இருக்கும் ஒரே உயிரினம் பசு தான் என்றும் நமது இந்து மதம் பசுவின் பெருமையை பறைசாற்றுகின்றன. கடவுள் கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தமானது கூட பசு மாடு தான். எனவே அவரின் அருளை பெற நீங்கள் பசுவை வணங்கினாலே போதும்.
அளிக்கும் முறை
பசுவிற்கு உணவளித்தல் என்பது இந்து மதத்தில் பெரிய புண்ணியம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இந்த காலங்களில் மக்கள் இதை தவறாக புரிந்து கொண்டு பழைய உணவுகள், மீந்து போன உணவுகளை படைக்கின்றனர். இதனால் உங்களுக்கு பாவம் தான் வந்து சேருமே தவிர புண்ணியம் கிடைக்காது. ஒரு உயிருக்கு உணவளித்தல் என்பது நாம் சாப்பிடுவதை பகிர்ந்தளித்தல் என்பதை நாம் மறந்து வருகிறோம். எதையாவது தானம் செய்வோம் என்பதை விட ஒரு உயிரின் தேவையை அறிந்து உதவுவோம். அப்போ கண்டிப்பாக கடவுள் வெகு தொலைவில் இருக்க மாட்டார். நம்முடனே பயணிப்பார் என்று இந்து மதம் கூறுகிறது.

பூஜை அறை சுத்தம்

சுத்தம் சுகம் தரும் என்பார்கள். சுத்தம் சுகத்தை மட்டுமல்ல கடவுளின் அருளையும் சேர்த்து தரும் என்பதை மறவாதீர்கள். அதிலும் கடவுள் வசிக்கும் இடமான பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாக பேணுவது மிகவும் முக்கியம். அப்பொழுது தான் உங்கள் வீட்டில் லட்சுமி தேவி குடிகொள்வாள்.
சுத்தம் செய்யும் முறை
உங்கள் பூஜை அறையை முதலில் நன்றாக துடைத்து தூசி இல்லாமல் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுத்தம் செய்ய துடைப்பம் பயன்படுத்தக் கூடாது. வாக்யூம் க்ளீனர் அல்லது ஒரு சுத்தமான துணியை கொண்டு துடைத்து எடுக்கவும்.

லட்சுமி, சரஸ்வதி


கடவுளின் பாதியான சரஸ்வதி தேவி மற்றும் லட்சுமி தேவி நமது உள்ளங்கைகளில் வசிப்பதாக இந்து புராணம் கூறுகிறது. எனவே காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை கண்களில் வைத்து ஒத்திக் கொள்வது கடவுளின் அருளையும் தேவிகளின் அருளையும் கிடைக்கச் செய்யும்.
இந்த முறைகளை தினமும் மேற்கொண்டு அடுத்தவர்களை துன்புறுத்தாமல் எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் இன்புற்று பிணைந்து வாழ்ந்து வந்தால் கண்டிப்பாக தினமும் கடவுள் தன் தோள்களில் நம்மை சுமந்து நடப்பார். நமக்காக ஒரு இடம் கடவுளின் அருகில் இருக்கும்.

குல தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப் பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை. 

 
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத் தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
 
 
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்கமுடியுமா?”
 
 
அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக் கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?
 
ஒரு குடும்பத்தைப் பொருத்த வரையில் அந்த இறைசக்தி குல தெய்வமாக, அவர்களுக்கான ஒருபெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வது கூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப் பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.
 
இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்துபார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப் படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”
 
இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப் பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது  பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.
 
, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒருநாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப்பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒரு நாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.
 
குறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு
 
குலதெய்வம் – குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர்.  தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.    எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.
 
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும்.  மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.  குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.  ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது.  சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.  எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.
 
நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள்.  அவ்வாறு செய்வது தவறில்லை.  அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது.  அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும்.  இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
 
நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.
 
இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார்.  மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள்.  மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு.  அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.
 
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.  அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.  எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.  குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.  யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.
 
குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன.  குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.
 
நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை.  குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.
 
குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.  அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
 
மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும்.  இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.  இவ்வாறு செய்து வரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார்.  யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம்  அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.
 
மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்து வரவும்.  அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும்.  அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
 
 பெண்களும் குல தெய்வங்களும்
 
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்
 
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது.
 
பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும்.புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும்.
 
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
 
குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை . எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாதது என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.
 
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. 
 
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
 
வீடு, வாசல், நிலம், நீச்சு, நகை, நட்டு இவையெல்லாம் காசிருந்தால் வாங்க முடிந்தவை. கல்வி, பிள்ளைப் பேறு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் இவை எல்லாம் அருள் இருந்தால் மட்டுமே பெற முடிந்தவை ஆகும்.
 
இந்த பூமியில் ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்திட இரண்டும்தான் தேவைப்படுகிறது. இதில் பின்னதான அருள் சார்ந்த விஷயம் வந்துவிட்டால், முன்னதாக உள்ள பொருள் சார்ந்த விஷயங்களை நாம் சுலபமாக அடைந்து விடலாம். எனவே, பிரதான தேவையே அருள்தான்!
 
எனவே உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி – இயன்றபோது – (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கை போகும் போக்கை…
 
அடிக்கடி செல்ல முடியாதவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குல தெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்
 
வீட்டில் திருமணத்தடை , சந்தான பிராப்தி இன்மை இவை இருந்தால் குல தெய்வ வழிபாடு சரி செய்து விடும். சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள் - குலதெய்வத்தை வழிபடாத கோளாறுதான் இந்த தடைகள் என்று. ஆனால் அது அப்படியல்ல நமக்கு உள்ள கெட்ட நேரம்தான் இதற்கெல்லாம் காரணம். அதனை சரி செய்ய குலதெய்வம் அருள் புரியும். நமக்கு எதிரான அத்தனை துர் சக்திகளையும் அழிக்கும் வல்லமை உடையது. தன் பிள்ளைகளின் நலனுக்காக அத்தனை தெய்வத்திடமும் வேண்டுகோள் வைக்கும். அதனால்தான் நம் நல்வரவிற்காக வருடந்தோறும் காத்திருக்கும்.
 
நமக்கான தெய்வங்கள்
 

1.வீட்டு தெய்வம்

 
தங்களுக்குள் வழிகாட்டியாய் விளங்கி, வாழ்ந்து மறைந்த முன்னோர்களையோ, கன்னியாக இருந்த நிலையில் வாழ்ந்து மறைந்த பெண்களையோ, தங்களின் வீட்டுத் தெய்வமாக வழிபடும் மரபு காணப்படுகிறது. இது பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். இதனை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், வாழ்வரசி என்று கூறுவதுண்டு.
 

 2. குல தெய்வம்

 
ஒரு குறிப்பிட்ட மூதாதையின் மரபில் தோன்றியதன் வாயிலாக ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ள குழுவே ‘குலம்’ (clan) ஆகும். இரத்த உறவுடைய பங்காளிகள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர். இவர்களுக்குள் திருமண உறவு நடைபெறாது. இவ்வாறு அமையும் ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனித் தெய்வமும் கோயிலும் இருக்கும். இதுவே குலதெய்வம்என்றும் குலதெய்வக் கோயில் என்றும் குறிப்பிடப்படும். ‘குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு’, ‘குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதே’ என்ற பழமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும். பூப்புச் சடங்கு, திருமணம், காதணி விழா அழைப்பிதழ்களில் குலதெய்வத்தின் பெயர் தவறாது இடம் பெறுவதை நீங்கள் காணலாம்.
 

3.  இன தெய்வம்

 
பல குலங்கள் சேர்ந்தது ஓர் இனம், ஒரு சாதி (caste) என்று கூறப்படும். ஒரு குறிப்பிட்ட சாதிக்கென்று உள்ள தெய்வங்கள் இனத்தெய்வங்கள், இனச்சார்புத் தெய்வங்கள், சாதி்த் தெய்வங்கள் என்ற பெயர்களில் வழங்கப் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இனத்தாரின் தனித்துவத்தைக் காட்டும் வகையில் இத்தெய்வங்களின் வழிபாடுகள் சிறப்பாக அமையும். மிகுதியும் பெண் தெய்வங்களே இனத் தெய்வங்களாக இருக்கும். ஒரே மரபு வழிப்பட்ட குலத்தாரை ஒன்றிணைக்கும் சக்தியாக இனத் தெய்வங்கள் விளங்குகின்றன.
 

  4.ஊர் தெய்வம்

 
வீட்டைக் காப்பது வீட்டுத் தெய்வம், குலத்தைக் காப்பது குல தெய்வம், இனத்தாரைக் காப்பது இனத்தெய்வம் என்றாலும் ஓர் ஊரில் வாழும் மக்கள் அனைவரையும் காப்பது ஊர்த்தெய்வமே ஆகும். ஊர்ச் சாமி, ஊர்த் தேவதை, கிராம தேவதை, ஊர்க்காவல் தெய்வம் என்ற பெயர்களில் இவை குறிப்பிடப்படுகின்றன. ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து ஊர்த்தெய்வங்களுக்கு மிக விமரிசையாகப் பெரிய கும்பிடு நடத்துவர்.
தமிழகக் கிராமம் ஒன்றை நீங்கள் வலம் வந்தால் மேற்கூறிய தெய்வங்களை அடையாளம் காணலாம்.
 

  5.வெகுசன தெய்வங்கள்

 
சாதி, மதம், மொழி என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் சென்று வழிபடும் வகையில் அமைந்த சிறுதெய்வங்களே இங்கு வெகுசனத் தெய்வங்கள் என்ற பெயரில் விளக்கப்படுகின்றன. சிறுதெய்வ மரபிற்கும் பெருந்தெய்வ மரபிற்கும் இடைப்பட்ட ஒரு கலப்பு வழிபாட்டு மரபாக இவை வளர்ந்தும் வளர்த்தெடுக்கப் பட்டும் வருகின்றன.
 
 
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. 
 
குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நம் குலம் சிறப்பதோடு, குடும்பமும் மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.
 
அண்ணன்-தம்பி குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும்
 
நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும். பல பிரச்சினைகளில் சிக்கி உழல்பவர்கள், பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும்.
 
குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.
 
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது
 
 
எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்
 

குலதெய்வம்

 
ஒரு தெய்வம் என்பது இன்னொரு தெய்வத்திடம் இருந்து அதாவது பரமாத்மனிடம் இருந்து வந்ததுதான். அதாவது உலகெங்கும் பல்வேறு ரூபங்களில் பல்வேறு தரப்பினர் வணங்கும் தெய்வங்கள் அனைத்துமே பரமாத்மனிடம் இருந்து வந்தவையே ஆகும். முதலில் பரமாத்மன் படைத்தது மூன்றே தெய்வங்களைத்தான். அந்த முதல் நிலையில் உள்ளவர்கள் பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான். அந்த பரமாத்மன் தனக்குத் தானே ஒரு ரூபம் தந்து அதை சிவபெருமானாகினார் என்றும் கூறுவார்கள். காரணம் பரமாத்மன் என்பது உருவமற்ற சிவனும்-பார்வதியும் இணைந்திருந்த சிவசக்தி ஸ்வரூபம் ஆகும். அந்த பரமாத்மனை பெண்ணினமாகவே கூறுவார்கள். காரணம் கருவுற்று குழந்தைகளைப் படைப்பது பெண்கள் என்பதினால் தெய்வங்களைப் படைத்த பெண்ணாக பரமாத்மனை கருதினார்கள்.
 
அப்படி படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் எண்ணவே முடியாத அளவில் கோடிக்கணக்கான உயிரணுக்களை தம்முள் கொண்டு படைக்கப்பட்டவர்கள். ஆகவே முதலில் படைக்கப்பட்ட மூவரும் தம்முள் இருந்த அணுக்களை தனது சார்ப்பிலே பல ரூபங்களில், பலவேறு உருவங்களில், பல்வேறு நிலைகளில் உருவாக்கி ஐந்து நிலை பிரபஞ்சத்திலே அனுப்பினார்கள். அவர்கள் மேலே தேவலோகத்திலே படைக்கப்பட்டு இருந்ததினால் கீழே இருந்த பூமி மற்றும் நான்கு திசைகளில் தம்முடைய அணுக்களை அனுப்பியதினால்தான் ஐந்து நிலை பிரபஞ்சத்திலே அனுப்பினார்கள் என்று கூறுகிறார்கள். இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தமது படைப்புக்குப் பின்னர் பிரும்மன் கோடி கோடியான ஜீவன்களைப் படைக்க, மற்ற இருவரும் அந்த ஜீவன்களைக் காக்கும் மற்றும் அழிக்கும் அவதாரங்களைப் படைத்தார்கள். அவர்களுக்கு பல்வேறு சக்திகளை தந்தார்கள். அவர்களது பணிகளை நிர்ணயித்தார்கள். இதனால்தான் தொண்ணூற்றி ஐந்துக்கும் அதிக சதவிகிதத்திலான தெய்வீக அவதாரங்கள் மற்றும் தேவதைகள் அனைவருமே விஷ்ணு அல்லது சிவபெருமானின் வழிமுறையை சார்ந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்..
 
அதனால் மூவரில் அந்த இருவருக்கு மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் ஐந்து நிலைகளிலும் பல லட்சக்கணக்கான அவதாரங்கள் இருக்க பிரும்மனுக்கு மட்டும் மிக மிகக் குறைந்த அளவிலேயே அவதார ரூப கணங்கள் இருந்தன. அதனால்தான் பிரும்மாவை வேண்டிக் கொண்டு செய்யப்படும் விரதங்களும் நியமங்களும் அபூர்வமாகவே காணப்படுகின்றன. பிரும்மாவினால் படைப்பைக் கொடுக்க முடிந்தது, அவரை வேண்டித் தவம் இருந்தவர்களுக்கு அழிவற்ற நிலை என்ற அளவு அருள் புரிய முடிந்தது. ஆனால் சிவபெருமானைப் போலவும், விஷ்ணுவைப் போலவும் பல்வேறு ரூபங்களை எடுத்து அசுரர்களையும், ராக்ஷசர்களையும், அரக்கர்களையும் நேரடியாக களத்தில் இறங்கி அவர்களை அழித்ததான புராணங்கள் அல்லது வரலாறுகள் எதுவுமே இல்லை. அதன் காரணம் பின்னர் பிரும்மா சாபம் பெற்று பிரபஞ்சத்திலே மக்களால் பூஜிக்கப்படாத கடவுளாக இருப்பார் என்பது முடிவாகி இருந்ததினால்தான் இந்த நிலை இருந்துள்ளது. பிரும்மா கோடி கோடியான ஜீவன்களைப் படைத்தப் பின் விஷ்ணுவும், சிவபெருமானும் அனுப்பிய அவதாரங்களும், ரூபங்களும் கண்களுக்குப் புலப்படாத வகையில் இருந்து கொண்டு பிரும்மனால் படைக்கப்பட்ட உயிரினங்களை காப்பற்றுவதற்காக பிரபஞ்சத்தில் உலவி வரலாயின.
 
இப்படியாக சிவபெருமான் மற்றும் விஷ்ணுவினால் படைக்கப்பட்ட பல அவதாரங்களில் ஒன்றாகவே குல தெய்வமும் அடங்கும். அந்த ஐந்து நிலைகளில் காணப்படும் ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கும். அவ்வளவு ஏன் துர்தேவதைகள் கூட அந்த அவதாரங்களில் உள்ளன. அவையும் சில காரண காரியங்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளன. அது சரி அதென்ன குல தெய்வம் என்ற பெயர் ? ஐந்து நிலைகளில் உள்ள தெய்வீக ரூபங்களில் குல தெய்வம் என்பது என்ன பிரிவு??
 
பிரும்மன் படைத்த உயிரினங்களைக் காக்க விஷ்ணுவும், சிவபெருமானும் பலவேறு அவதாரங்களையும், ரூபங்களையும் படைத்தார்கள் என்று கூறினேன் அல்லவா. அந்த உயிரினங்களைப் படைத்தப் பின் அவற்றை கோடிக்கணக்கான பல்வேறு பிரிவுகளாக பிரித்து உலகின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு குணங்களுடன் படைப்புக் கொடுத்தார். அந்த பல்வேறு குனங்களுடம், பலவேறு இடங்களிலும் பரவிக் கிடந்த படைப்புக்களை பாதுகாக்க, வழிப்படுத்த வேண்டும் என்பதை முன்னரே பரமாத்மன் முடிவு செய்து இருந்ததினால்தான் விஷ்ணு மற்றும் சிவபெருமானின் மூல அவதாரங்கள் மூலம் கோடிக்கணக்கான துணை அவதாரங்களை படைக்க வழி செய்யப்பட்டு இருந்தது. அவர்களால் அப்படியாக படைக்கப்படும் ஒவ்வொரு அவதாரத்துக்கும் சில பொறுப்புக்களும் அதிகாரங்களும் தரப்பட்டது. அவர்கள் பிரும்மாவினால் படைக்கப்பட்டு கோடிக்கணக்கான பிரிவுகளில் இருந்த ஒவ்வொரு பிரிவையும் பாதுகாத்து வழிகாட்டும் பொறுப்புக்களைப் பெற்றது.
 
பிரும்மாவினால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனும் 13 ஜென்ம காலங்களைக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது. படைப்பின் தத்துவப்படி ஒரு ஆத்மாவின் 13 ஜென்ம காலம் எனப்படுவது சுமார் 781 ஆண்டுகளைக் கொண்டதாம். ஒவ்வொரு ஆத்மாவும் படைக்கப்பட்டவுடன் அதை நல்வழிப்படுத்தி பாதுகாக்க எந்தெந்த தேவதை அல்லது தெய்வங்களுக்கு அதிகாரம் தரப்பட்டு இருந்ததோ அந்த தெய்வங்களும், தேவதைகளும் அந்த ஆத்மாக்களை தம்முடன் இணைத்துக் கொண்டு விடுவதினால் அந்த அந்த தெய்வத்தையே காக்கும் கடவுளாக அந்த ஆத்மாவும் ஏற்றுக் கொண்டு விடுகிறது. அதுவே அந்த ஜீவனின் குல தெய்வமாகி விடுகிறது. அந்த ஜீவனை சார்ந்த அனைத்து ஜீவனுக்கும் வம்சாவளியாக அதே தெய்வமும், தேவதையும் குல தெய்வமாகி விடுகிறது. இப்படியாக அமைந்ததே குல தெய்வம் என்பது. அவரவர் தமது குல தெய்வத்தை வணங்க வேண்டும் என்று இதனால்தான் கூறப்படுகிறது....
 
ஒரு ஆத்மாவானது ஜனனம் எடுத்தப் பின் அவர்கள் தங்கி உள்ள இடங்களில் ஏதாவது ஒரு காரணத்தினால் உந்தப்பட்டு தமக்கு பாதுகாப்பைத் தர அவர்கள் மனதில் தோன்றும் தெய்வம், தேவதை அல்லது ஏதாவது ஒரு உருவத்தை மானசீகமாக வணங்கத்துவங்குவார்கள். இந்த செயலும் தெய்வ நிர்ணயித்தின்படியே நடைபெறத் துவங்குகிறது. அதுவே அவர்களது குல தெய்வமாகி விடும். இப்படியாக துவங்கும் அந்த குல தெய்வ வழிபாடு என்பது அவர்கள் குடும்பத்தில் துவங்கி அவர்கள் மூலம் அவர்களது வம்சத்தில் 
 
ஒரு வம்சம் என்பது எத்தனை ஆண்டுகள் அல்லது எத்தனை குடும்பத்தினர்வரை பொருந்தும்? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே ஒரு வம்ச கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் கூட 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். நம்மில் யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சந்ததியினர் யார் என்பது தெரியுமா? யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது. மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.
 
 
எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத கோவில்.!

3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத கோவில்.!

எல்லோரா குகையினுள் உள்ள கைலாசநாதர் கோவிலானது முற்றிலும் மனித கைகளினால் குடைந்து கட்டப்பட்ட கோவில் தானா.? - என்ற சந்தகேத்தின் அடிப்படையிலான கேள்விகளை பல நூற்றாண்டு காலமாக தொல்பொருள் ஆய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுப்பி வருகின்றனர். 



3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத கோவில்.! உலகின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றான கைலாச கோவில் ஆனது, கோபுரத்தின் உச்சியில் தொடங்கி கீழ் நுனியை நோக்கிய - கார்வ்டு-இன் டெக்னீக் - கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. 

அதாவது "கீழிருந்து மேல் நோக்கிய கட்டமைப்பு" என்று ஆரம்பகாலத்தில் இருந்தே மனித இனம் பின்பற்றிய கட்டமைப்பு முறைக்கு முற்றிலும் தலைகீழான முறையில் இக்கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது - இதுதான் இக்கோவில் சார்ந்த அனைத்து புதிர்கள் மற்றும் சந்தேகங்களுக்குமான ஆரம்ப புள்ளி.! 
குகைக்கோயில் குகைக்கோயில் எல்லோரா கைலாசநாதர் கோயில் - பாறையைக் குடைந்து உருவாக்கம் பெற்ற பண்டைய இந்து மத கோயில்களில் ஒன்றாகும். இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள எல்லோராவில் அமைந்துள்ள குகைக்கோயில்களில் ஒன்றான இது - பெரியதொரு மலையைக் குடைந்து அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. 
திராவிட கலைப்பாணிக்குரிய பண்பு திராவிட கலைப்பாணிக்குரிய பண்பு இராஷ்டிரகூட பேரரசின் முதலாம் கிருஷ்ணன் ஆட்சிக் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) கட்டமைக்கப்பட்டுள்ள இக்கோயில், திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளையும், இராஷ்டிரகூட கலைப்பாணியின் அம்சங்களையும், பல்லவ கலை பண்புகளையும் ஒருங்கே கொண்டுள்ள "வித்தியாசமான" கட்டமைப்பாகும். பிரம்மாண்டமான மலைத்தளி பிரம்மாண்டமான மலைத்தளி தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்து மலைத்தளிகளைப் போலில்லாமல் இதுவொரு முழுமையான ஆலயம் ஒன்றின் அம்சங்களைக் கொண்ட பிரம்மாண்டமான மலைத்தளியாக காட்சியளிக்கின்றது. 

அந்த பிரம்மாண்டத்தின் பின்னால் இந்த எல்லோரா கைலாசநாதர் கோவிலானது பல ரகசியங்களையும் புதைத்து வைத்துள்ளது. மேம்பட்ட மற்றும் அதிநவீனதத்தும் மேம்பட்ட மற்றும் அதிநவீனதத்தும் அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய நாகரீகங்களானது, மிகவும் மேம்பட்ட மற்றும் அதிநவீனதத்துவமாக இருந்துள்ளதாக நம்பப்படுகிறது. அதை சுட்டிக்காட்டும் பண்டைய தளங்களில் மிகவும் பலமான ஆதாரமாக - இக்கோவில் திகழ்கிறது. வெறும் 18 ஆண்டுகளில் வெறும் 18 ஆண்டுகளில் எட்டாம் நூற்றாண்டிலேயே எந்த விதமான 'நவீன' தொழில்நுட்ப பயன்படுமின்றி மலைப்பாறைகள் வெட்டி குடையப்பட்டது எப்படி.? 


இந்தியாவில் மட்டுமின்றி மற்றும் வெளிநாடுகளில் உள்ள வரலாற்றாசிரியர்கள் உட்பட 400,000 டன் எடை அளவிலான பாறைகளை அகற்றி, வெறும் 18 ஆண்டுகளில் இம்மாதிரியான கோவிலை கட்டிமுடிப்பது மனிதர்களால் முடியாத காரியமென்று கூறுகின்றனர். கோவிலை இடித்து நொறுக்க கட்டளையிட்டுள்ளார் கோவிலை இடித்து நொறுக்க கட்டளையிட்டுள்ளார் சுற்றியுள்ள எல்லோரா குகைப்பாறையில் தோண்டிய 16-வது கோவிலான தான் கைலாச நாதர் கோவில் என்பதும், அங்கு மொத்தம் 34 குகைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றின் படி, முகலாய பேரரசரான அவுரங்கசீப், கைலாச கோவிலை இடித்து நொறுக்க கட்டளையிட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கும் மேலாக 3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடிப்பு வேலையை நிகழ்த்த அவர் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அனுப்பியுள்ளார். ஆனால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இரவும் பகலும் வேலை செய்தும் கூட கைலாச கோவிலின் சில சிலைகளை மட்டுமே அவர்களால் சிதறடிக்பட்டுள்ளது என்கிறது வரலாற்று குறிப்புகள். 


 இது சாத்தியமில்லை 

தொல்பொருளியல் நிபுணர்களின் கருத்துக்களை பொறுத்தமட்டில், தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்ப முறைகள் அந்த காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தியத்தினால் உருவானதே இக்கோவில், இல்லையெனில் இது சாத்தியமில்லை என்று கூறுகின்றனர். 

ஒரே நேரத்தில் தோண்டபடவில்லை.! 

எல்லோரா குகைகள் அனைத்துமே பண்டைய செங்குத்து குழி முறையை பயன்படுத்தி தான் உருவாக்கம் பெற்றதா.? அப்படியானால் சுத்தியல், உளிகள், மற்றும் குத்துக்கோடரி மட்டுமே பயன்படுத்தப்பட்டு இவைகள் உருவாகினவா.? சாத்தியமேயில்லை. இந்திய வரலாற்றாசிரியர், தொல்பொருள் மற்றும் 'எல்லோரா' புத்தகத்தின் ஆசிரியருமான எம்.கே. தவலிகர் கருத்தின் படி "கைலாசநாதர் கோவில் சன்னதிகள் மற்றும் கைலாச கோவில் ஆனது ஒரே நேரத்தில் தோண்டபடவில்லை. வெவ்வேறு காலகட்டங்களுக்கு சொந்தமான பல கட்டுமான பணிகளின் விளைவாகும்"


 எட்டாம் நூற்றாண்டு பிராமி சித்திர எழுத்துக்கள்

 "இதற்கு ஆதாரமாய் கைலாச நாதர் கோவிலின் மேற்கு சுவரில் ஒரு துளை ஜன்னலில் எட்டாம் நூற்றாண்டு பிராமி சித்திர வடிவிலான சமஸ்கிருத எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன, இதே போல சில தூண்களில் ஒன்பதாம் நூற்றாண்டு எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன" என்கிறார்.

சிக்கலான மற்றும் அசாதாரண கட்டமைப்பு

 வெவ்வேறு காலகட்டத்தில் கட்டப்பட்டிருந்தாலும் கூட நிச்சயமாக இந்த கண்கவர் குகைகள் சாதாரண சுத்தியல் மற்றும் உளிகளால் மட்டுமே உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை என்பதும் தான் இங்கு சர்ச்சை. நாகரீ வரலாற்றின் மிகவும் சிக்கலான மற்றும் அசாதாரண கட்டமைப்புகளில் ஒன்றான இந்த கைலாசநாதர் கோவில் கட்டப்பட்ட விளக்கம் தொல்பொருள் ஆய்வாளர்கள் மத்தியில் நேற்றும், இன்றும், ஏன் நாளையும் கூட ஒரு பரபரப்பான தேடல் தான்.