Monday 8 December 2014

ஆன்டிரய்டு ஸ்மார்ட்போனில் யூட்யூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி

ஸ்மார்ட்போனில் பல அப்ளிகேஷன்களை பயன்படுத்துவீங்க, எல்லா அப்ளிகேஷனும் உங்களுக்கு உதவியாகவும் இருக்கும், சிலது விளையாட்டாகவும் இருக்கும், இருந்தும் படங்களை டவுன்லோடு செய்ய முடியுமா, யூட்யூபில் இருந்து வீடியோக்களை டவுன்லோடு செய்ய தெரியுமா. ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் யூட்யூப் வீடியோஸ் பாக்குறீங்களா, அந்த வீடியோக்களை ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்வது எப்படினு இங்க பாருங்க

ட்யூப்மேட்

 

யூட்யூபில் இருந்து அதிகாரப்பூர்வமாக வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியாது அதனால் வெளியில் இருந்து ட்யூப்மேட் என்ற அப்ளிகேஷனை டவுன்லோடு செய்யுங்கள்

இன்ஸ்டால் 

 

ட்யூப்மேட் வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்து பின் அதை ஓபன் செய்தால் யூட்யூப் ஸ்கிரீன் தெரியும், அங்கு நீங்க டவுன்லோடு செய்ய வேண்டிய வீடியோவை தேடுங்கள்

பட்டன்

 

தேவையான வீயோவை தேடிய பின் மேல் இருக்கும் பச்சை வண்ன பட்டனை அழுத்துங்கள்

பார்மேட்

இப்போழுது உங்களுக்கு ஏற்ற பார்மேட்டை தேர்வு செய்யுங்கள்


வீடியோ

டவுன்லோடு முடிந்த பின் அந்த வீடியோவை வீடியோஸ் போல்டரில் பார்க்க முடியும்



Wednesday 3 December 2014

வைபர் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்

மெசேஜிங் அப்ளிகேஷனாக 2010 ஆம் ஆண்டு வெளியான வைபர் தற்சமயம் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷனாக உருவெடுத்துள்ளது. மற்ற மெசேஜிங் அப்ளிகேஷன்களை விட அதிகமாக ஸ்டிக்கர் மற்றும் எமோட்டிகான் இருக்கின்றது. தற்சமயம் 193 நாடுகளில் சுமார் 200 மில்லியன் வைபர் பயனாளிகள் இருக்கின்றனர்.
உங்க ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் புதுசா வைபர் பயன்படுத்த போறீங்களா அப்ப வைபர் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய சில அம்சங்களை அடுத்து பாருங்க
                                          
ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் 
வைபரில் நோட்டிபிகேஷன்கள் இருந்தாலும் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்கள் ஒருத்தரிடம் இருந்து வரும் பல நோட்டிபிகேஷன்களை ஒரே நோட்டிபிகேஷனாக காட்டும்.
ஸ்விட்ச் 
ஒரே சமயத்தில் பல விவாதங்கல் செய்பவர்கள் அடிக்கடி சாட் ரூம்களை மாற்ற வேண்டுமா, அப்ப முந்தையா சாட் ரூம் கான்வர்சேஷன் சென்று வலது புறமாக ஸ்வைப் செய்து சுலபமாக அடுத்த சாட் ரூம் செல்லலாம்.
ப்ளாக்
 மற்றும் அன்ப்ளாக் வைபரில் இருக்கும் யாராவது உங்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டாம் என்று நினைத்தால் அவராகளை நீங்க ப்ளாக் செய்யலாம்
சீன் மற்றும் ஆன்லைன் ஸ்டேட்டஸ் சில சமயங்களில் சீன் ஸ்டேட்டஸை மறைக்கும் ஆப்ஷனும் உள்ளது.
நோட்டிபிகேஷன்
 வைபர் நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்ய வைபர் செட்டிங்ஸ் சென்று நோட்டிபிகேஷன்களை ஆப் செய்து கொள்ளலாம்.
லைட் ஸ்கிரீன்
 ஒவ்வொரு வைபர் நோட்டிபிகேஷனுக்கும் உங்க ஸ்கிரீன் லைட் அப் ஆகுதா, அதை ஆஃப் செய்ய செட்டிங்ஸ் சென்று நோட்டிபிகேஷனில் லைட் ஸ்கிரீன் ஆப்ஷனை டிஸ் ஏபிள் செய்து விடுங்கள்.
டெலீட் மெசேஜ் 
சாட் ரூமில் உங்க நண்பர் அனுப்பிய மெசேஜ் பிடிக்கவில்லை என்றால் அதை டெலீட் செய்யலாம்.
வைபை ஸ்லீப்
 வைபர் அப்ளிகேஷன் நீங்க எப்பவும் ஆன்லைனில் இருக்க தானாகவே உங்க வைபை ஆக்டிவ் மோடில் தான் வைத்திருக்கும், இதை மாற்ற செட்டிங்ஸ் சென்று வைபை ஸ்லீப் பாலிஸியில் யூஸ் டிவைஸ் செட்டிங்ஸை தேர்வு செய்யுங்கள்.
டூடுள் 
உங்க ஆன்டிராயிடில் இருக்கும் எந்த படத்தையும் டூடுளாக மாற்ற முடியும்.
கான்வெர்சேஷன் கேலரி 
வைபரில் நீங்க நிறைய போட்டோ மற்றும் வீடியோக்களை பகிரந்திருந்து அதை மீண்டும் பார்க்க முடியும், இதற்கு கான்வெர்சேஷன் கேலரியை பயன்படுத்தலாம்.

ஆன்டிராய்டு லாலிபாப் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்.

ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் ஓஎஸ் நெக்சஸ் 9 பெற்றுள்ளது. நீங்க உங்க ஆன்டிராய்டை லாலிபாப்க்கு அப்டேட் செய்தாச்சா, இல்லை இனிமேல் தான் செய்ய போறீங்களா, அப்ப இந்த 10 தந்திரங்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். லாலிபாப் ஓஎஸ் வடிவமைப்பு மற்றும் செயல்பாடு என அனைத்தும் பார்க்க புதுமையாக உள்ளது. அடுத்து லாலிபாப் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்களை பாருங்க..
                               
ஈஸ்டர் எஃகு கேம்
 உங்க போனில் இருக்கும் லாலிபாப் படத்தை தொடர்ந்து அழுத்தினால் சிறிய ஆன்டிராய்டு கேம் லோட் ஆகும்
சர்ச் செட்டிங்ஸ் 
ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் அதிகமாக அதன் செட்டிங்ஸ் மெனுவும் மாறி கொண்டே வருகின்றது, தேடலுக்கு புகழ் பெற்ற கூகுள் நிறுவனம் லாலிபாப் செட்டிங்ஸ் மெனுவை எளிதாக்கியுள்ளது.
நோட்டிபிகேஷன் பார் 
லாலிபாப் ஓஎஸ் இல் நோட்டிபிகேஷன் பார் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முரை ஸ்வைப் செய்தால் நோட்டிபிகேஷன்களை பெறலாம்.
சென்சிட்டிவ் நோட்டிபிகேஷன்
 லாக் ஸ்கிரீனின் மத்தியில் நோட்டிபிகேஷன்கள் தெரியும், உங்களுக்கு இது பிடிக்கவில்லை என்றால் செட்டிங்ஸ் - சவுன்டு நோட்டிபிகேஷன் சென்று சென்சிட்டிவ் நோட்டிபிகேஷன்களை தேர்வு செய்ய முடியும்.
ப்ளாஷ் லைட் 
மற்ற ஆன்டிராய்டுகளை போன்று இல்லாமல் லாலிபாப் ஓஎஸ் உங்களுக்கு நோட்டிபிகேஷன் பாரில் ப்ளாஷ்லைட் வசதி கொடுத்துள்ளது.
டேட்டா யூசேஜ்
 நீங்க உங்க போனில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தியிருக்கீங்கனு நோட்டிபிகேஷன் பாரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
ஸ்கிரீன் பின்னிங்
 ஆன்டிராய்டில் கெஸ்ட்மோட் ஏற்கனவே இருக்கின்றது ஆனால் இதை செயல்படுத்த நேரம் ஆகும் அதனால் லாலிபாப்பில் நீங்க ஸ்கிரீன் பின்னிங் செய்ய முடியும், இதற்கு உங்க போனின் செட்டிங்ஸ் - செக்யூரிட்டி - ஸ்கிரீன் பின்னிங் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்
டேப் அன்டு கோ 
புதுசா ஆன்டிராய்டு லாலிபாப் பயன்படுத்தினால் டேப் அன்டு கோ ஆப்ஷன் ஏற்கனவே இருக்கும் கூகுள் பயனாளிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த ஆப்ஷனை பயன்படுத்தி ஆன்டிராய்டு 4.1 ஸ்மார்ட்போனுடன் என்எப்சி மூலம் இணைக்க முடியும் அதன் பின் உங்க டேட்டாக்களை ப்ளூடூத் மூலம் அனுப்ப முடியும்.
ப்ரியாரிட்டி மோட்
 இது கூகுளின் டூ நாட் டிஸ்டர்ப் மோட், இதை செயல்படுத்த வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க பயன்படுத்தும் பட்டன்களை பயன்டுத்தலாம்.
டேப் டூ வேக் 
பவர் பட்டன் இல்லாமல் ஸ்கிரீனை இரு முறை தட்டினால் அது ஸ்விட்ச் ஆன் ஆகும்.