Thursday 7 September 2017

Nikola Tesla நிக்கோலா டெஸ்லா : 1899-ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவில் என்ன நடந்தது..?

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் நிக்கோலா டெஸ்லா செய்த புரட்சிகரமான பங்களிப்பை இன்றுவரை உலகம் போற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப் பொறியாளரும், மின்பொறியாளரும் ஆன டெஸ்லா, இரண்டாம் தொழிற்புரட்சி உருவாக முக்கிய பங்கு வகித்தார்.







தற்கால மாறுதிசை மின்னோட்ட மின்வலு முறைமைகள் பலவும் டெஸ்லாவின் கோட்பாடுகளை அடிப்படையாய் கொண்டே வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம். அம்மாதிரியான டெஸ்லாவின் முற்போக்கு ஆய்வுகளில் ஒன்றான வயர்லெஸ் ஆற்றல் ஒலிபரப்பு (wireless power transmission) சோதனை, 1899-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது..!

 
 1899-ஆம் ஆண்டு, கொலராடோவில் உள்ள தனது கொலராடோ ஸ்பிரிங்ஸ் இல்லத்தில் டெஸ்லா வயர்லெஸ் ஆற்றல் ஒலிபரப்பு சார்ந்த அவரது கருத்துப்படிவத்தை முயற்சிக்கும் பொருட்டு ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். 
 
 
அந்த ஆய்வை அங்கு தான் நடத்தி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் டெஸ்லாவிற்கு கிடையாது என்பதும், இருப்பினும் அவர் அந்த ஆய்வை அங்கு அவர் நிகழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 1899-ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவில் என்ன நடந்தது என்பதை பற்றி 1923-ஆம் ஆண்டு ஒரு நிருபரிடம் டெஸ்லா கூற நேர்ந்தது. 
 
 
"நான் கொலராடோவில், செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை இருப்பை உணர்த்தும் அசாதாரணமான ஆதாரங்கள் சார்ந்த ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் மிகவும் உணர்ச்சிமிக்க வயர்லெஸ் ரிசீவர் இருந்தது" 
 
 
 
 
"அப்போது 1-2-3-4 என்ற பொருள் விளக்கம் கொண்ட சமிக்ஞைகள் எனக்கு கிடைத்து, அந்த சமிக்ஞையானது செவ்வாய் கிரக வாசிகளிடம் இருந்து வந்தது என்று நான் நம்புகிறேன். ஏனெனில், எண்கள் என்பது உலகளாவிய ஒன்று" என்று டெஸ்லா கூறியுள்ளார். 
 
 இந்த தகவலை அளித்ததின் மூலம் டெஸ்லா அவரின் சகாக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார், சில வருடங்களுக்கு பின்பு டெஸ்லா, ஏலியன் தொடர்பு கொண்டார் என்பதற்கு எதிரான கோட்பாடுகளை விஞ்ஞானிகள் வகுத்தன. 
 
அதாவது குறிப்பிட்ட நாளில் ஜுப்பிட்டர் கிரகத்தில் ஏற்பட்ட புயலின் ரேடியோ அலைகளைத்தான் ஏலியன் தொடர்பு என்று டெஸ்லா தவறாக அர்த்தம் கொண்டுள்ளார் என்கிறது ஒரு கோட்பாடு. 
 
ஆனால், பின்னர் மற்றொரு கோட்பாடு எழுந்தது. டெஸ்லா ஏலியன் தொடர்பு கொண்டது நிஜம் தான். அதாவது அவர் பூமி கிரகத்தை மர்மமான முறையில் சுற்றித்திர்யும் பிளாக் நைட் சாட்டிலைட்டிடம் இருந்து தகவல் பெற்றார் என்கிறது அந்த கோட்பாடு. 
 
பிளாக் நைட் செயற்கைக்கோள் என்பது பூமியை சுற்றித்திரியும் ஒரு பண்டைய அன்னிய கட்டமைப்பு என்று நம்பப்படும் ஒரு பறக்கும் பொருளாகும், அதனை தான் டெஸ்லா தொடர்பு கொண்டுள்ளார் என்றும் நம்பப்படுகிறது.