Wednesday, 15 April 2020

காலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா?

காலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா?

கடவுளின் அருள் கிடைக்கும் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது.  நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் புரிய வேண்டும் என்றால் அது கடவுளோடு நாம் சேர்ந்து பயணிப்பதால் மட்டுமே முடியும். இந்த உலகத்தையே உருவாக்கி வழிநடத்தும் ஒரு மாபெரும் சக்தி என்றால் அவர் நம் கடவுள் தான். அப்படி சர்வ வல்லமை படைத்த கடவுளிடம் நெருங்குவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நாம் அவரை தினமும் வணங்கலாம், மலர்களால் அர்ச்சிக்கலாம், அவரை நினைத்து மந்திரம் ஓதலாம் இப்படி அவரின் ஆசிர்வாதத்தை பெற தினமும் நாமும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம்.



ஆன்மீகச் சக்தி

உலகத்தையே ஒற்றை சொல்லால் இயக்கி வரும் கடவுளின் முழு அருளையும் சக்தியையும் பெற நாங்கள் சில வழிமுறைகளை இங்கே கூறயுள்ளோம்.

அவரின் இதயத்தில் இடம் பிடிக்க நாமும் தினமும் விரதம் கூட இருந்து தான் பார்க்கிறோம். உண்மையான அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான பக்தர்கள் எப்பொழுதும் அதிர்ஷ்டக்காரர்கள். கண்டிப்பாக அவர்களால் அவரின் அருகில் செல்ல இயலும்.

நமது புராண இந்து மத இலக்கியங்களின் படி இந்த மாதிரியான வழிமுறைகளை நீங்கள் தினமும் மேற்கொண்டு வந்தால் கண்டிப்பாக நீங்கள் கடவுளின் நெருங்கிய நபர் ஆகிவிடுவீர்கள். அவரின் முழு ஆசிர்வாதமும், பாசமும், அன்பும் மகிமையும் உங்களுக்கு எப்பொழுதும் வரும் என்பதில் சிறுதளவும் ஐயமில்லை என்றே கூறலாம்.

சூரிய பகவான்

இந்த உலகத்தில் புழுவிலிருத்து மனிதன் வரை கோடிக்கணக்காண உயிர்கள் வாழ ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி அவைகளுக்கு தேவையான நிலம், நீர், ஆகாயம் என்ற ஐந்து பூ தங்களையும் படைத்த வல்லமை பெற்ற மாபெரும் சக்தி சூரியன். இவர் தன் பக்தர்களின் பரிபூரண அன்பிற்கு பாத்தியப்பட்டவர். தன் பக்தர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பையும் மரியாதையையும் நிலை நிறுத்துபவர். அவர்களின் எதிரிகளை வீழ்த்து வெற்றி காற்றை சுவாசிக்க வைப்பவர். இவரின் அருளால் நீண்ட ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிட்டும். 

தண்ணீர் படைத்தல்

சூரிய பகவான் தான் நாம் இந்த பரந்த உலகத்தை கண் கொண்டு பார்க்க உதவுகிறார். கொஞ்சம் யோசித்து பாருங்கள் சூரியன் உதிக்கவில்லை என்றால் என்னவாகும் இந்த உலகமே இருண்டு விடும். கண்ணிருந்தும் நம்மால் இந்த உலகத்தையே காண இயலாது. அப்பேற்பட்ட பெருமைக்கு பாத்தியப்பட்டவர். எனவே நமது கண்களை தினமும் பாதுகாக்கும் மாபெரும் கடவுள். இவரின் அருளை பெற நாம் தினமும் விரதம், தானம் செய்யக் கூட வேண்டாம். நாம் உயிர் வாழக் காரணமாக இருக்கும் அவருக்கு தினமும் நீரை படைத்தாலே போதும் அவரின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்று அவரின் அருகில் சென்று விடலாம்.


கும்பம்

தினமும் சூரிய உதயத்தின் போது ஒரு காப்பர் பாத்திரத்தில் சிறுதளவு தண்ணீர் வைத்தாலே போதும். அதனுடன் வெல்லம், அரிசி, குங்குமம் மற்றும் சிவப்பு நிற மலர்கள் இவற்றை படைத்து வணங்கி வந்தால் அண்ட சமாச்சாரங்களை ஆளும் அவரின் அருளால் நீடுழி வாழ்வீர்கள்.

பசுவிற்கு உணவு

இவ்பூவுலகில் பிறந்த அனைத்து உயிர்களும் கடவுளின் ஒரு அங்கம் என்றே கூறப்படுகிறது. நம்மிடம் இருப்பதை இல்லாத ஒரு ஏழைக்கு கொடுத்தாலே போதும் அது கடவுளுக்கு செய்யும் சேவையாக கருதப்படுகிறது. இந்து மதத்தை பொருத்த வரை தியாகத்தின் மறு வடிவம் என்றால் அது பசுவின் வாழ்க்கை தான். அதனால் பசுவை கடவுளுக்கு நிகராக வைத்து நாம் வழிபடுகிறோம்.
கிட்டத்தட்ட 36 கோடி தெய்வங்களை பற்றி இந்து புராணம் கூறுகிறது. அந்த 36 கோடி தெய்வங்களும் அடங்கி இருக்கும் ஒரே உயிரினம் பசு தான் என்றும் நமது இந்து மதம் பசுவின் பெருமையை பறைசாற்றுகின்றன. கடவுள் கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தமானது கூட பசு மாடு தான். எனவே அவரின் அருளை பெற நீங்கள் பசுவை வணங்கினாலே போதும்.
அளிக்கும் முறை
பசுவிற்கு உணவளித்தல் என்பது இந்து மதத்தில் பெரிய புண்ணியம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இந்த காலங்களில் மக்கள் இதை தவறாக புரிந்து கொண்டு பழைய உணவுகள், மீந்து போன உணவுகளை படைக்கின்றனர். இதனால் உங்களுக்கு பாவம் தான் வந்து சேருமே தவிர புண்ணியம் கிடைக்காது. ஒரு உயிருக்கு உணவளித்தல் என்பது நாம் சாப்பிடுவதை பகிர்ந்தளித்தல் என்பதை நாம் மறந்து வருகிறோம். எதையாவது தானம் செய்வோம் என்பதை விட ஒரு உயிரின் தேவையை அறிந்து உதவுவோம். அப்போ கண்டிப்பாக கடவுள் வெகு தொலைவில் இருக்க மாட்டார். நம்முடனே பயணிப்பார் என்று இந்து மதம் கூறுகிறது.

பூஜை அறை சுத்தம்

சுத்தம் சுகம் தரும் என்பார்கள். சுத்தம் சுகத்தை மட்டுமல்ல கடவுளின் அருளையும் சேர்த்து தரும் என்பதை மறவாதீர்கள். அதிலும் கடவுள் வசிக்கும் இடமான பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாக பேணுவது மிகவும் முக்கியம். அப்பொழுது தான் உங்கள் வீட்டில் லட்சுமி தேவி குடிகொள்வாள்.
சுத்தம் செய்யும் முறை
உங்கள் பூஜை அறையை முதலில் நன்றாக துடைத்து தூசி இல்லாமல் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுத்தம் செய்ய துடைப்பம் பயன்படுத்தக் கூடாது. வாக்யூம் க்ளீனர் அல்லது ஒரு சுத்தமான துணியை கொண்டு துடைத்து எடுக்கவும்.

லட்சுமி, சரஸ்வதி


கடவுளின் பாதியான சரஸ்வதி தேவி மற்றும் லட்சுமி தேவி நமது உள்ளங்கைகளில் வசிப்பதாக இந்து புராணம் கூறுகிறது. எனவே காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை கண்களில் வைத்து ஒத்திக் கொள்வது கடவுளின் அருளையும் தேவிகளின் அருளையும் கிடைக்கச் செய்யும்.
இந்த முறைகளை தினமும் மேற்கொண்டு அடுத்தவர்களை துன்புறுத்தாமல் எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் இன்புற்று பிணைந்து வாழ்ந்து வந்தால் கண்டிப்பாக தினமும் கடவுள் தன் தோள்களில் நம்மை சுமந்து நடப்பார். நமக்காக ஒரு இடம் கடவுளின் அருகில் இருக்கும்.

No comments:

Post a Comment