Wednesday, 15 April 2020

ஆண்களை அடிமைப்படுத்தியிருந்த அல்லிராஜ்ஜியம் பற்றி உங்களுக்கு தெரியுமா!!

ஆண்களை அடிமைப்படுத்தியிருந்த அல்லிராஜ்ஜியம் பற்றி உங்களுக்கு தெரியுமா!!

ஒரு காலத்தில் இன்றைய கொள்ளேகாலம் தாலுக்காவுக்கும், பவானி தாலுக்காவுக்கும் எல்லையில் உள்ள பாலாற்றங்கரையில் உள்ள நல்லூர் கோட்டை என்ற பகுதியை கொடிகட்டி ஆண்டனர் ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினர். இவர்கள் சாகா வரம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்களுக்கு பல்வரிசை என்றொரு மகள் இருந்தால். மிகவும் அழகானவள், அவளது நளினதிற்கும், கவர்ச்சிக்கும் மயங்காத ஆண்களே கிடையாது என்று கூறுவார்களாம். அப்பேர்ப்பட்ட அழகிக்கு திருமணம் செய்வதென்றால் லேசுப்பட்டக் காரியமா என்ன.
பல்வரிசையை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றால் ஆரவல்லி, சூரவல்லி வைக்கும் போட்டிகளில் வெற்றிப் பெற வேண்டும். இரும்பு குண்டை பொடியாக்க வேண்டும், இரும்பு கம்பியை ஒரே அடியில் மூன்றாக உடைக்க வேண்டும்,சேவல் கோழியோடு சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும் என்ற கடினமான போட்டிகளை வைத்து அதில் வெற்றி பெறுபவர் தான் பல்வரிசையின் கரம்பிடிக்க முடியும்.

இந்த போட்டியில் கலந்துக் கொண்டு பாதியிலேயே பின் வாங்கினாலோ அல்லது தோல்வியுற்றாலோ அடிமைகளாக சிறையில் அடைக்கப்படுவார்கள். இதன் காரணத்தினால் தான் இவர்களது இராஜ்ஜியம் அல்லி ராஜ்ஜியம் என்று கூறப்பட்டது. இவர்களுக்கு முடிவு கட்டவும் ஒரு நேரம் வந்தது, ஒரு வீரன் வந்தான்…..

7 சகோதரிகள்

ஆரவல்லி, சூரவல்லி இருவர் மட்டும் அல்ல, மொத்தம் ஏழு பேர் கொண்டவர்கள் இந்த சகோதரிகள். இவர்களில் ஆரவல்லி, சூரவல்லி பெயர்கள் மட்டுமே பல கல்வெட்டுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சூனியம் செய்பவர்கள்

ஆரவல்லயும், சூரவல்லியும் லேசுப்பட்ட ஆட்கள் இல்லை. சாகாவரம் பெற்றது மட்டுமில்லாது, மாய தந்திரங்கள், சூனியம், மாந்திரீகம் போன்ற செயல்களும் நன்கு அறிந்தவர்கள்.
பல இளவரசர்கள் அடிமையாகினர்

அழகு பதுமையான பல்வரிசையை திருமணம் செய்யும் ஆசையில் வந்த பல இளவரசர்கள் ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினரிடம் அடிமைகள் ஆயினர்.

பீமனின் வருகை

ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகளின் அட்டகாசத்தை கேள்விப்பட்ட பீமன், இவர்களது அள்ளி ராஜ்ஜியத்திற்கு முடிவுக்கட்ட கிளம்பி வந்தான்.

பீமனும் தோல்வி

ஆரவல்லி, சூரவல்லி வைத்த மூன்று போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிக்கண்ட பீமன். ஒரே அடியில் மூன்றாக உடைக்க வேண்டிய கம்பியை இரண்டாக தான் உடைக்க முடிந்தது. அதனால், பீமனும் தோல்வியுற்றான் என்று கூறி சிறையில் அடைத்தனர் ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினர்.

பெருச்சாளியாக மகாவிஷ்ணு

சிறையில் இருந்த பீமனைக் காப்பாற்ற பெருச்சாளியாக உருமாறி மகாவிஷ்ணு சென்றார். அப்போது தர்மர் குறிக்கிட்டு, முடிந்தால் போட்டியில் மோதி ஜெயித்து வாருங்கள் என்று கூறி தடுத்துவிட்டார். மகாவிஷ்ணுவும் பீமனை சிறையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார்.

வான சாஸ்திரம்

மகாவிஷ்ணுவான கண்ணபிரான், சகாதேவனை கூப்பிட்டு சாஸ்திரத்தை எடுத்து பார்க்க சொன்னார் , அப்போது பல்வரிசையின் கணவன் அல்லி முத்து என்று இருந்தது . அல்லிமுத்து அவர்களது தங்கை சங்கவதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லிமுத்துவின் வருகை

பின் கண்ணபிரான் கூறியதற்கு இணங்கி அல்லிமுத்து போட்டிக்கு சென்றான். அங்கு பல்வரிசையின் அழகை கண்டு மயங்கிப் போனான். பின் பீமன் மற்றும் கண்ணன் முன்பே கூறிய அறிவுரைப்படி போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றியும் பெற்றான்.

ஆரவல்லி, சூரவல்லி சூழ்ச்சி

வெற்றிப் பெற்ற அல்லிமுத்துவை தங்களது ராஜ்ஜியத்திலேயே இருக்கும் படி ஆரவல்லி கூறினால். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து கூறியப்படி பல்வரிசையை மனம் முடித்து தன்னுடன் அனுப்புமாறு கூறினான் அல்லிமுத்து. இதனால், அல்லிமுத்துவை கொல்ல சூழ்ச்சி செய்தனர் ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினர்.

உணவில் விஷம்

இதன்படி பல்வரிசைக்கே தெரியாமல், உணவில் விஷத்தை கலந்து ஊருக்கு செல்லும் வழியில் அல்லிமுத்துவை கொன்றனர்.

அபிமன்யு உயிர் மீட்டெடுத்தல்

வானுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டெடுத்து வந்த அபிமன்யு. அல்லிமுத்துவிடம் நடந்ததை கூறினான். அதன் பின் கடும் கோபம் கொண்ட அல்லிமுத்து, அல்லி ராஜ்ஜியத்தை அழிக்க போர் எடுத்து சென்றான்

வனபத்ரகாளி அம்மன் அருள்புரிதல்

வழியில், வனபத்ரகாளி அம்மன் அருள் பெற்று, அல்லி ராஜ்ஜியத்தை தோற்கடிக்க முற்பட்டான் அல்லிமுத்து. உடன் அர்ஜுனனும் சென்றதாக கூறப்படுகிறது.

பயந்து ஓடிய அல்லி சகோதரிகள்

அர்ஜுனன் வருவதை கண்டு பயந்து கேரளத்திற்கு அல்லி சகோதரிகள் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பின் அல்லிமுத்து, அடிமைகளாக இருந்த அரசர்களை விடிவித்து ஆண்களை காப்பாற்றினான்.

மாந்திரீகம்

கேரளாவில் மாந்திரீகம் வளர்ந்ததற்கு காரணம் இவர்கள் தான் என்று இந்த கதையில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment