Monday 17 October 2016

அனைத்து ஐபோன் புகைப்படங்களிலும் 9:41 AM எனும் நேரம் குறிக்கப்படுவது ஏன்?

இன்றைய ஸ்மார்ட்போன்களின் ராஜாவாக என்ன தான் ஆண்ட்ராய்டு இருந்தாலும், அன்று தொடக்கம் இன்று வரை ஒரு தனித்துவமான ஸ்மார்ட் போனாக ஐபோன் இருக்கிறதென்றால் அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
ஐபோன் இரகசியம்
ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை ஐபோன், ஐபேட் சாதனங்களின் உத்தியோகபூர்வ புகைப்படத்தில் 9:41 AM வைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளீர்களா?

12:00, 11:11, 10:10 என்பது போன்ற பார்க்கும்போது அழகிய தோற்றத்தை தரக்கூடிய ஒரு நேரத்தை வைக்காமல் எப்பொழுதும் 9:41 AM நேரத்தை ஆப்பிள் நிறுவனம் ஏன் வைக்கிறது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?
அது ஏனோ தானோ என்று வைக்கப்பட்ட நேரம் அல்ல மாறாக ஸ்டீவ் ஜாப்ஸ் ஆல் முதன் முதலாக உலகுக்கு ஐபோன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட நேரமே அதுவாகும்.

Monday 11 July 2016

பைபிளில் சொல்லப்படுவது உண்மை

யூதர் மற்றும் கிறித்துவர்களின் புனித நூலான பைபிள், அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815-ஆம் ஆண்டிற்குப் பின்பு சுமார் 500 கோடிக்கும் மேலான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது உலகம் முழுக்க பரவியுள்ள ஒரு நூல்..! 
 
நாசாவின் சமீபத்திய ஆய்வின் மூலம் பைபிளில் கூறப்படும் கதைகள் எல்லாமே உண்மை என்று உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..!
 
 
100 மற்றும் 1000 ஆண்டுகளாய் என்ற இடைவெளியில் சூரியன், சந்திரன் உட்பட பல கிரகங்களின் விண்வெளி நிலைகளை (positions of several space objects) பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
 
நமது பூமி கிரகம் பிற விண்வெளி பொருட்களோடு மோதல் நிகழத்தாமல் இருக்குமா என்றவொரு விண்வெளி ஆய்வுதான் இது.
 
 
சுற்றுப்பாதையில் எல்லாமே நேரத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. அதனால், விண்வெளி நிகழ்வுகளில் தத்தம் போக்கில் செல்லும் பொருட்களுக்கு எந்தவிதமான குறுக்கீடும் இருக்காது.
 
 
அம்மாதிரியான ஆய்வின் கணினி கணக்கீடுகளின் போது ஏற்பட்ட ஒரு சிவப்பு சமிக்ஞை மூலம் ஒட்டுமொத்த ஆய்வுமே ஸ்தம்பித்தது. அதாவது கிரங்களின் விண்வெளி நிலை ஆய்வில் ஏதாவது ஒரு தரவு அல்லது ஒரு முடிவோ தவறாகி விட்டது என்று அர்த்தம்..!
 
 
சேவை துறை தலையீட்டுக்குப் பிறகு, கடந்துவிட்ட நேரத்தில் (elapsed time) எங்கோ ஒரு விண்வெளி நாளில் குறிப்பிட்ட நேரம் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
 
இந்த பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாத நிலையில் பைபிள் வாசகம் ஒன்று இதற்கு தீர்வாய் அமைந்தது. யோசுவாவின் புத்தகத்தில் உள்ள வரியில் இந்த பிரச்னைக்கான அழகான (அபத்தமான) அர்த்தம் கிடைத்தது.
 
 
யோசுவா 10: 8-ல் எதிரிகள் சூழப்பட யோசுவா கவலை கொள்கிறான். இருள் கவிழ்ந்தால் தான் தோற்கப் பெறுவேன் எனவே சூரியனை நிற்க செய்ய வேண்டும் என்று யோசுவா கடவுளிடம் கேட்டார். அப்படியாகவே நிகழ்ந்தது.
 
இதனை தொடர்ந்து விண்வெளி நேரத்தில் காணாமல் போன நாள் இதுவாகத் தான் இருக்கலாம் என்ற முடிவிற்கு விஞ்ஞானிகள் வந்தனர்
 
இந்த முடிவைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட கணினி கணக்கீடு ஆய்வில் 23 மணி நேரம் 20 நிமிடங்கள் காணாமல் போயிருப்பது கண்டறியப்பட்டது, அதாவது யோசுவா புத்தகத்திலுள்ளது போன்றே கிட்டத்தட்ட முழு நாள், ஆனால் முழு நாள் இல்லை..!
 
 
அந்த மீதமுள்ள 40 நிமிடங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றால், அது 1000 ஆண்டுகள் என்று நிகழ்த்தப்படும் அளவீட்டில் ஒரு பிரச்சினையை உருவாக்கும் ஆகையால் மீண்டும் பைபிள் வரிகள் பரிந்துரைக்கப்பட்டன.
 
 
பின்னர் சூரியன் பின்னோக்கி போன குறிப்பு பைபிளில் இருந்துள்ளது. யாரும் முதலில் அதை நம்பவில்லை ஆனால் பின்னர் வேறு வழியின்றி அதை கணக்கிட்டு பார்த்துள்ளனர்.
 
 
எசேக்கியாவின் மரணப்படுக்கையில் விஜயம் செய்த ஏசாயா இது தனக்குரிய நேரமில்ல்லை என்று கூற சூரியன் 10 டிகிரி முன்னோக்கி செல்ல வேண்டுமா அல்லது பத்து டிகிரி பின்னோக்கி செல்ல வேண்டுமா என்று கேட்க எசேக்கியா பின்னோக்கி என்று கூறியுள்ளார். அவ்வாறே சூரியன் 10 டிகிரி பின்னோக்கி செல்ல செய்யப்பட்டுள்ளது..!
 
 
10 டிகிரி என்றால் சரியாக 40 நிமிடங்கள் ஆகும். அப்படியாக விண்வெளி நேரத்தில் காணாமல் போன ஒரு முழு நாளின் கணக்கை பைபிள் கொண்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
 
 
அதாவது விண்வெளி நாட்களில் காணாமல் போன அந்த முழுநாள் ஆனது 23 மணி நேரம் 20 நிமிடங்கள் (யோசுவாவிற்காக ) எனவும், 40 நிமிடங்கள் (எசேக்கியா மற்றும் ஏசாயாவிற்காக ) எனவும் முழுமையடைகிறது..!

Friday 24 June 2016

ஐன்ஸ்டைனின் புதிர்! Albert Einstein puzzle

அல்பிரேட் ஐன்ஸ்டைனைப்பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். மாபெரும் விஞ்ஞானியான அவரால் சில புதிர்கள் கேட்கப்பட்டதுண்டு. அவற்றிலிருந்து ஒரு புதிரையே இன்று நீங்கள் இங்கு தீர்க்கப்போகிறீர்கள்.அவர் இப்புதிரை கூறும் போது 98% ஆனவர்களால் இதற்கு சரியான பதிலை அளிக்க முடியாது என்று கூறியிருந்தார். அப்போ நீங்கள் அந்த 2% ஆனவர்களில் ஒருவரா என்பதை தீர்த்து அறிந்துகொள்ளுங்கள்!

                                                  


      கேள்வி :
                         *ஒரு தெருவில் 5 வீடுகள் வரிசையாக உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறங்களில் வர்ணம் தீட்டப்பட்ட வீடுகள்.
                          *ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு நாட்டைச்சேர்ந்த நபர்கள் தனித்தனியே வசித்துவருகிறார்கள்.
                           *இந்த ஐந்து வீட்டவர்களும், ஒருவருக்கொருவர் வித்தியாசமான பழ‌க்கவழக்கங்களை கொண்டவர்கள்.     



                             அதாவது,  வித்தியாசமான குடிப்பழக்கம், வித்தியாசமான புகைப்பழக்கம் மற்றும் வித்தியாசமான செல்லப்பிராணிகள் வளர்க்கும் பழக்கம்.



இவர்களில் யார் மீனை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்?

உதவி தகவல்கள் :

1. பிரித்தானியர் சிவப்பு வர்ண வீட்டில் வசிக்கிறார்.
2. சுவீடனியர் நாயை செல்லப்பிராணியாக வளர்க்கிறார்.
3. டென்மார்க் நாட்டவர் தேனீர் அருந்துவார்.
4. பச்சை வர்ண வீடு அடுத்ததாகவும், வெள்ளை வர்ண வீட்டிற்கு இடது புறமாகவும் உள்ளது.
5. பச்சை வர்ண வீட்டுக்காரர் கோப்பி அருந்துவார்.

6. “Pall Mall” வகை சிகரெட்டை புகைப்பவர் செல்லப்பிராணியாக பறவைகளை வளர்க்கிறார்.
7. மஞ்சல் வர்ண வீட்டிற்கு சொந்தக்காரர் “Dunhill” வகை சிகரெட்டை புகைப்பார்.
8. நடுவீட்டில் இருப்பவர் பால் குடிப்பார்.
9. நோர்வேஜியன் முதலாவது வீட்டில் வசிக்கிறார்.
10. “Blends” வகை சிகரெட்டை புகைப்பவர் , பூணையை செல்லப்பிராணியாக வளர்ப்பவருக்கு அடுத்ததாக இருக்கிறார்.

11. குதிரையை செல்லப்பிராணியாக வளர்ப்பவர், “Dunhill” வகை சிகரெட்டை புகைப்பவருக்கு அத்ததாக இருக்கிறார்.
12. “Blue Master” வகை சிகெர்ட்டை புகைப்பவர் பியர்/பீர் (Beer) உம் அருந்துவார்.
13. ஜேர்னம்னியர் “Prince” வகை சிகரெட் புகைப்பார்.
14. நோர்வேஜியன் நீல வர்ண வீட்டிற்கு அடுத்து வசிக்கிறார்.
15. “Blends” வகை சிகரெட்டை புகைப்பவரின் அயலவர் தண்ணீர் குடிப்பவராவார்.

முயற்சியுங்கள், நிச்சயம்  பதில் கிடைக்கும்!

சரியான விடையை செய்முறையுடன் கூறுங்கள்.

https://udel.edu/~os/riddle-solution.html

Sunday 7 February 2016

உலகின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சவால் விடும் அடர்ந்த காடு..

உலகின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சவால் விடும் அடர்ந்த காடு..

உயிரியல் ஆய்வாளர்களுக்கு இன்றுவரை புதிய புதிய உயிரினங்களை வெளிக்காட்டி, அவர்கள் அறிவுக்குச் சவால் விட்டுக் கொண்டிருக்கும் மிகப் பெரிய மழைக்காடுகளில் ஒன்றுதான் போர்னியோ.



அமேசான் காடுகளைவிடப் பழமையானவை என்பதே, போர்னியோ காட்டின் பெருமைக்குச் சான்று. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு காடு நிறைந்த இத்தீவு இந்தோனேசியா, மலேசியா, புருணை ஆகிய நாடுகளின் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.

பல்லுயிர்ச் செழிப்புமிக்க இம்மழைக்காட்டில் காணப்படும் 222 பாலூட்டிகளில் 44 பாலூட்டிகள் ஓரிட வாழ்விகள் (Endemic). போர்னியோவைத் தவிர உலகின் வேறெந்தப் பகுதியிலும் இவற்றைக் காண முடியாது. இதுபோல் 420 வகைப் பறவைகளில் 37 வகைப் பறவைகளும், 100 நீர்நில வாழ்வன, 394 மீன் வகைகளில் 19 வகை ஓரிட வாழ்விகள். இங்குள்ள 15,000 வகைத் தாவரங்களுள் 6,000 வகைகள் இங்கு மட்டுமே காணக்கூடியவை.
ஒரு பிசின் வகை மரமொன்றில் மட்டும் ஆயிரம் வகை பூச்சியினங்கள் காணப்படுகின்றன.

உலகிலேயே நீளமான பூச்சியாகப் பதிவாகியுள்ள ‘சான் மெகாஸ்டிக்’ எனப்படும் அரை மீட்டருக்கு மேல் (56.7 செ.மீ) நீளமுள்ள குச்சிப்பூச்சி இக்காட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இக்காட்டின் தரைப் பகுதியில்தான், உலகின் மிகப் பெரிய மலரான ரஃப்ளேசியா மலர்கிறது.

தொன்மைக்காலப் பூச்சியை உண்ணும் ஒரே பாலூட்டி வகையான துபையா எனும் விலங்கும் உலகில் இங்கு மட்டுமே வாழ்கிறது. ‘பிக்மி யானை’ என்றழைக்கப்படும் உலகின் குள்ளமான யானை, இங்குதான் காணப்படுகிறது. பரிணாம வளர்ச்சியில் வௌவாலுக்கு முந்தைய இனமான ‘பறக்கும் லீமர்’ என்னும் உயிரினமும், உலகில் காணப்படும் ஒரே இடம் போர்னியோதான். போர்னியோவின் பெருமைகளைப் பட்டியலிட்டால், இடம் பத்தாது.
1950-ல் முழுவதும் காடாக இருந்த, உலகிலேயே ஏராளமான தனித்தன்மை மிக்க உயிரினங்களைக் கொண்டிருந்த போர்னியோ காடுதான் இன்றைக்கு உலகிலேயே அதிவிரைவாக, கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டுவருகிறது.

வளம்மிக்க இந்தக் காட்டை மரம் வெட்டும் நிறுவனங்கள் சூறையாடிவருகின்றன. பல பன்னாட்டு உணவு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பாமாயில் எண்ணெய்க்காக, இக்காட்டை அழித்து பாமாயிலைத் தரும் செம்பனைத் தோட்டங்களை உருவாக்கிவருகின்றன கார்பரேட் நிறுவனங்கள்.

போர்னியோ காட்டின் கடைசி மூச்சு எப்போது நிற்கும் என்று தெரியவில்லை.