Tuesday 25 August 2020

ஏழரைச் சனி

 இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும் என்பதை பார்க்கலாம்...


மற்ற கிரகங்களையும்விட சனி கிரகம் பலமான- சக்தி பெற்ற கிரகம் மட்டுமல்லஒரு ராசியில் அதிக காலம்- இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகம். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு. ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசி களையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும். அந்த முப்பது ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் நாட்டிலும் தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனால்தான் முப்பது வருடத்துக்குமேல் சேர்ந்தாற்போல் யோகத்திலே திளைத்தவர்களும் இல்லைகஷ்டத்திலேயே இளைத்தவர்களும் இல்லை என்பார்கள்.

அவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி எனப்படும். அதற்கு) 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனி ஆரம்பம். அது முதல் கட்டச் சனி. அங்கு இரண்டரை வருடம் இருக்கும் சனி விரயச் சனி எனப்படும். அடுத்து ஜென்ம ராசிக்கு மாறும் சனி (2-ஆம் கட்டம்) ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் இருக்கும். அது ஜென்மச் சனி எனப்படும்.

 அதைவிட்டு விலகி ஜென்ம ராசிக்கு 2-ஆமிடத்தில்  சனி வரும்போது (மூன்றாம் கட்டச் சனி) இரண்டரை வருடம் பாதச் சனிகுடும்பச் சனிவாக்குச் சனி எனப்படும். இப்படி மூன்று கட்ட மாக வரும் சனியின் மொத்த காலம்தான் ஏழரைச் சனியின் காலம் எனப்படும். ஜாதகரீதியாக ஒருவருக்கு வரக்கூடிய சனி தசை என்பது வேறுகோட்சாரரீதியாக வரும் ஏழரைச் சனி என்பது வேறு.

சிறு வயதில் வரும் முதல் சுற்றை (7.5 ஆண்டு)  மங்கு சனி என்றும்வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை (7.5 ஆண்டு)  பொங்கு சனி என்றும்கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை (7.5 ஆண்டு) அந்திம சனி என்றும் அழைப்பர்.

பிறந்ததிலிருந்து முப்பது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் தெரியும். முதல் சுற்று முடக்கி முயற்சியை தூண்டும். படிப்பில் கவனம் செலுத்தவில்லைகாதல்கவன சிதறல்உறவினர்கள் மரணம்வேலையில்லா திண்டாட்டம்’ என்பதுபோல பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல்பிரிவுசந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். 

பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும். சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from School கேசாகிவிடும். பத்துப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.. சிலருக்கு படிப்புமற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம். அவை விதிவிலக்கு.

கணவன் - மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். குடும்பத்திற்கு வழக்கமில்லாத உணவு வகைகளை குழந்தைகள் எடுத்துக் கொள்வார்கள். மந்தம்மறதிதூக்கம் என்று இருப்பார்கள்.  ஏழரை சனியில் பெறும்.

அனுபவங்களும்அவமானங்களும்காயங்களும்வடுக்களும் வாழ்க்கை முழுதும் மறக்காதபடி இருக்கும். ‘‘ரெண்டு மார்க் அதிகமா எடுத்திருந்தா தலையெழுத்தே மாறியிருக்கும். இன்னும் கொஞ்சம் பொறுப்பா படிச்சுருக்கலாமே’’ என்று ரிசல்ட் வந்தபிறகு புலம்ப வைப்பார். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார்சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும். 

2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம்குழந்தை பாக்கியம்வீடுமனைவாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம். 

முப்பது வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல்பாதுகாத்தல்பலமடங்காக பெருக்கித் தருதல். இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவானம் போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால்கொஞ்சம் கெடுக்கும். அதனால்கொடுத்துக் கெடுப்பவர்கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. இந்த இரண்டாவது சுற்றின்போது சிலர்மிதமிஞ்சிய செல்வ வளத்தால் பிரச்னைகளை உருவாக்குவார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று செல்வாக்கை நிரூபிக்கத் துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று தன்னடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமேஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார் சனி. பழைய நிலைக்கே கொண்டு செல்லத் திட்டமிடுவார். 

ஆகவேகவனமாக இருங்கள். பேச்சிலோசெயலிலோ கர்வக் கொம்பு முளைத்தால் கொடுத்ததைப் பிடுங்க தயங்க மாட்டார். சனி பகவான் வந்தால்தான் நம் அறிவுக்கும்சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்வோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட்கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும்கறுப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள்.  வசதி வரும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டிப்பு வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால் பாதை மாறினால்அதலபாதாளம்தான்.  இன்னொரு விஷயம்... நம்பிக்கை துரோகம் செய்தவர்களை பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்கியம் பாதிக்கும். ஏழரை சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும்அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வஜென்மத் தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.

 சனி பகவானுக்கு சூரிய சந்திரர்கள் என்றாலே ஆகாது. ஏழரைச் சனி நடப்பில் இருக்கும் போது சூரிய திசையோசந்திர திசையோ நடக்குமானால் சனியின் கடுமை இன்னும் அதிகமாக இருக்கும். கவனமுடன் இருக்க வேண்டும்.

ராகு தசை நடக்கும் போதும் ஏழரைச் சனி நடைபெற்றால் சற்று மோசமான பலன்களே நடைபெறுகின்றன. துலாம் சனிக்கு உச்ச ராசியாகும். அதனால் பாதிப்பு அதிகம் தரமாட்டார் என்றாலும் ஜென்மத்தில் பகை வீட்டிலோ... கோளாறான இடத்திலோ இருந்தால் தன்னை மறந்து ஒரு பிடிபிடித்து விடுவார். ஒருவருடைய  ஜாதகத்தில்  சனி உச்சம் பெற்றுறிருந்தால்  71/2 சனி பாதிப்பு குறையும். 

ஒருவரது  ஜாதகத்தில் சனி மகரம் அல்லது கும்பத்தில் ஆட்சி பெற்றாலும், 71/2 சனி கெடுதல் செய்யாது . ஜனன காலத்தில் ஜன்ம லக்னத்திற்கு  3,6,10,11-ல் சனி அமர்ந்தாலும்  71/2 சனி கெடுதல்  குறையும். மகரம் அல்லது கும்ப  லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு சனியும் லக்னத்தில் இருந்தால் 71/2 சனியும் கெடுதல் குறையும் தவிர அவருக்கு சுகமான வாழ்வு கிட்டும் . சனி உச்சம் பெற்று துலா  ராசியில் இருந்தால் அது    கேந்திரம்  அல்லது  திரிகோணம்  என்று இருந்தால் அவருக்கு கெடுதல் குறையும்.

அவருடைய தொல்லைகளில் இருந்து தப்பிக்க

அந்த மூன்று ராசிகளிலும் அஷ்டவர்க்கப் பரல்கள் 30ற்குமேல் இருந்தால்அவருடைய தொல்லைகள் தடுக்கப்பெற்றுவிடும். அந்த மூன்று ராசிகள் என்றில்லை. அவற்றில் ஒன்றில் 30 பரல்கள் இருந்தால் கூட அந்தப் பகுதிக்கு உரிய இரண்டரை வருடங்கள் ஜாதகன் நிம்மதியாக இருக்கலாம்.

 திருநள்ளாறு தலத்திலும்திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு தலத்திலும் பேரருள் புரிகிறார். இந்த தலங்களுக்கு சென்று வாருங்கள். பிரச்னைகளெல்லாம் எப்படித் தீர்கிறது என்று பாருங்கள்.


சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி மனமுருக வேண்டி வழிபடலாம்.  

 சனி பகவானை திருப்தி படுத்த மாற்றுத் திறனாளிகள், (குறிப்பாக பார்வை இழந்தவர்கள்நடக்க இயலாதவர்கள்) வயதானவர்ஆதரவற்றவர்களுக்கு உதவலாம்.

சனி வரலாறு


நவகிரகங்களில் முதன்மையான ஆதிகிரகம் சூரியன். துவஷ்டாவின் மகள் சஞ்ஞிகை என்பவள் (உஷா என்றும் ஒரு பெயர்) சூரியனை விரும்பித் திருமணம் செய்துகொண்டாள். வைவஸ்வதமநுயமன் (மகன்கள்)யமுனை (மகள்) என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். இருந்தும் சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள்.  அதனால் சூரியனுக்குத் தெரியாமல் தன்னுடைய நிழலையே தன் மாதிரி பெண்ணாக்கி சூரியனுடன் குடும்பம் நடத்தும்படி கூறி விட்டுத் தன் தகப்பனார் வீட்டுக்குப் போய்விட்டாள். அப்படி உருவாக்கப்பட்டவளே சாயாதேவி. பிரத்யுஷா என்றும் இன்னொரு பெயர். சஞ்ஞிகையின் வேண்டுகோளின்படிதான் வேறு ஒருத்தி என்ற ரகசியத்தை வெளியிடாமல் சூரியனுடன் அவன் முதல் மனைவி போலவே வாழ்ந்தாள் சாயாதேவி அவளும் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். சாவர்ணீமனு என்ற ஆண் மகனும்அடுத்து சனி பகவா னும் பிறகு பத்திரை என்ற பெண் மகளும் பிறந்தனர். சாயாதேவிக்கு குழந்தைகள் பிறந்ததும் சஞ்ஞிகையின் குழந்தைகளை சக்களத்திப் பிள்ளைகளாகக் கருதி கொடுமைப்படுத்த ஆரம்பித்தாள். இதை அறிந்த சூரியனின் மூத்த தாரத்து இளைய குமாரன் யமன் (தர்ம ராஜன்) சாயாதேவியை மிரட்டி அடிக்கப் போனான். சனி தன் தாய்க்குப் பரிந்து கொண்டு சஞ்ஞிகையை "ஓடிப்போனவள்என்று உதாசீனமாகப் பேசவேயமன் கோபங்கொண்டு தன்னுடைய தண்டத்தால் சனியின் முழங்காலில் அடித்தான். அதனால் சனி பகவானின் வலதுகால் ஊனமானது.

ஜோதிடத்தின் அடிப்படை

 ஜோதிடம் என்றால என்ன?


ஜோதிடம் என்பது, வானமண்டலத்தில் உள்ள கிரகங்களின் கதிர்கள் மனித வாழ்வை எப்படி நிர்ணயிக்கிறது என்பது பற்றிய அறிவியலே ஜோதிடம்அவரவர் முற்பிறவியில் செய்த நல் தீவினைகளால் அவரவர்க்கு ஏற்படும்  நன்மைதீமைகளை அறிந்து நன்மையால் மகிழ்ச்சியும்தீமை என்றால் பரிகாரங்கள் செய்தும் பிரயோசனம் அடைதல் பொருட்டு  உருவானதே ஜோதிடம் ஆகும்.


இனி ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம்.


1.1 வாய்பாடுகள்

நாள் = 60 நாழிகை = 24 மணி

நாழிகை = 60 விநாழிகை = 24 நிமிடம்

விநாழிகை = 60 தற்பரை = 24 வினாடி


ராசி மண்டலம் = 360 பாகைகள் = 12 ராசிகள்
ராசி = 30 பாகைகள்= 2 ¼ நட்சத்திரங்கள்

நட்சத்திரம் = 13 பாகை 20 கலை = 4 பாதங்கள்

பாதம் = 3 பாகை 20 கலை


பாகை = 60 கலை

கலை = 60 விகலை


1.2 
கிரகங்கள் 9

1. சூரியன்

சந்திரன்

3. செவ்வாய்

4. புதன்

5. குரு

6. சுக்கிரன்

7. சனி

8. ராகு

9. கேது



1.3 
ராசிகள் 12

1. மேஷம் 

2. ரிஷபம்

3. மிதுனம்

4. கடகம்

5. சிம்மம்

6. கன்னி

7. துலாம்

8. விருச்சிகம்

9. தனுசு

10. மகரம்

11. கும்பம்

12. மீனம்


1.4 
நட்சத்திரங்கள் 27

அசுவனி

2. பரணி

3. கார்த்திகை

4. ரோகினி 

5. மிருகசீரிஷம்

6. திருவாதிரை

7. புனர்பூசம்

8. பூசம்

9. ஆயில்யம்

10. மகம்

11. பூரம்

12. உத்திரம்

13. அஸ்த்தம்

14. சித்திரை

15. சுவாதி

16. விசாகம்

17. அனுஷம்

18. கேட்டை

19. மூலம்

20. பூராடம்

21. உத்திராடம்

22. திருவோணம்

23. அவிட்டம்

24. சதயம்

25. பூரட்டாதி

26. உத்திரட்டாதி

27. ரேவதி.



1.5 
ராசிகளும் அவற்றின் அதிபதிகளும்




மேஷத்தின் அதிபதி செவ்வாய்
ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்
மிதுனத்தின் அதிபதி புதன்
கடகத்தின் அதிபதி சந்திரன்
சிம்மத்தின் அதிபதி சூரியன்
கன்னியின் அதிபதி புதன்
துலாத்தின் அதிபதி சுக்கிரன்
விருசிகத்தின் அதிபதி செவ்வாய்
தனுசுவின் அதிபதி குரு
மகரம் மற்றும் கும்பத்தின் அதிபதி சனி
மீனத்தின் அதிபதி குரு.


1.6. 
கிரகங்களும் அவற்றின் நட்சத்திரங்களும்



1.7. 
நட்சத்திரத்தின் உட்பிரிவு

ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதுஒவ்வரு பாகத்தையும் “பாதம்” என்று குறிப்பிடுவது வழக்கம்அதாவது ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாகப்பிரிக்கப் பட்டிருக்கிறது.

அதாவது அசுவனியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் அசுவனி முதல் பாதம் என்றும்இரண்டாம் பாகம் அசுவனி இரண்டாம் பாதம் என்றும்மூன்றாம் பாகம் அசுவனி மூன்றாம் பாதம் என்றும்நான்காம் பாகம் அசுவனி நான்காம் பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதாவது பரணியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் பரணி முதல் பாதம் என்றும்இரண்டாம் பாகம் பரணி இரண்டாம் பாதம் என்றும்மூன்றாம் பாகம் பரணி மூன்றாம் பாதம் என்றும்நான்காம் பாகம் பரணி நான்காம் பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதே போல மற்ற நட்சத்திரங்களுக்கும் தெரிந்து கொள்க.

1.8 
ராசிகளும் அவற்றில் அடங்கும் நட்சத்திரங்களும்

ஒரு ராசிக்கு  ¼ நட்சத்திரங்கள் என்று முன்னமே தலைப்பு 1.1 – ல் பார்த்ததை நினைவு கொள்ளவும்அதாவது ஒரு ராசிக்கு (2 x 4) + 1 = 9 பாதங்கள்





மேஷ ராசியில் அசுவனியின் 4 பாதங்களும்பரணியின் 4 பாதங்களும்கார்திகையின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

ரிஷப ராசியில் கார்த்திகையின் மீதம் 3 பாதங்களும்ரோகினியின் 4 பாதங்களும்மிருகசீரிடத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

மிதுன ராசியில் மிருகசீரிடத்தின் கடைசி 2 பாதங்களும்திருவாதிரையின் 4 பாதங்களும்புனர்பூசதின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

கடக ராசியில் புனபூசத்தின் கடைசி 1 பாதமும்பூசத்தின் 4 பாதங்களும்ஆயில்யத்தின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)

சிம்ம ராசியில் மகத்தின் 4 பாதங்களும்பூரத்தின் 4 பாதங்களும்உத்திரத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

கன்னி ராசியில் உத்திரத்தின் மீதம் 3 பாதங்களும்அஸ்தத்தின் 4 பாதங்களும்சித்திரையின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

துலா ராசியில் சித்திரையின் கடைசி 2 பாதங்களும்சுவாதியின் 4 பாதங்களும்விசாகத்தின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

விருச்சிக ராசியில் விசாகத்தின் கடைசி 3 பாதங்களும்அனுஷத்தின் 4 பாதங்களும்கேட்டையின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)

தனுசு ராசியில் மூலத்தின் 4 பாதங்களும்பூராடத்தின் 4 பாதங்களும்உத்திராடத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

மகர ராசியில் உத்திராடத்தின் கடைசி 3 பாதங்களும்திருவோனத்தின் 4 பாதங்களும்அவிட்டத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

கும்ப ராசியில் அவிட்டத்தின் கடைசி 2 பாதங்களும்சதயத்தின் 4 பாதங்களும்பூரட்டாதியின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

மீன ராசியில் பூரட்டாதியின் கடைசி 3 பாதங்களும்உத்திரட்டாதியின் 4 பாதங்களும்ரேவதியின் 4 பாதங்களும்ம் அடங்கும். (1 + 4 + 4 = 9)


1.9 ராசிகளின் வகைகள்




1.9.1. சரம்ஸ்திரம்உபயம் என்ற அடிப்படையில் மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள்அதாவது...

மேஷம்கடகம்துலாம்மகரம் இந்நான்கும் சர ராசிகள்
ரிஷபம்சிம்மம்விருச்சிகம் கும்பம் இந்நான்கும் ஸ்திர ராசிகள்
மிதுனம்கன்னிதனுசு மீனம் இந்நான்கும் உபய ராசிகள்.


1.9.2 &3. 
ஒற்றை (ஆண்ராசிஇரட்டை (பெண்ராசி என்ற அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள்அதாவது...

மேஷம்மிதுனம்சிம்மம்துலாம்தனுசுகும்பம் இந்த ஆறு ராசிகளும் ஆண் ராசிகள் அல்லது ஒற்றை ராசிகள்.

ரிஷபம்கடகம்கன்னிவிருச்சிகம்மகரம்மீனம் இந்த ஆறு ராசிகளும் பெண் ராசிகள் அல்லது இரட்டை ராசிகள்.

1.9.4 & 5 
மேலும் நெருப்புநிலம்காற்றுநீர் என்ற அடிப்படையிலும்கிழக்குமேற்கு வடக்கு தெற்கு என்ற அடிப்படையிலும் நான்கு வகையாக பிரித்திருக்கிறார்கள்

மேஷம்சிம்மம்தனுசு இம்மூன்றும் கிழக்கு ராசிகள்நெருப்பு ராசிகள்.
ரிஷபம்கன்னிமகரம்இம்மூன்றும் தெற்கு ராசிகள்நிலம் ராசிகள்.
மிதுனம்துலாம்கும்பம் இம்மூன்றும் மேற்கு ராசிகள்காற்று ராசிகள்.
கடகம்விருச்சிகம்மீனம் இம்மூன்றும் வடக்கு ராசிகள்நீர் ராசிகள்




1.10. 
ராசிகளில் கிரக பலம்.

1.10.1. உச்சம்நீச்சம்

 

சூரியன் மேஷத்தில் உச்சம்துலாத்தில் நீச்சம்
சந்திரன் ரிஷபத்தில் உச்சம்விருச்சிகத்தில் நீச்சம்
செவ்வாய் மகரத்தில் உச்சம்கடகத்தில் நீச்சம்
புதன் கண்ணியில் உச்சம்மீனத்தில் நீச்சம்
குரு கடகத்தில் உச்சம்மகரத்தில் நீச்சம்
சுக்கிரன் மீனத்தில் உச்சம்கண்ணியில் நீச்சம்
சனி துலாதில் உச்சம்மேஷத்தில் நீச்சம்


 

 1.10.2. ராசிகளில் பகை பெரும் கிரகங்கள்


கிரகங்களின் உச்சம்நீசம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகள் அனைவருக்கும் எளிதாக தெரியும்.  ஆனால் நட்புசமம்பகை போன்ற நிலைகளை தெரிந்து வைத்திருப்பது என்பது ஆரம்ப நிலை ஜோதிடர்களுக்கு சற்று தடுமாற்றத்தை தரும்.

அதற்கான ஒரு சூத்திரம் கீழே தந்திருக்கிறேன் பாருங்கள்.

1.  கிரகங்கள் தாங்கள் மூலத்திரிகோணம் அடையும் ராசிகளுக்கு 2,12, 4, 5, 8, 9 ஆகிய வீடுகள் நட்பு வீடுகளாகும்.

2.  ஏனைய வீடுகள் (3,6,7,10,11) பகை வீடுகளாகும்.  இவற்றில் ஒரு வீடு நட்பாகவும் மற்றது பகையாகவும் இருந்தால் அது சம வீடாகும்.

3. கிரகங்கள் உச்சம் அடையும் வீட்டிற்கு அதிபதியான கிரகத்தின் மற்றொரு வீடு பகையாக வந்தாலும் சமம் என்று கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணம் தருகிறேன் பாருங்கள்.
சூரியன் உச்சம் அடைவது மேஷ ராசி
நீசம் அடைவது அதற்கு 7-ம் வீடான துலா ராசி
ஆட்சி பெறுவது சிம்ம ராசி
மூலத்திரிகோணம் பெறுவதும் சிம்ம ராசி

எனவே சிம்மத்திலிருந்து 2, 12, 4, 5, 8, 9-ம் வீடுகள் நட்பு ராசிகளாகும்  சூரியனுக்கு 2ம் வீடாக கன்னி ராசி வருவதால் புதன் முதலில் நட்பாக வருகிறார்.  பின்பு 11ம் வீடாக மிதுனம் வருவதால் அது பகை என வருகிறது.  எனவே ஒரு நட்பும்பகையும் கலந்து வருவதால் சூரியனுக்கு புதன் சமம் என்ற நிலையைப் பெறும்.

எனவே சூரியன் மிதுனகன்னி ராசிகளில் சமம் என்ற நிலையை அடைகிறார்.
செவ்வாய் உச்சம் பெறும் ராசி மகரம்.  அதன் மூலத்திரிகோண ராசி மேஷம் எனவே சூத்திரத்தின் படி மேஷத்திலிருந்து 10, 11ம் வீடுகளாக வரும் மகரம் மற்றும் கும்ப ராசிகளில் செவ்வாய் பகை பெற வேண்டும்.  ஆனால் மகரம் உச்ச வீடாக வருவதால் மற்றொரு வீடான கும்பம் பகை என்ற நிலை பெறாமல் சமம் என்ற நிலையைப் பெறுகிறது.
இதே முறையில் மற்ற கிரகங்களுக்கும் நட்புபகைசமம் ஆகிய நிலைகளை எளிதாக அறிந்துகொள்ளலாம்.

மூலத்திரிகோண ராசிகள்

சூரியன் - சிம்மம்
சந்திரன் - ரிஷபம்
செவ்வாய் - மேஷம்
புதன் - கன்னி
குரு - தனுசு
சுக்கிரன் - துலாம்
சனி - கும்பம்.

இதில் சூரியன்மற்றும் புதன் தங்களது ஆட்சி வீட்டிலேயே மூலத்திரிகோணம் அடைகின்றன.
சந்திரன் உச்ச வீடான ரிஷபத்தில் மூலத்திரிகோணம் அடைகிறார்.
மற்ற கிரகங்கள் தங்களது இரண்டு வீடுகளில் ஆண் ராசிகளில் மூலத்திரிகோணம் அடைகின்றனர்.
 
1.11 திதி

ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம் 
 ஆகும் திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி வரை உள்ள  
பதினைந்து நாட்களும்தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள  
பதினைந்து நாட்களும்அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்.



1.12 ராசிகளின் வகைகள்

1.12.1 வறண்ட ராசிகள்
மேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி ஆகிய ராசிகள் வறண்ட ராசிகள்.

1.12.2 முரட்டு ராசிகள்
மேஷம்,விருச்சிகம் ஆகிய ராசிகள் முரட்டு ராசிகள் ஆகும்.

1.12.3 ஊமை ராசிகள்
கடகம்,விருச்சிகம்,மீனம் ஆகிய ராசிகள் ஊமை ராசிகள் ஆகும்.

1.12.4 நான்கு கால் ராசிகள்
மேஷம்,ரிஷபம்,சிம்மம்,மகரம் ஆகிய ராசிகள் நான்கு கால் ராசிகள் ஆகும்.

1.12.5 இரட்டை ராசிகள்
மிதுனம்,தனுசு,மீனம் ஆகிய ராசிகள் இரட்டை ராசிகள் ஆகும்.



1.13  லக்னம்  

ஒரு ஜாதகத்தில் இடம் பெறும் ராசிக் கட்டத்தில் 'என்றோஅல்லது 'லக்என்றோஅல்லது 'லக்னம்என்றோ குறிப்பிட்டிருக்கும் ராசியே முதல் வீடாகும்இங்கே கொடுத்திருக்கும் ராசிக் கட்டத்தைப் பாருங்கள்இங்கே 'லக்னம்என்று குறிப்பிட்டிருக்கும் ராசி மேஷ ராசிஎனவே இதுவே முதல் வீடுஇதிலிருந்து வரிசைக் கிரமமாக எண்ணினோம் என்றால் ரிஷபம் 2வது வீடுமிதுனம் 3வது வீடுகடகம் 4வது வீடுசிம்மம் 5வது வீடுகன்னி 6வது வீடுதுலாம் 7வது வீடுவிருச்சிகம் 8வது வீடுதனுசு 9வது வீடுமகரம் 10வது வீடுகும்பம் 11வது வீடுமீனம் 12வது வீடு


மீனம்  12
மேஷம்   1  (லக்னம்)
ரிஷபம்   2
மிதுனம்   3
கும்பம்  11

கடகம் 
 4
மகரம்  10
சிம்மம்   
5
தனுசு    9
விருச்சிகம்   8
துலாம்   7
கன்னி  
6

லக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள் - See more at: http://www.tamilastrology.net/astrology-basics/ascendent.html#sthash.pO392gn5.dpuf

லக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள் - See more at: http://www.tamilastrology.net/astrology-basics/ascendent.html#sthash.pO392gn5.dpuf
லக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள் - See more at: http://www.tamilastrology.net/astrology-basics/ascendent.html#sthash.pO392gn5.dpuf

லக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள்.

1.14 கேந்திரதிரி கோணமறைவு வீடுகள்

ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு
என்பார்கள்.உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது.
அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.

லக்கினத்தை - முதல் வீடு என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

- 1 , 5 , 9 - ஆகிய வீடுகள் - திரி கோண ஸ்தானம். (லக்ஷ்மி ஸ்தானம்)
- 1 , 4 , 7 ,10 - கேந்திர வீடுகள் என்பர். ( விஷ்ணு ஸ்தானம் )
- 3, 6 , 8 , 12 

மறைவு வீடுகள் என்று கூறுவர்அதாவது , இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் - பலம் இழந்து இருக்கும்..
- 2 , 11 - உப , ஜெய ஸ்தானங்கள் என்பர்.

ஆம் வீடு - திரி கோணமும் , கேந்திரமும் ஆகிறது...
எந்த ஒரு கிரகமும் - திரி கோணத்திலோ , கேந்திரத்திலோ - நின்றால் - அது  பலத்துடன் நிற்கிறது என்று அர்த்தம்.

2 , 11 - வீடுகளில் நின்றால் - பரவா இல்லை , நல்லது.
ஆம் வீடு - சுமார்.
6 ,8 ,12 - ஆம் வீடுகள் - நல்லதுக்கு இல்லைஅப்படினா என்னஒரு சுப கிரகம் , இந்த வீடுகள் லே இருந்தாஅதுனாலே ஏதும் , பெருசா நல்லது பண்ண முடியாது.


1.15 
ஒரு கிரகம் கெட்டு விட்டது , பலம் இல்லை என்று எப்படி கூறுவது?

ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால்.... மறைவு வீடுகளில் இருந்தால்... பகை வீட்டில் இருந்தால்... பகை கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால்... அந்த கிரகம் சரியான நிலைமையில் இல்லை என்று பொருள்.

1.16 கிரகங்களின் பார்வைகள் :

எல்லா கிரகத்துக்கும் ஏழாம் பார்வை - பொது.
சனி க்கு - 3 , 10 ஆம் பார்வைகள் உண்டு.
செவ்வாய்க்கு - 4 , 8 ஆம் பார்வைகளும் உண்டு.
குருவுக்கு - 5 , 9 ஆம் பார்வைகளும் உண்டு.


1.17 காரகன்:(authority)

தந்தைக்குக் காரகன் சூரியன்
உடல் காரகன் சூரியன்
மனம்தாய்க்குக் காரகன் சந்திரன் 
ஆயுள்தொழில் காரகன் சனி
களத்திர காரகன் சுக்கிரன்
தனம்புத்திர காரகன் குரு
கல்விபுத்தி காரகன் புதன்
நிலம்ஆற்றல்திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்


1.18  சந்திர ராசி என்றால் என்னஅது எதை ஆதாரமாகக் கொண்டது?

ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிசந்திர ராசி எனப்படும்அது ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டது.
 
1.19 . லக்கினம் எதற்குப் பயன்படும்சந்திர ராசி எதற்குப் பயன்படும்?

பிறந்த ஜாதகம் (Birth Chart) 
என்பது வாகனம்,தசாபுத்தி என்பது ரோடு,கோள்சாரம் என்பது டிரைவர்.லக்கினத்தையும் அதை அடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளையும் வைத்து ஜாதகனுடைய வாழ்க்கையையும்தசாபுத்தியைவைத்து அந்த ஜாதகன் பயனடையப் போகும் காலத்தையும் கோள்சாரத்தைவைத்து அந்தப் பலன்கள் கையில் கிடைக்கும் காலத்தையும் அறியலாம்.
 
1.20. கோச்சாரம் (கோள் சாரம் - Transit of planets) என்பது என்ன?

ஒவ்வொரு கோளும் வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோள்சாரம் எனப்படும்.
 
1.21. தசா / புத்தி என்பது என்னஅதன் பயன் என்ன?

ஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசாதான் ஜாதகனின் ஆரம்ப தசாஅதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள்ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும்அதற்கு புத்தி என்று பெயர் (Sub period). 

ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்.

ஒரு தசையை ஒன்பது பகுதிகளாக பகுப்பதுதான் புக்தி:

அதாவது ஒன்பது கிரகங்களும் ஒவ்வொரு தசையின் காலத்தில் புக்தியாக பங்கெடுத்து பரிபாலனம் செய்யும். ஒரு தசை 10 வருடம் என்றல் அதில் ஒன்பது சமம் இல்லாத காலமாக புக்திகள் பிரிக்கபடுகிறது. அதில் எந்த ஒரு தசையும் தனது புக்தி கொண்டு ஆரம்பிக்கும். 

அதாவது ராகு தசை என்றால் அதில் ராகு புக்தி முதலில் தொடங்கும் (தனது புக்தி ). அதாவது தனது கிரகத்தின் பங்களிப்பை முதலில் செய்து விடும். அதன் பின்பு மேலே உள்ள வரிசை படிகுரு புக்திசனி புக்திபுதன் புக்திகேது புக்திசுக்கிர புக்தி என தொடரும். அதேபோல் புதன் தசை என்றால் முதலில் புதன் புக்தி, (தனது புக்தி ) அதன் பின்பு வரிசையாக கேது புக்திசுக்கிர புக்திசூரிய புக்தி என ஒன்பது புக்திகளும் நடந்து வரும்.

ஜோதிட துறையில் வழமையாக சொல்லுவது என்னவென்றால் எந்த ஒரு தசையில் தனது புக்தி ஒருவருக்கு நல்லதை செய்கிறதோ அந்த தசையில் மற்ற புக்திகள் கெடுதல் செய்யும். அதாவது கொடுத்து கெடுப்பது. ஆக ஒரு தசையின் தனது புக்தி காலமானது பலருக்கு நல்லது செய்யாமல் கெட்டதும் செய்யாமல் மந்தமாக அல்லது நடுத்தரமாக நடந்தால் மற்ற புக்திகள் விசேஷமாக இருக்கும் என்று சொல்லுகின்றனர்.

ஒரு புக்தியை ஒன்பது பகுதி காலங்களாக பிரிப்பது தான் அந்தரம்.

எப்படி தசையில் ஒன்பது பகுதி புக்தியோ அதுபோல் புக்தியில் ஒன்பது பகுதிதான் அந்தரம். அதாவது ஒரு தசை நடந்தால் ஒன்பது கிரகங்கள் புக்தியாக பங்கு கொள்கிறதோ அதேபோல் ஒரு புக்தியில் ஒன்பது பகுதிகளாக அந்தரம் என்ற காலம் பங்கேடுக்கிறது.

உதாரணமாக ஒருவருக்கு குரு தசை நடக்கிறது என்றால் முதலில் குரு புக்திசனி புக்திபுதன் புக்திஎன ஒன்பது கிரகங்கள் தொடரும். அதுபோல் அந்த குருதசையின் குரு புக்தி எடுத்துக்கொண்டால் குரு அந்தரம்சனி அந்தரம்புதன் அந்தரம் என ஒன்பது கிரகங்களும் அந்தரம் காலமாக செயல்படும்.

ஆக ஒரு மனிதனின் ஆயுள் = 9 தசையாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தசைக்கும் ஒன்பது புக்திகளாக பிரிக்கப்பட்டு ஒன்பது புக்திகளுக்கும் ஒன்பது அந்தரங்களாக பிரிக்கப்படும் கால புருஷன் ஒருவரின் வாழ்வை நிர்ணயிக்கின்றான்.

இதில் பெரும்பாலும் யாரும் அனைத்து தசைகளை நிறைவு செய்வது இல்லை. 70 வயது ஆயுள் என்றால் அல்லது தசைகள் நடக்காமலே ஆயுள் முடிந்து விடும்.

மேலும் ஒரு கிரகம் ஒரு ஜாதகத்தில் நல்ல பலம் பெற்றால் அந்த தசை முழுவதும் நல்லதே நடக்கும் என்றும் சொல்ல இயலாது. என் என்றால் புக்தி என்ற பங்களிப்பு ஓவ்வொரு தசையிலும் அனைத்து கிரகங்களுக்கும் உள்ளது. அதைவிட அந்தரம் என்ற பங்களிப்பும் அனைத்து கிரகங்களுக்கும் உள்ளது.

எனக்கு குரு தசை நடக்கிறது எனக்கு ஜாதகத்தில் குரு உட்சமாக இருக்கிறது நல்ல பலன் நடக்கும் என்று நினைக்ககூடாது. குரு தசையில் சனி புக்தி சேவை புக்தி கேது அந்தரம் என்று வரும் அல்லவா அப்போது நம்மை போட்டு பார்த்து விடும்.

சனி எனக்கு ஜாதகத்தில் கெட்டு போய் உள்ளது சனி தசை முழுவதும் கேடுதலே நடக்கும் என்று கலங்க வேண்டாம். அதில் நல்ல கிரகங்கள் புக்தி மற்றும் அந்தரம் நடக்கும்போது மூச்சு விட வாய்ப்பு வரும்.

 
1.22. தசா புத்திகள்

ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை.
 தசா புத்திகளின் கால அளவுமற்றும் வரிசை என்ன?

சூரிய தசை - 6 ஆண்டுகள்  
சந்திர தசை - 10 ஆண்டுகள்  
செவ்வாய் தசை - 7 ஆண்டுகள் 
 ராகு தசை - 18 ஆண்டுகள் 
குரு தசை - 16 ஆண்டுகள்  
சனி தசை - 19 ஆண்டுகள் 
 புதன் தசை - 17 ஆண்டுகள் 
 கேது தசை - 7 ஆண்டுகள்  
சுக்கிர தசை - 20 ஆண்டுகள் 

மொத்தம் 120 ஆண்டுகள்

1.23 அஸ்தமனம்

ஒரு கிரகம் வலிமை இழந்து போவதுதான் அஸ்தமனம் இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் அமர்ந்திருந்தால், 2-வதாக இருக்கும் கிரகம் வலிமை இழக்கும்இந்த விதிப்படி சூரியனுடன் ஒரு கிரகம் 10 பாகைக்குள் இருக்கும்போது வலிமை இழந்துவிடும்

1.24 அஷ்டகவர்கம்

அஷ்டவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் வலிமையையும்ஒரு வீட்டின் தன்மையையும் மதிப்பெண்கள் கொடுத்துக் கணிப்பது.ஒரு வீட்டில் ஒருகிரகத்தின் அதிகபட்ச மதிப்பெண் 8,  ஒரு ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337
(
யாராக இருந்தாலும் 337 மட்டுமே)
ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் - 28 (337/12)
இந்த மதிப்பெண்களை வைத்து ஒரு ஜாதகத்தில் உள்ள நன்மை தீமைகளை சுலபமாக அறியலாம்.

1.25 .நவாம்சம்

Navamsam is the magnified version of a Rasi Chart
ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்துராசியில் உள்ள கிரகம் அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம்.குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்)

1.26 சுற்றும் காலம்

ஜோதிடப்பலன்கள்  அறிய  முதலில் ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என அறிந்துக்கொளவது  அவசியம் முதலாவதாக சந்திரன் ஒன்றுதான் 12 ராசிகளை முப்பது நாட்களில் சுற்றி வருகிறான் அதாவது ஒவ்வொரு ராசியிலும் அவன் 2 ½ நாடகள் தான்  தங்குவான்

அடுத்தபடியாக நாம் சூரியனைச்சொல்லலாம்   .சூரியன்சுக்கிரன், புதன் 12 ராசிகளை ஒரு ஆண்டில் சுற்றிவருகிறான்.
  
செவ்வாய் கிரகம் 1 ½ ஆண்டுகளில்  12 ராசிகளைக்  கடக்கின்றன .இவை  ஒவ்வொரு ராசியிலும் சுமாராக 45 நாட்கள் தங்கி இருக்கும் ஆனால் சில சம்யம் செவ்வாய்  ஒரு ராசியில் அதிக மாதங்கள் தங்க வாய்ப்புண்டுசிலசமயம்  ஆறு மாதங்கள் கூட அந்த இடத்திலேயே இருக்கும்.

பின் வருவது குரு ,இந்தக்கிரகம்  12  ராசிகளை  12 ஆண்டுகளில் கடக்கிறது ஒரு ராசியில் ஒரு வருடம்  தங்கி இருக்கும் சில சம்யம் வக்ரமாகி  ஒரு சில மாறுதல் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மந்தன் என்ற பெயரிலேயே தெரிகிறது சனி மிகவும் மெதுவாக 12 ராசிகளைக் கட்க்கும் என்று ,,,சனி 12 ரசிகளைக்கடக்க முப்பது ஆண்டுகள் பிடிக்கின்றன  இவர் ஒரு ராசியில் 2 1/2 வருடங்கள் தங்குகிறார்.

ராகு கேது  18 ஆண்டுகளில்  12 ராசிகளைக் கடக்கின்றன  இவை ஒரு ராசியில் 1 1/2 வருடம்தங்கி இருக்கும் .எல்லா கிரகங்களும் முறைப்படி ராசிகளை வலம் வர இந்த ராகு கேது மட்டும்  ராசிகளை இடது பக்கமாக எதிர்திசையில் செல்கின்றன மேலும் இரண்டும் ஒரே  நேரத்தில் ஒரு ராசியிலிருந்து  மற்றொரு ராசிக்கு செல்கின்றன  மற்ற எல்லா கிரகங்களும் தனித்தனியே நகர ராகு கேது மட்டும் சேர்ந்தே நகருகின்றன  ராகு கேது பெயர்ச்சி என்று இரண்டையும் சேர்த்தே தான் சொல்லுவார்கள் ராகு  கேது ஒருவர்க்கொருவர்  பார்த்த வண்ணம் ஒருவர்க்கொருவர் 7 ம் இடத்தில் சஞ்சரிப்பார்கள் உம்...  மேஷ்த்தில் ராகு இருந்தால் அதற்கு 7ம் இடமான துலாத்தில் கேது இருக்கும்  ரிஷ்பத்தில் ராகு இருந்தால் விருச்ச்சிகத்தில்  கேது இருக்கும்


1.27 
வக்ரகதி  ..

ராகு கேது  எப்போதுமே இடமிலிருந்து வல்மாக் எல்லா ராசிகளையும் வளைய வரும் anticlockwise .எல்லா கிரகங்களும்  மேஷ்த்திலிருந்து ஆரம்பித்து  ரிஷபம்   மிதுனம் என்று சுற்ற ராகு  கேது  கடகத்திலிருந்து ஆரம்பித்து மிதுனம் ரிஷபம் மேஷம் என்று பின்னுக்கு வந்து சுற்றும் இதே போல்  தான்  நட்சத்திர நிலை.யும்  .எல்லா கிரகங்களும் அசுவனி பரணி கிருத்திகை  ரோஹிணி என்று சுற்றி வர  ராகு கேது  ரோகிணி கிருத்திகை பரணி  அஸ்வினி என்று சஞ்சரிக்கும் ஆனால் சில சந்தர்ப்பங்க்ளில்  செவ்வாய்  புதன்  குரு  சுக்கிரன் சனி என்ற ஐந்து கிரகங்க்ளும்  திடீரென்று பின்னுக்கு வருவதுண்டு இதைத் தான் வக்கிரகதி என்கிறார்கள்  இந்த வக்கிரகதி  தன்மை சில சமயம் வரைதான் நீடிக்கும் பின்  வழக்கம் போல் சுற்ற ஆரம்பித்துவிடும் உதாரணமாக குரு தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்குப்போனபின் சில சம்யங்க்ளுக்கு திரும்பவும் தனுர் ராசிக்கே வந்துவிட்டு பின்  திரும்ப மகர  ராசிக்கு செல்லும் ,இதையே குரு வக்கிரகதியில் சஞ்சரிக்கிறார் என்பார்கள் சூரிய சந்திரனுக்கு இதுபோல்  வக்ரகதி  கிடையாது

1.28 
கிரஹங்கள் பலன் தரும் காலங்கள்

சூரியன், செவ்வாய், கிரஹங்கள் ஆரம்ப காலத்திலேயே பலன்களைக் கொடுப்பார்கள்.
 
சந்திரன், புதன் கிரஹங்கள் அவர்கள் காலம் முழுவதும் பலன்களைக் கொடுப்பார்கள்.
 
குருவும், சுக்ரனும் அவர்கள் காலத்தின் மத்தியில் பலன்களைக் கொடுப்பார்கள்.
 
சனி, ராகு, கேது பிற்காலத்திலேயே பலனைக் கொடுப்பார்கள். 


1.29 
கிரஹங்கள் அடுத்த ராசிகளின் பார்வை 

ஒரு ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்போதுஅதை விட்டுப் போவதற்குமுன்பே அடுத்த ராசிகளைப் பார்ப்பார்கள். கிரஹங்கள்தாங்கள் இருக்கும் ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாறுமுன்அந்தந்த அடுத்த ராசியின் குண விசேஷங்களை முன்னதாகவே அடையப்பெற்றுஅதற்குத் தகுந்தவாறு அடுத்த ராசியின் பலாபலன்களை ஜாதகருக்கு கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அதாவது,
சூரியன் -நாள்
புதன்,சுக்ரன் -நாள்
செவ்வாய் -நாள்
குரு -மாதம்
ராகு,கேது -மாதம்
சனி                                  மாதம்  

1.30 கிரஹங்கள் வலிமை 

உச்சம்  100% வலிமை
மூலத்திரிகோணம் - 90% வலிமை
சொந்த வீடு - 80% வலிமை
நட்பு வீடுகள் - 60% வலிமை
சம வீடுகள் - 50% வலிமை
பகை வீடுகள் - 40% வலிமை
நீச வீடுகள் - 10% வலிமை
இந்த அளவுகள் எல்லாம் எடைபார்க்கும் இயந்திரத்தை வைத்துச் சொல்லப் பட்டதல்ல! அனுபவத்தில் பெற்ற உத்தேச அளவுகள்

1.31 ஷட்பலம்

ஷட்பலம் என்பது ஆறுவகை பலமாகும். அவை ஸ்தானபலம்திக் பலம்சேஷ்ட பலம்கால பலம்திருக் பலம்நைசர்கிக பலம் என்பனவாகும்.


திக் பலம் :

லக்னத்தில் குருவும் புதனும்,
நான்கில் சந்திரன் சுக்கிரன், 
ஏழில் சனிபத்தில் 
சூரியன் செவ்வாய் இருப்பது

ஷட்பலம் அறிவதன் மூலமே கிரகத்தின் உண்மையான வலிமையை அறிய முடியும். மேலும் பாவ பலத்தையும் அறிய வேண்டும். இதன் பிறகே ஜாதகத்தின் பலாபலன்களை சரியாக கணிக்க முடியும். இதை கணிக்க விரிவான ஜோதிட அறிவும் ஓரளவு கணித அறிவும் அவசியம்.


1.32  




1.33 பஞ்சாங்கம் என்றால் என்ன?


பஞ்சாங்கம்னா ஐந்து  அங்கங்கள்னு அர்த்தம்.

அந்த ஐந்து அங்கங்கள்:

1.
வாரம் / நாள்  

2   திதி     

3. நட்சத்திரம்        

4. யோகம்            

5. கரணம்

ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம்.

திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி
வரை உள்ள பதினைந்து நாட்களும்தேய்பிறைப்
பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து
நாட்களும்அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்.



1. பவுர்ணமிஅமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. 
துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. 
திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. 
சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. 
பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. 
சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. 
சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. 
அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. 
நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. 
தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவாதாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. 
ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. 
துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. 
திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. 
சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.
 


பிரதம திதியில்:- அதிபதி :- அக்னி பகவான் 
துதியை திதியில்:-அதிபதி :- துவஷ்டா தேவதை 
திருதியை திதி:- அதிபதி  :- பார்வதி
சதுர்த்தி திதி:- அதிபதி    :- கஜநாதன் [விநாயகர்] 
 பஞ்சமி திதி:- அதிபதி    :- சர்ப்பம்
சஷ்டி திதி:- அதிபதி      :-முருகன்
சப்தமி திதி:- அதிபதி     :- சூரியன் 
அஷ்டமி திதி:- அதிபதி   :- சிவபெருமான் 
நவமி திதி:- அதிபதி      :-பாராசக்தி 
தசமி திதி:- அதிபதி      :- ஆதிசேஷன்
ஏகாதசி திதி:- அதிபதி    :- தர்ம தேவதை
 துவாதசி திதி:- அதிபதி   :- விஷ்ணு 
 திரயோதசி திதி:- அதிபதி :- மன்மதன் 
சதுர்தசி திதி:- அதிபதி    :- கலிபுருஷன்


திதியில் இருந்து பிறந்ததுதான் தேதி

வானவெளியில் சூரியனுக்கும்சந்திரனுக்கும் உள்ள தூரத்தைச் சொல்வதுதான் திதி

விரதங்கள் இருப்பவர்கள்இறைவனுக்கு அபிஷேகம் செய்பவர்கள் இந்தத் திதி பார்த்துத்தான் செய்வார்கள்

அதேபோல் புதுக் கணக்குப் போடுபவர்கள் அதிகம்  விரும்புவது தசமித் திதி

3. 
திருமணம்,  இடம் வாங்குவது போனற சுப காரியங்களைச் செய்பவர்கள் அஷ்டமிநவமி திதியில் செய்வதில்லை.

4. ஒரு மனிதனின் மரணத்தை திதியை வைத்துதான் குறிப்பிடுவார்கள். ஒருவன் ஐப்பசி  மாதம் வளர்பிறை நவமி திதியில் காலமானால்ஒரு ஆண்டு கழித்து அல்லது வருடா வருடம் அவனது சந்ததியினர்அதே ஐப்பசி மாதம் வளர்பிறை நவமி திதியில் தான் அவனுக்கு நினைவுச் சடங்குகளைச்  செய்வார்கள்.கிராமங்களில் தங்கள் வீட்டில் படையல் போடுவார்கள். இதுபோன்று இன்னும் பல பழக்கங்கள் இந்தத் திதியை வைத்துப் பல சமூகங்களில் பலவிதமாக உள்ளது.



 நட்சத்திரம் என்பது அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள். பூமியை சுற்றி சந்திரன் செல்லும் பாதையில் எந்த நட்சத்திரம் உள்ளதோ  அதுதான் அன்றைய ந்ட்சத்திரம். 27 நாட்களில் சந்திரன் வானவெளியில் ஒரு சுற்றை முடித்துவிட்டு அடுத்த சுற்றை அரம்பித்துவிடும்

தினசரி ஒரு நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு நாளும் சந்திரனை வைத்துப் பிறந்த நட்சத்திரம் மாறும்அதேபோல 2.25 நாட்களுக்கு ஒருமுறை பிறந்த ராசியும் மாறும்.

மொத்தம் இருக்கிற 27 நட்சத்திரங்களைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்.. இல்லையா?


கரணம் - என்பது திதியில் பாதி தூரத்தைக் குறிக்கும். 

கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன: 

1. பவ,  
2. பாலவ,  
3. கெலவ,  
4. தைதூலை,  
5. கரசை,  
6. வணிசை,  
7. பத்தரை,  
8. சகுனி,  
9. சதுஷ்பாதம்,   
10.  நாகவம்,  
11. கிம்ஸ்துக்னம்.

வானவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனும்சந்திரனும் செல்கிற மொத்த தூரத்தைக் குறிப்பது யோகம். 





1.34 காரகோ பாவ நாஸ்தி



நாம் ஏற்கனவே - பன்னிரண்டு வீடுகளைப் பற்றி பாடம் பார்த்தோமே, ...அந்த ,   அந்த வீடுகளுக்கு காரகத்துவம் பெரும் கிரகங்களைப் பற்றி கூறி இருந்தேன்... ஞாபகம் இருக்கிறதா?



உதாரணத்திற்கு - ஏழாம் வீடு - களத்திர ஸ்தானம் - காரகம் பெறுவது - சுக்கிரன். ஐந்தாம் வீடு - குழந்தைகள் ஸ்தானம் - காரகம் பெறுவது  - குரு .

கரெக்டா ?  இந்த ஏழு கிரகங்களுமேதனது  காரகம்   பெறும் இடங்களில் நின்றால் - சொதப்பி விடுகிறார்கள். அவர்கள் வேலை பார்ப்பதே இல்லை. 
தனியாக நின்றால் வெகு நிச்சயமாக சொதப்பல். மற்ற கிரகங்களுடன் இணைந்து இருப்பது - பரவா இல்லை.

அதாவது - எந்த லக்கினமாக இருந்தாலும்ஏழில் - சுக்கிரன் தனித்து இருந்தால் , அவர்களுக்கு திருமண விஷயம் அவ்வளவு எளிதாக இருப்பது இல்லை. நிறைய பேருக்கு திருமணமே நடப்பது இல்லை. அல்லது வெகு தாமத திருமணம்... முறைப்படி திருமணம் செய்து குடித்தனம் நடத்த முடியாத நிலை இப்படி..தவறிவிதி விலக்காய்  நடந்தாலும் - கல்யாணம் பண்ணியும் பிரயோஜனம் இல்லாத நிலைமை.  இப்படி....

அதைப் போலவே ,  ஐந்தாம் வீட்டில் - குரு தனித்து நின்றால் - அவர்களுக்கு - குழந்தை பாக்கியம் இருப்பது இல்லை. ஆகா பிரமாதம்ஐந்தில் குரு - நல்லா பக்காவா - திரிகோண ஸ்தானத்தில் இருக்கிறார் என அவசரப் பட்டு விடாதீர்கள்.. 

இதற்க்கு பெயர் தான் காரகோ பாவ நாஸ்தி .... 

இதைக் கூட நிறைய ஜோதிடர்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.. ஆனால் நாம் அடுத்து பார்க்க விருக்கும் விஷயம் - நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை என்பது என் அனுபவம்...

எந்த ஒரு விஷயமும் தெரிஞ்சுக்கிட ரெண்டு வகை இருக்கு. -- ஒன்னு உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற குரு - பக்காவா வெளிப்படையா சொல்லிக் கொடுக்கிறவரா இருக்கணும். ... இல்லையா உங்களுக்கு இயல்பா இருக்கிற ஆர்வம் உங்க தேடுதல் ... உங்களுக்கு நிறைய விஷய ஞானத்தைக்  கொடுக்கும்.


1.35 கேந்திராதிபத்திய தோஷம்  பற்றி :

சுப கிரகங்கள் - கேந்திர அதிபதிகளாக இருந்து  , கேந்திரங்களிலேயே நிற்க - அவராலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்கிறது விதி.. இது எல்லா கிரகங்களுக்கும் இல்லை. முழுக்க முழுக்க சுப கிரகங்களுக்கு மட்டுமே.
இயல்பிலேயே - அசுப கிரகங்களான - செவ்வாய் சனிசூரியன் தேய்பிறை சந்திரன்தீய கிரகங்களுடன் சேர்ந்தால் அசுப கிரகமான புதன் ராகு கேது  - ஆகியோர் கேந்திரங்களில் நின்றால் - தோஷமில்லை.

எனவே கேந்திராதிபத்திய தோஷம் பெறும் கிரகங்கள் - குருசுக்கிரன் வளர்பிறை சந்திரன்தனியாக நிற்கும் புதன்.

இவர்கள் வேறு கிரகங்களுடன் இணைந்து - கேந்திரத்தில் இருந்தால் பரவா இல்லை. தனியே நிற்க கூடாது. 

1.36 பாதகாதிபத்யம்பாதகாதிபதி - விளக்கம்.


மேஷம் கடகம் , துலாம் மகரம் ஆகிய லக்னங்களுக்கு - 11 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.

ரிஷபம் சிம்மம் விருச்சிகம் கும்பம் ஆகிய லக்னங்களுக்கு - 9 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.

மிதுனம் கன்னி தனுசு மீனம் ஆகிய லக்னங்களுக்கு - 7 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.

பாதகாதிபதி பலம் வாய்ந்த எந்த பாவங்களில் இருக்கிறாரோ அந்த பாவங்களில் உருவாகும் பலன்களில் பாதகத்தை செய்வர் .மேலும் பாதகாதிபதி எந்த இடத்தை பார்க்கிறாரோ அந்த இடத்தின் பலன்களும் பாதிக்கப்படும்   இந்த பாதகாதிபதி தீமையான பலன்களை தமது தசா புக்தி காலங்களில் தருவார்.  பாதகாதிபதியை விட பாதக ஸ்தானத்தில் அமரும் கிரகம் அதிக பாதகத்தை தரும் என்பது ஜோதிட விதி.


1.37 பாதகாதிபதி/ மாரகாதிபதி/ யோகாதிபதி தசை

             
பாதகாதிபதி தசை நடகின்றது அப்பொழுது அவனுக்கு பாதகமான செயல்கள் நடக்கும். அவனை அதிகம் துன்பபட வைக்கும்.
           
இதே போல் பார்த்தால் மாரகாதிபதி தசை எப்படி இருக்கும்
இந்த காலங்களில் மரணம் அல்லது மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் வரும்.

அதே போல் தான்ஒருவனுக்கு யோகாதிபதி தசை நடக்கும் போதுஅனைத்து வசதிகளும் வந்து சேரும்.

1.38 போதகன்/ வேதகன்/  பாசகன்/ காரகன்

தசையின் காரக பலன்கள்

தசை
போதகன்
வேதகன்
பாசகன்
   காரகன்






1
சூரியதசை
செவ்வாய்
சுக்கிரன்
சனி
   குரு
2
சந்திரதசை
செவ்வாய்
சூரியன்
சுக்கிரன்
    சனி
3
செவ்வாய் தசை
சந்திரன்
புதன்
சூரியன் 
    சனி
4
குரு தசை
செவ்வாய்
சூரியன்
சனி
  சந்திரன்
5
சுக்கிரன் தசை
குரு
சனி
புதன்
   சூரியன்
6
சனி தசை
சந்திரன்
செவ்வாய்
சுக்கிரன்
    குரு
7
புதன் தசை
குரு
செவ்வாய்
சுக்கிரன்
 சுக்கிரன்

போதகன் :   தனது தசைகளில் வரும் புத்திகளில் தனது பலனைக் கொடுக்கும்.
வேதகன் : பாவத்தின் பலனை மாறுபடச் செய்யும். [ நன்மை தருவதில்லை]
பாசகன் : பாவத்தின் பலன் கிடைக்க உதவி செய்யும்.
காரகன்: சம்பாதித்த பொருளை கிடைக்க உதவி செய்யும்.

1.39 சந்திராஷ்டமம்

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். 
சந்திரன் இருக்கும் நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.
சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோச்சார பலன்களைப் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கிறோம்.
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள், அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன. அந்த
  வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் ‘சந்திராஷ்டமம்’ ஒன்று.
 

நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே
  சந்திராஷ்டமம் என்கிறோம்.  சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான்  ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ் சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள்,  இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக  தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன. 

ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய
  இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம்,  வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள்,  புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களை யும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.  

எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம்
  எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம்  போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள் ஆகும்.
 

வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது, அதே
  நேரத்தில் லாப-நஷ்டங்கள்,  நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன  பலன்கள் ஏற்படும்?
சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம். இரண்டாம் இடத்தில் இருக்கும்போது: பணவரவுக்கு வாய்ப்புண்டு. பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.

மூன்றாம் இடத்தில் இருக்கும்போது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள். நான்காம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய்வழி ஆதரவு.

ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள், தெய்வ பக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம். தாய் மாமன்
  ஆதரவு.

ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன். வீண் விரயங்கள். மறதி, நஷ்டங்கள்.

ஏழாம் இடத்தில் இருக்கும்போது: காதல் நளினங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம். பெண்களால் லாபம், மகிழ்ச்சி.

எட்டாம் இடத்தில் இருக்கும்போது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளலாம். கோயிலுக்குச் சென்று வரலாம்.

ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.

பத்தாம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், நிறை-குறைகள், பண வரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.

பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன
  அமைதி, தரும சிந்தனை.

பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது: வீண் விரயங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள்
  நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

பிறந்த நட்சத்திரம் சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி
   - அனுஷம்
பரணி
      -  கேட்டை
கிருத்திகை
  - மூலம்
ரோகிணி
    - பூராடம்
மிருகசீரிஷம்
-உத்திராடம்
திருவாதிரை
 -திருவோணம்
புனர்பூசம்
    - அவிட்டம்
பூசம்
        - சதயம்
ஆயில்யம்
   பூரட்டாதி
மகம்
        - உத்திரட்டாதி
பூரம்
        - ரேவதி
உத்திரம்
     - அஸ்வினி
அஸ்தம்
     - பரணி
சித்திரை
     - கிருத்திகை
சுவாதி
       - ரோகிணி
விசாகம்
    - மிருகசீரிஷம்
அனுஷம்
    - திருவாதிரை
கேட்டை
     - புனர்பூசம்
மூலம்
       - பூசம்
பூராடம்
      - ஆயில்யம்
உத்திராடம்
  - மகம்
திருவோணம்
பூரம்
அவிட்டம்
    - உத்திரம்
சதயம்
       - அஸ்தம்
பூரட்டாதி
     - சித்திரை
உத்திரட்டாதி
 -சுவாதி
ரேவதி
       - விசாகம்

1.40 ஜோதிடத்தில் விதிமதிகதி 


விதி என்பது இலக்கினம். மதி என்பது சந்திரன் நிற்கும் ராசி. கதி என்பது சூரியன் நிற்கும் ராசி என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இலக்கினம் சந்திரன் சூரியன் இம்மூன்றில் எது வலுவாக இருக்கிறதோ அதை அடிப்படையாக வைத்துத்தான் பலன்கள் நிர்ணயம் செய்யயப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.