Thursday, 19 May 2016

நிலவுக்கு திரும்ப போகாதது ஏன்..? நாசா மறைக்கும் 'டார்க் சீக்ரெட்'..?!

நிலவு, பூமி கிரகத்தின் மிக அருகமையில் இருப்பினும் கூட மறுபடியும் நாம் ஏன் மனிதர்களை அங்கு அனுப்பவில்லை..? இறுதியாக நிலவிற்கு சென்ற அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நிலவு சார்ந்த இருண்ட ரகசியம் எதையாவது மறைகிறதா.? - என்றெல்லாம் நீங்கள் எப்போதாவது யோசித்து உண்டா..?

 அப்படியெல்லாம் யோசித்ததில் இருந்து கிளம்பியது தான் நிலவு சார்ந்த ஒரு சதியாலோசனை கோட்பாடு - டார்க் சீக்ரெட் ஆப் மூன்..!

 wV7Obfb.jpg

நிலவின் முதுகு :

நிலவின் முதுகு அதாவது, பூமியின் எந்தவொரு பகுதியில் இருந்து பார்த்தலும் காணமுடியாத நிலவு பகுதி தான் ஏகப்பட்ட சதியாலோசனைகளும், புரளிகளும் கிளம்ப காரணமாகும்..!

 3TIdhh2.jpg

 ரகசிய தளங்கள் :

நிலவின் முதுகில் ஏலியன் எனப்படும் வேற்றுகிரக வாசிகளின் ரகசிய தளங்கள் (Alien secret Moon base) இருப்பதாக சந்தேகிக்கின்றன சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்..!

 h1KvDBJ.jpg

 மறுபடியும் :

மேலும், செவ்வாய் வரை ஆராயும் நாம், ஏன் மறுபடியும் நிலவிற்கு மனிதர்களை அனுப்பவில்லை..? என்ற கேள்விக்கான பதிலையும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் எதிர் நோக்குகின்றன..!

 XF63CS3.jpg

 திட்டமிடவில்லை :

செவ்வாயில் குடியிருப்புகள் அமைக்க திட்டமிடும் உலக நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஏன் நிலவில் குடியிருப்புகளோ, தளங்களோ அமைக்க திட்டமிடவில்லை என்றும் சதியாலோசனை கோட்பாடுகள் கேள்வி எழுப்புகின்றன..!

 1x5zP5k.jpg

 மூலப்பொருட்கள் :

நிலவானது எந்தவொரு மூலப்பொருட்கள் அல்லது பொருட்களின் அணுகலும் இன்றி செயற்கையாக வடிவமைக்கப்பட்ட ஒரு மிதக்கும் விண்வெளி நிலையத்தை போல் தான் தோன்றுவதாகவும் கோட்பாடுகள் சந்தேகிகிறது.


 ஒற்றுப்போகின்றனர் :

நிலவில் ஏலியன் தளம் உள்ளது அங்கு தரை இறங்குவதும், தங்குவதும் விபரீதமானது என்ற கருத்தோடு, நிலாவற்கு சென்ற நாசாவின் விண்வெளி வீரர்கள் பெரும்பாலும் ஒற்றுப்போகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 yZqnO66.jpg

 மறுபக்கம் :

நிலவு சார்ந்த மர்மமான சதியாலோசனை கோட்பாடுகள் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் கடற்படை புலனாய்வு அலுவலகத்தை (Naval Intelligence Office) சேர்ந்த மில்டன் கூப்பர் நம்ப முடியாத கருத்தொன்றை பகிர்ந்துள்ளார்.

 jyIZQdJ.jpg

 லூனா :

"நிலவில் ஏலியன் தளங்கள் இருப்பது உண்மைதான், அமெரிக்க கடற்படை புலனாய்வு சமூகத்தினரின்படி அந்த தளம் ஆனது 'லூனா' என்று வரையறுக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

 4rdn3ti.jpg

 சுரங்க செயற்பாடுகள் :

அதுமட்டுமின்றி அந்த லூனா பகுதியில் ஒரு பெரிய சுரங்க செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருகிறது என்ற ஆதராமில்லா தகவலையும் கூப்பர் தெரிவித்துள்ளார்.

 5fmT27s.jpg

 தாய் கப்பல்கள் :

அந்த சுரங்க செயல்பாடுகளில் தான், வேற்றுகிரக வாசிகளின் தாய் கப்பல்கள் ஈடுப்பட்டு கொண்டிருக்கின்றன, அதில் இருந்து வரும் சிறிய வகை பறக்கும் தட்டு அல்லது விண்கலங்களை தான் நாம் பூமியில் அவ்வபோது பார்க்க நேரிடுகிறது என்றும் கூப்பர் தெரிவித்துள்ளார்.

 jMNG5iW.jpg

 மீண்டும் நிலவிற்கு :

இதுபோன்ற விபரீதமான காரணங்களால் தான் மனிதர்களை மீண்டும் நிலவிற்கு அனுப்பவில்லை என்பது தான் பெரும்பாலான சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் மற்றும் ஏலியன் நம்பிக்கையாளர்களின் கருத்தாகும்..!

2017 : ஐந்து கருவிகளை வெளியிடும் சாம்சங், ஆனா ஒரு ட்விஸ்ட்.!

ஆப்பிள் நிறுவனம் தனது எஸ் சீரிஸ் வகை ஸ்மார்ட்போன்களை நிறுத்தி விடும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தப்பட்ட ஐபோன் கருவிகளை மட்டும் வரும் ஆண்டுகளில் வெளியிட கூடும் என இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. 

இதோடு அடுத்து வெளியாகும் ஐபோன் 8 கருவியானது முழுமையாக கிளாஸ் பாடி கொண்டி வடிவமைக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. இது ஒரு பக்கம் இருக்க சாம்சங் நிறுவனமும் தன் பங்கிற்கு புதிய திட்டங்களை கையில் வைத்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

kDVZLG4.jpg

சாம்சங்

சாம்சங் நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ஐந்து கருவிகளை வெளியிடும் என்றும் இதில் ஒரு கருவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக அமையும் என்றும் கூறப்படுகின்றது. 

L5PibRw.jpg

4கே டிஸ்ப்ளே

அதன் படி சாம்சங் வெளியிட இருக்கும் ஒரு கருவியில் மடிக்கும் திறன் கொண்ட 4கே டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

RE4YAy0.jpg

கருவிகள்

இதோடு சாம்சங் கேலக்ஸி எஸ்8, எஸ்8 எட்ஜ், கேலக்ஸி நோட் 7, கேலக்ஸி நோட் 7 எட்ஜ் போன்ற கருவிகள் 2017 ஆம் ஆண்டு வெளியாகும். மடிக்கும் திறன் கொண்ட கருவியானது கேலக்ஸி எக்ஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகின்றது. 

Q5AWE29.jpg

கேலக்ஸி எக்ஸ்

எனினும் கேலக்ஸி எக்ஸ் என்பது அந்நிறுவனம் தற்சமயம் வழங்கியிருக்கும் பெயர் தான் என்பதோடு அந்நிறுவனம் ஓஎல்இடி திரை தயாரிப்பதில் பல ஆண்டு அனுபவம் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

m3AuhIO.jpg

திரை

சாம்சங் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் திரை கேல்க்ஸி எஸ்7 எட்ஜ் போன்று வளைந்து இருக்காமல், கருவியை பாழாக்காமல் எப்பவும் திறந்து மூடும் வகையில் திரை உருவாக்க கூடும் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். 

xzwtRg0.jpg

உறுதி

கொரிய சந்தையில் இருந்து வெளியாகும் தகவல்கள் மற்றும் சாம்சங் அதிகப்படியான காப்புரிமைகளை பதிவு செய்வதை வைத்து பார்க்கும் போது மடிக்கும் திறன் கொண்ட கருவிகள் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவே கருதப்படுகின்றது. 

esEYh15.jpg

திட்டம்

சாம்சங் தரப்பில் ப்ராஜக்ட்-வேலி என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி வாலட் போன்று பாதியாக மடித்து வைக்குமளவு இருக்கும் என்றே கூறப்படுகின்றது.

'மீண்டு'ம் களமிறங்கும் நோக்கியா.!

ஒரு காலத்தில் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்த நோக்கியா நிறுவனம், மைக்ரோசாப்ட் வசம் கை மாறியதும் நோக்கியாவின் தாக்கம் குறைவாக இருந்தது. 

எனினும் நோக்கியா நலம் விரும்பிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அந்நிறுவனம் மீண்டும் சந்தையில் வர இருக்கும் செய்திகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

WcT8ZUt.jpg

மைக்ரோசாப்ட்

நோக்கியா பிரான்டினை தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கானிற்கு விற்பனை செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று (18/05/2016) தெரிவித்துள்ளது. 

WAnS2GH.jpg

மதிப்பு

பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் நோக்கியா பிரான்டினை சுமார் $350 மில்லியனிற்கு வாங்குகின்றது.

G8U0QcS.jpg

தயாரிப்பு

இதன் மூலம் ஃபாக்ஸ்கான் நிறுவனம் நோக்கியா பிரான்ட் பயன்படுத்தி பீச்சர் போன், ஸ்மார்ட்போன், மற்றும் டேப்ளெட் கருவிகளை தயாரிக்க முடியும். 

q71KWN5.jpg

லூமியா

2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா பிரான்ட் தவிர்த்து லூமியா மற்றும் விண்டோஸ் போன்களின் மீது அதிக கவனம் செலுத்தியது. 

koJwdIO.jpg

பீச்சர் போன்

ஸ்மார்ட்போன்களை தவிர்த்த போதும் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா பிரான்டினை பீச்சர் போன்களுக்கு மட்டும் பயன்படுத்தி வந்தது.

YkHUy4m.jpg

மவுசு

மேற்கு பகுதிகளில் விற்பனை குறைந்த போதும் சர்வதேச அளவில் பீச்சர் போன்களுக்கான சந்தை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் கருவிகளை விட அதிகமாகவே இருக்கின்றது. 

ay2nBMi.jpg

விற்பனை

2015 ஆம் ஆண்டு பீச்சர் போன்களின் விற்பனை சர்வதேச அளவில் சுமார் 590 மில்லியன் வரை இருக்கும் என முன் அறிவிப்புகளில் எதிர்பார்க்கப்பட்டது, இது ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் பாதியாகும். 

4TCcpUf.jpg

கணிப்பு

மேலும் 2019 ஆம் ஆண்டுகளில் பீச்சர் போன்களின் விற்பனையானது சுமார் 350 மில்லியன் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யூரோப்பா கடல் மேற்பரப்பின் அடியில் உயிர்கள் பதுங்கி கிடக்கிறதா..?

வியாழன் கிரகத்தின் அறியப்பட்ட 67 நிலவுகளில் ஒன்றான யூரோப்பா (europa) பற்றி கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா புதிய ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டது. புவியின் நிலவைவை விட சற்றே சிறியதான யூரோப்பா - சிலிக்கேட் பாறைகளால் ஆனது என்றும், அதன் கரும்பகுதியில் இரும்பு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இதன் பலம் குன்றிய வளிமண்டலத்தில் முதன்மையானதாக ஆக்சிசன் உள்ளது, பனிக்கட்டிகளால் ஆன இதன் மேற்பரப்பு சூரிய மண்டலத்திலேயே மிகவும் பள்ளம் மேடற்ற ஒரு விண்வெளி பொருளாகும்..!

 hPTpZug.jpg

இரசாயன சமநிலை :

தற்போது யூரோப்பாவின் சமுத்திரங்கள் ஆனது, நமது பூமி கிரக சமூத்திரங்களோடு சமநிலை பெற்றுள்ளது என்றும் முக்கியமாக வாழ்வாதார திறன் வளர்க்க வல்ல ஒரு இரசாயன சமநிலை கொண்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

 7kITtKK.jpg

அன்னிய வாழ்க்கை :

 இதன் மூலம், அண்டத்தில் அன்னிய வாழ்க்கையை கண்டுபிடிக்க மிகவும் நம்பிக்கைக்குரிய இடங்களில் ஒன்றாக யூரோப்பா கருதப்படுவதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 noABW2m.jpg

அன்னிய வாழ்க்கை :

பூமியில் அளவில் நான்கில் ஒரு பங்கு இருக்கும் இந்த ஜூப்பிடர் நிலவானது தடித்த பனியிலான ஷெல் மூலம் மூடப்பட்டிருக்கும்போதும் அதன் அடியில் ஒரு ஆழமான உப்பு கடல் இருக்க முடியும் என்ற வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.

 WKiNwAb.jpg

உற்பத்தி செய்முறை :

 யூரோப்பாவின் சாத்தியமான ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் முறையை பூமியின் உற்பத்தி முறையுடன் ஒப்பிட்டு நாசாவின் ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகம் ஆய்வு செய்துள்ளது.

 tDxTaJj.jpg

இயக்க காரணம் :

அதன் மூலம் யுரோப்பாவின் கடலில் நிகழும் ஆக்சிஜன் - ஹைட்ரஜன் உற்பத்திதான் யூரோப்பா கடலின் வேதியியல் மற்றும் அங்கு வாழும் எந்தவிதமான வாழ்க்கைக்கும் ஒரு முக்கிய இயக்க காரணமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

 B1e1GhD.jpg

ஆக்சிஜன் :

உடன் யூரோப்பாவில் ஹைட்ரஜனை விட பத்து மடங்கு அதிக ஆக்சிஜன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் தான் தோராயமாக பூமியிலும் உள்ளது.

 GGsUGlr.jpg

பதில் :

அங்கு உயிர் சாத்தியமா என்ற கேள்விக்கு, அடுத்தபடியாக கார்பன் மற்றும் நைட்ரஜன் போன்றவைகள் அங்கு இருக்கிறதா என்பதை கண்டறிவதின் மூலம் பதில் கிடைக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.