Wednesday, 15 April 2020

3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத கோவில்.!

3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத கோவில்.!

எல்லோரா குகையினுள் உள்ள கைலாசநாதர் கோவிலானது முற்றிலும் மனித கைகளினால் குடைந்து கட்டப்பட்ட கோவில் தானா.? - என்ற சந்தகேத்தின் அடிப்படையிலான கேள்விகளை பல நூற்றாண்டு காலமாக தொல்பொருள் ஆய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுப்பி வருகின்றனர். 



3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத கோவில்.! உலகின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றான கைலாச கோவில் ஆனது, கோபுரத்தின் உச்சியில் தொடங்கி கீழ் நுனியை நோக்கிய - கார்வ்டு-இன் டெக்னீக் - கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. 

அதாவது "கீழிருந்து மேல் நோக்கிய கட்டமைப்பு" என்று ஆரம்பகாலத்தில் இருந்தே மனித இனம் பின்பற்றிய கட்டமைப்பு முறைக்கு முற்றிலும் தலைகீழான முறையில் இக்கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது - இதுதான் இக்கோவில் சார்ந்த அனைத்து புதிர்கள் மற்றும் சந்தேகங்களுக்குமான ஆரம்ப புள்ளி.! 
குகைக்கோயில் குகைக்கோயில் எல்லோரா கைலாசநாதர் கோயில் - பாறையைக் குடைந்து உருவாக்கம் பெற்ற பண்டைய இந்து மத கோயில்களில் ஒன்றாகும். இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள எல்லோராவில் அமைந்துள்ள குகைக்கோயில்களில் ஒன்றான இது - பெரியதொரு மலையைக் குடைந்து அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. 
திராவிட கலைப்பாணிக்குரிய பண்பு திராவிட கலைப்பாணிக்குரிய பண்பு இராஷ்டிரகூட பேரரசின் முதலாம் கிருஷ்ணன் ஆட்சிக் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) கட்டமைக்கப்பட்டுள்ள இக்கோயில், திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளையும், இராஷ்டிரகூட கலைப்பாணியின் அம்சங்களையும், பல்லவ கலை பண்புகளையும் ஒருங்கே கொண்டுள்ள "வித்தியாசமான" கட்டமைப்பாகும். பிரம்மாண்டமான மலைத்தளி பிரம்மாண்டமான மலைத்தளி தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்து மலைத்தளிகளைப் போலில்லாமல் இதுவொரு முழுமையான ஆலயம் ஒன்றின் அம்சங்களைக் கொண்ட பிரம்மாண்டமான மலைத்தளியாக காட்சியளிக்கின்றது. 

அந்த பிரம்மாண்டத்தின் பின்னால் இந்த எல்லோரா கைலாசநாதர் கோவிலானது பல ரகசியங்களையும் புதைத்து வைத்துள்ளது. மேம்பட்ட மற்றும் அதிநவீனதத்தும் மேம்பட்ட மற்றும் அதிநவீனதத்தும் அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய நாகரீகங்களானது, மிகவும் மேம்பட்ட மற்றும் அதிநவீனதத்துவமாக இருந்துள்ளதாக நம்பப்படுகிறது. அதை சுட்டிக்காட்டும் பண்டைய தளங்களில் மிகவும் பலமான ஆதாரமாக - இக்கோவில் திகழ்கிறது. வெறும் 18 ஆண்டுகளில் வெறும் 18 ஆண்டுகளில் எட்டாம் நூற்றாண்டிலேயே எந்த விதமான 'நவீன' தொழில்நுட்ப பயன்படுமின்றி மலைப்பாறைகள் வெட்டி குடையப்பட்டது எப்படி.? 


இந்தியாவில் மட்டுமின்றி மற்றும் வெளிநாடுகளில் உள்ள வரலாற்றாசிரியர்கள் உட்பட 400,000 டன் எடை அளவிலான பாறைகளை அகற்றி, வெறும் 18 ஆண்டுகளில் இம்மாதிரியான கோவிலை கட்டிமுடிப்பது மனிதர்களால் முடியாத காரியமென்று கூறுகின்றனர். கோவிலை இடித்து நொறுக்க கட்டளையிட்டுள்ளார் கோவிலை இடித்து நொறுக்க கட்டளையிட்டுள்ளார் சுற்றியுள்ள எல்லோரா குகைப்பாறையில் தோண்டிய 16-வது கோவிலான தான் கைலாச நாதர் கோவில் என்பதும், அங்கு மொத்தம் 34 குகைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றின் படி, முகலாய பேரரசரான அவுரங்கசீப், கைலாச கோவிலை இடித்து நொறுக்க கட்டளையிட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கும் மேலாக 3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடிப்பு வேலையை நிகழ்த்த அவர் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அனுப்பியுள்ளார். ஆனால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இரவும் பகலும் வேலை செய்தும் கூட கைலாச கோவிலின் சில சிலைகளை மட்டுமே அவர்களால் சிதறடிக்பட்டுள்ளது என்கிறது வரலாற்று குறிப்புகள். 


 இது சாத்தியமில்லை 

தொல்பொருளியல் நிபுணர்களின் கருத்துக்களை பொறுத்தமட்டில், தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்ப முறைகள் அந்த காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தியத்தினால் உருவானதே இக்கோவில், இல்லையெனில் இது சாத்தியமில்லை என்று கூறுகின்றனர். 

ஒரே நேரத்தில் தோண்டபடவில்லை.! 

எல்லோரா குகைகள் அனைத்துமே பண்டைய செங்குத்து குழி முறையை பயன்படுத்தி தான் உருவாக்கம் பெற்றதா.? அப்படியானால் சுத்தியல், உளிகள், மற்றும் குத்துக்கோடரி மட்டுமே பயன்படுத்தப்பட்டு இவைகள் உருவாகினவா.? சாத்தியமேயில்லை. இந்திய வரலாற்றாசிரியர், தொல்பொருள் மற்றும் 'எல்லோரா' புத்தகத்தின் ஆசிரியருமான எம்.கே. தவலிகர் கருத்தின் படி "கைலாசநாதர் கோவில் சன்னதிகள் மற்றும் கைலாச கோவில் ஆனது ஒரே நேரத்தில் தோண்டபடவில்லை. வெவ்வேறு காலகட்டங்களுக்கு சொந்தமான பல கட்டுமான பணிகளின் விளைவாகும்"


 எட்டாம் நூற்றாண்டு பிராமி சித்திர எழுத்துக்கள்

 "இதற்கு ஆதாரமாய் கைலாச நாதர் கோவிலின் மேற்கு சுவரில் ஒரு துளை ஜன்னலில் எட்டாம் நூற்றாண்டு பிராமி சித்திர வடிவிலான சமஸ்கிருத எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன, இதே போல சில தூண்களில் ஒன்பதாம் நூற்றாண்டு எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன" என்கிறார்.

சிக்கலான மற்றும் அசாதாரண கட்டமைப்பு

 வெவ்வேறு காலகட்டத்தில் கட்டப்பட்டிருந்தாலும் கூட நிச்சயமாக இந்த கண்கவர் குகைகள் சாதாரண சுத்தியல் மற்றும் உளிகளால் மட்டுமே உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை என்பதும் தான் இங்கு சர்ச்சை. நாகரீ வரலாற்றின் மிகவும் சிக்கலான மற்றும் அசாதாரண கட்டமைப்புகளில் ஒன்றான இந்த கைலாசநாதர் கோவில் கட்டப்பட்ட விளக்கம் தொல்பொருள் ஆய்வாளர்கள் மத்தியில் நேற்றும், இன்றும், ஏன் நாளையும் கூட ஒரு பரபரப்பான தேடல் தான்.

No comments:

Post a Comment