இராவணனின் மறுபக்கம் பற்றிய தகவல்கள்!!!
எந்த ஒரு கதையும் வில்லன் இல்லையெனில், சுவாரஸ்யம் இருப்பதில்லை. உண்மையில் வில்லன்கள் இல்லையெனில், அந்த கதைகளே உருவாவதில்லை. மகாபாரதத்தில் துரியோதனன், சகுனி போன்றவர்கள் பிறவாமல் இருந்திருந்தால், மகாபாரதம் என்ற காவியமே பிறந்திருக்காது.
அந்த வகையில், இராமாயணத்திற்கு, இராவணன். வில்லன் என்பதற்கான அனைத்து தகுதிகளும், குணாதிசயங்களும் கொண்ட ஒருவன். பெண்ணாசை பொல்லாதது, அது நமது நல்ல பாதியையும், மற்ற செல்வங்களையும் சேர்த்து அழித்துவிடும் என்ற கருத்திற்கு உருவகமாய் திகழ்ந்தவன், இராவணன்.
இராவணன் என்று சொல்லும் போதே, புருவங்கள் உயர்ந்து, மார்கள் புடைத்து, மனதினுள் ஓர் கொடூரமான எண்ணம் உருவாகும். ஆனால், அவனுள்ளும் நல்ல விஷயங்கள் பல இருந்தன…..
வீணை வாசிப்பதில் திறமைசாலி
இராவணனை நாம் அனைவரும் ஓர் கொரூரமான வில்லனாகவும், அரக்கனாகவும் தான் பார்த்திருப்போம். ஆனால், அதையும் தாண்டிய பல நல்ல விஷயங்கள் கொண்டிருந்தான் இராவணன். இராவணன் ஓர் நல்ல இசைப் பிரியன். வீணை வாசிப்பதில் இராவணன் கைத்தேர்ந்தவன்.
புத்திசாலி
பத்துத் தலைகளுக்கு ஏற்ப அதிக புத்தி கூர்மையும் கொண்டவன் இராவணன். வேதங்கள் அனைத்தும் படித்த இராவணன், நல்ல கல்விமானும் கூட.
சிவபக்தன்
சிவன் என்றால் இராவணனுக்கு அவ்வளவு பிடிக்கும். சிவன் மீது அலாதி பிரியம் கொண்டவன். நாள்தோறும் தவறாது சிவபெருமானை வழிபட்டு வந்தான் இராவணன். பெரும் சிவபக்தனாக திகழ்ந்தான்.
சகோதர பகைமை
இராமரை எதிர்த்து போரிட முடிவு செய்த பிறகு, இராவணின் அனைத்து அமைச்சர்களும் அந்த முடிவை ஆதரித்தனர். ஆனால், இராவணனின் தம்பி விபீஷணன் மட்டும், வேண்டாம், சீதையை விடுவித்துவிட்டு, இராமரிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று உரைத்தான். இதனால் கோபமடைந்து, தனது ராஜாங்கத்தில் இருந்து விபீஷணனை வெளியேற்றினான் இராவணன்.
விபீஷணன் இராமருக்கு உதவி
பிறகு இராமரிடம் தஞ்சம் புகுந்த விபீஷணன், அந்த போர் முடிவின் வரை இராமருக்கு உதவியை இருந்து, வெற்றிபெற உதவினான். இதனால், இராவணனை வென்ற பிறகு, ராமர் இலங்கையின் அரசனாய் விபீஷணனை நியமித்தார்.
எதிர்காலம் அறிந்தவன் இராவணன்
இராவணன் அவனது எதிர்காலத்தை அறிந்தவன். ஒருவேளை இராம, லக்ஷ்மணன் வெறும் மனிதர்களாக இருந்தால், நான் அவர்களை வென்று சீதையை கரம் பிடிப்பேன் என்றும், அவர்கள் கடவுளாக இருந்தால், அவர்களின் அம்புகளுக்கு பலியாகி முக்தி / மோட்சம் அடைவேன் என்றும் அறிந்திருந்தான்.
பத்து தலை இராவணன்
இராவணனுக்கு உண்மையிலேயே பத்து தலைகள் கிடையாது. இராவணனின் தந்தை மாமுனிவர் வைச்ரவ மகரிஷி ஓர் அணிகலனை பரிசளித்தார். அதை அணியும் போது, ஒளியின் எதிரொளியாக பத்து தலைகள் உள்ளது போல தெரியுமாம். உண்மையில் இராவணனுக்கு எண்ணற்ற தலைகள் இருக்கிறது என்பதற்கும் இது தான் காரணம்.
இராவணனின் அண்ணன், ஆயிரம் தலை இராவணன்
அட்புத்தா இராமாயணதில் (Adbhuta Ramayana), இராவணனுக்கு அண்ணன் ஒருவன் இருந்தான். அவன் பெயரும் இராவணன் தான் என்றும் அவன் ஆயிரம் தலை இராவணன் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த வகையில் உண்மை என்று தெரியவில்லை.
ஆயுர்வேத மருத்துவம்
இராவணன் மிகவும் படித்தவன், இவன் ஆயுர்வேத மருத்துவத்தை பற்றி புத்தகம் எழுதியாதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி பல புத்தகங்கள் இராவணன் எழுதியாதாகவும் தெரியவருகிறது.
மாட்டிறைச்சி பற்றிய புத்தகம்
மாட்டிறைச்சி உண்பதால் மனிதர்களுக்கு ஏற்படும் 98 புதிய நோய்களை பற்றியும் இராவணன் எழுதியுள்ளான்.
குழந்தை நலம்
மண்டோதரி கர்பிணியாக இருந்த போது, குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும் அதற்கான மருத்துவம் குறித்தும் கூட இராவணன் புத்தகம் எழுதியிருந்தானாம்.

No comments:
Post a Comment