Monday 12 August 2024

இரான் Iran

  பாரோக்களின் எகிப்து, கிரேக்க பேரரசு, ரோமானிய பேரரசு, ஆட்டோமான் துருக்கி...என 2000 ஆண்டுகளாக தொடர்ந்து உலகின் பலம் வாய்ந்த பேரரசுகளின் பரம எதிரி இரான். இரானை வென்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எப்படி ஒரு நாட்டால் இத்தனை பேரரசுகளை எதிர்த்து நிற்க முடிந்தது?

காரணம் இரானின் புவிவியல் தான்



இரானுக்கும், இராக்குக்கும் இடையே ஜக்ரோஸ் மலைத்தொடர் உள்ளது. 900 கிமி நீளம், 240 கிமி அகலம்.
இந்த மலைத்தொடரின் கணவாய்களில் படைகளை சரியாக கணக்கிட்டு நிறுத்தினால் எத்தனை பெரிய பேரரசின் படைகளையும் சிறு படைகளை கொண்டு சமாளிக்கலாம்.
அப்படியும் மலையை தாண்டி வந்தால் மிகப்பெரும் இரு பாலைவனங்கள் உள்ளன. அதில் ஒன்று உப்பு பாலைவனம். 800 கிமி நீளம், 320 கிமி அகலம்.
இந்த பாலைவனத்தில் படைகளை நடத்துவது இயலாத காரியம். இது முழுக்க சேற்று நிலம், அதை மூடி இருக்கும் உப்புபாறைகள். அதன் மேல் செல்லும் தேர்கள், குதிரைகள், டாங்கிகள்..அனைத்தையும் அப்படியே அலாக் ஆக விழுங்கும் தன்மை கொண்டது இது.
ஜக்ரோஸ் மலைக்கு மேற்கே இராக்குக்கு அருகே தெற்கே சிறியதாக ஒரு 125 மைல் பரப்பு காணப்படுகிறது அல்லவா?



மேற்கே இருந்து (இராக் வழியே) தாக்குபவர்களால் இந்த பகுதியை தான் கைப்பற்ற முடியும். ஆனால் அதுவும் எளிதல்ல. அது முழுக்க சதுப்பு நிலம்.
ஆக மேற்கே இராக் வழியே இருந்து இரானை தாக்கி கைப்பற்றூவது கிட்டத்தட்ட இயலாத காரியம். அதை செய்தவர் அலெக்சாந்தர். ஆனால் அவரும் அதை செய்ய மிகவும் திண்டாடிவிட்டார். வெறும் 700 வீரர்களை கொண்ட ஒரு பாரசிக படைப்பிரிவு கணவாய்கள் வழியே தாக்குதல் நடத்தி அவரை மாதக்கணக்கில் திண்டாட வைத்தது. இறுதியில் கிட்டத்தட்ட படுதோல்வி எனும் நிலையில், பிடிபட்ட கைதி ஒருவன் கணவாய் குறுக்கு வழியை காட்டிகொடுக்க, அலெக்சாந்தர் அதன்வழியே சென்று பின்னே இருந்து தாக்கி அந்த படைப்பிரிவை அழித்தார்.
இராந் இராக் போர் எட்டு வருடம் நடக்க காரணமும் இதுதான். இருதரப்பும் மாறி, மாறி அந்த சதுப்புநில பகுதியை கைப்பற்றுவார்கள். ஆனால் அதை தாண்டி உள்ள ஜக்ரோஸ் மலையை தாண்டி இரானுக்குள் நுழைய இராக்கால் முடியாது. மலைக்குள் நுழைந்தால் கொரில்லா தாக்குதல் நடத்தி இரான் அவர்களை விரட்டும். இரானாலும் மலைகளில் டாங்கிகள், பீரங்கிகளை எளிதில் கொண்டு வந்து இராக்கில் தாக்க முடியாது.
ஆக இருதரப்புக்கும் இடையே ஸ்டேல்மேட் எட்டு ஆண்டுகள் நீடித்தது. ஒருவரின் கை ஓங்கினால் மறுதரப்பு டிபன்ஸ் ஆடி டிரா செய்துவிடும்.
ஒரு கட்டத்தில் அமெரிக்கா, ரஷ்யா இருவரும் இணைந்து இராக்குக்கு ஏராளமாக ஆயுதங்களை கொடுக்க, மலைக்கணவாய்களில் இராக்கிய டாங்கிகள் நுழைய, வேறு வழியின்றி "மனித அலை" எனும் பெயரில் மக்கள் கையில் துப்பாக்கிகள், கிரனைடுகளை எல்லாம் கொடுத்து டாங்கிகள் மேல் விழ சொன்னது இரான். ஏராளமான பொதுமக்கள் இறந்தாலும், டாங்கிகளுக்கும் பெருத்த சேதம். ஒருமுறை இராக்கின் ஆயிரம் டாங்கிகளை இப்படி மீட்டு கைப்பற்றி புதிய டாங்கி பிரிவையே உருவாக்கியது இரான்.
இராக் எல்லை அருகே பதுங்குகுழிகளை ஏராளமாக தோண்டி அதனுள் வீரர்களை இறக்கி இரானிய படை உள்ளெ வராமல் செய்தார் சதாம்.
எட்டு ஆண்டுகள் போர்.,,லட்சகணக்கில் உயிர்சேதம். இராக் ஜிடிபியில் 75% போருக்கு மட்டுமே செலவானது. யாருக்கும் வெற்றி, தோல்வி இன்றி டிராவில் முடிந்த போர்.
இரு வல்லரசுகளும் இராக்குக்கு உதவியும் இரானை அவர்களால் வெல்ல முடியவில்லை. காரணம் இரானின் புவியியல்.

No comments:

Post a Comment