Sunday, 29 November 2015

காந்தாரி அம்மன் யார்?-தமிழருக்கான புதிய உண்மை

காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமிழ் நாட்டிலே தாமிரபரணி ஆற்றங்கரையிலே நடந்த போராகும். அந்தப் போர் உண்மையிலேயே மலைவாழ் குரவர்களுக்கும், அப்போது புதிதாகத் தோன்றிய உழவுக்குடிகளான பாண்டியர்களுக்கும் நடந்த போராகும். காடுகளைக் களைந்து ஆற்றோரம் உழவு செய்யத் தொடங்கியவுடனே, பாண்டியர்கள் பொருளாதாரத்திலும், தொழில் நுட்பங்களிலும் உயரத் தொடங்கிவிட்டனர்.

இதைக்கண்ட ஆதிக்குடிகளான மலைவாழ் குரவர்களுக்கு பொறாமை உண்டாகி, அவர்கள் பாண்டியரிடம் வம்பிழுக்கின்றனர். தமிழக நில அமைப்பில், மருத நிலத்திற்கும், குறிஞ்சிக்கும் இடையே முல்லை இருப்பதை இன்றும் காணலாம். அந்த முல்லையை ஆண்ட கிருட்டிணன், இருவருக்கும் சமரசம் செய்ய முயன்று தோற்கிறார். அவர் இரண்டு நிலங்களுக்குமிடையில் வாழ்வதால் இருவருக்குமே நட்பாயிருக்கிறார். அதனால், போரில் நடுநிலை வகுக்கிறார். இருந்தாலும் பாண்டவருக்கு நல்ல திட்டங்களை வகுத்துக் கொடுத்து சிறிய படையான பாண்டியர் படையை, பெரிய படையான குரவர் (கௌரவர்) படையை வெற்றி கொள்ள வைக்கிறார். அவர் போரை வெல்ல நல்ல கருத்துக்களை (Idea) சொன்னதால் தான் அவருக்கு கருத்தினன் என்ற பட்டப் பெயர் கிடைக்கிறது. அதுவே, கிருத்தினன் ஆகி, கிருட்டினன் ஆகி, யூத பிராமணர்களால் கிருஷ்ணனும் ஆனது.

கருத்தினன் –> கிருத்தினன் –> கிருட்டினன் –> கிருஷ்ணன்.

குரவர் என்ற சொல் தான் கௌரவர் ஆனது. மகா பாரதத்திலே வரும் பெயர்கள் எல்லாமே பட்டப் பெயர்களே! துரியோதனன் என்பது “துர்+ஓதனன்” என்றிருந்து மருவியது. துர் என்றால் கெட்டது என்பதால் இங்கே அநியாயம் என்று பொருள் கொள்கிறது. ஓதனன் என்பது பேசுபவன் என்று பொருள். அதாவது துரியோதனன் அநியாயம் பேசுபவன் என்று பொருள். இவர்கள் நூறு பேர் என்பது நூறு குரவர் குடி மன்னர்களைக் குறிக்கும்.

இந்த நூறு குரவர் குடிகளையும் திரட்டி பாண்டியர்களுக்கு எதிராக போரிட வைத்தவன் தான் திருதிராட்ஷன். இங்கு திரு என்பது அடைமொழி. திராட்ஷன் என்பதன் மூலம் திராட்டன் என்பதே. வேஷ்டியின் மூலம் வேட்டி என்பது போல. திராட்டன் என்பது திரட்டன் என்பதின் நீட்டமே! திரட்டன் என்பது திரட்டியவன் என்பதே!

இப்படித் திரட்டியவர்களைப் போர் முடியும் வரை “காந்தம்” போலக் கவர்ந்து பிரியாமல் காத்தவள் காந்தாரி. அவள் இயல்பாகவே தலைவன் திருதிராட்டினனின் மனைவி. அவளது பட்டப் பெயர் காந்தம் என்ற சொல்லிலிருந்தே உருவானது. இதில் இன்னுமொரு விஞ்ஞாணச் செய்தி என்னவென்றால், மகாபாரதக் காலமாகிய, அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்களுக்கு காந்தம் அதாவது Magnet தெரிந்திருக்கிறது. அதாவது இரும்பும் தெரிந்திருக்கிறது. மலைவாழ் காலத்திலேயே தமிழன் இரும்பு பிரித்தறிந்துள்ளான்.

இரும்புக்கு கரும்பொன் என்ற பெயர் உள்ளதால், அதற்குமுன்பே பொன்னையும் அறிந்தவன்.
காந்தாரியின் உடன் பிறந்தவன் தான் சகுனி. அவனது திட்டப்படியும், சதிப்படியும் பாண்டியர் சதுரங்க ஆட்டத்தில் தோற்று, பாஞ்சாலியின் துகில் உரிக்கும் நேரத்தில் தலை குனிந்ததால், அவன் அனைவரையும் தலை குனிய வைத்ததால் அவனுக்கு சம்+குனி –> சங்குனி –> சகுனி என்ற பட்டப் பெயர் வந்தது. சம் என்றால் “அனைத்தையும்” அல்லது “ஒட்டுக்க” அல்லது “கூட்டாக” என்று பொருள். ஆங்கிலச் சொல் சம் = Sum என்பது தமிழ்ச்சொல்லே!

பாஞ்சாலி என்பது நிலத்தைக் குறிக்கும். மருத நிலத்தைக் குறிக்கும். ஐந்து ஆளுக்கும் சொந்தமானவள் என்பதால் பாஞ்சாலி என்ற பட்டப் பெயர் வந்தது. அவள் பெண்ணல்ல. ஆனால், கதைக்காக பெண்ணாக உருவகம் செய்யப்பட்டாள். அவள் நிலம் என்பதால் தரைபதி அதாவது தரைதெய்வம் என்றழைக்கப்பட்டு தரைபதியே (த்ரபதி –> த்ரௌபதி –> திரௌபதி) திரௌபதி ஆனாள். அதாவது குரவர், கௌரவர் ஆனது போல. திரௌபதிக்குக் கோயில்கள் தமிழ் மண்ணில் மட்டுமே உண்டு. அவள் ஆசீவகத்தின் பச்சையம்மாளே! அவளே மீனாட்சியும் ஆகும். அவள் பாண்டியரின் கடவுளானது எப்படி என்று இப்போது புரிகிறதா?

குரவர் சமூகம் இன்றும் துரியோதனனுக்கு கோயில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டுள்ளது. சகுனிக்கும் கோயில் உள்ளது. இது இன்றும் குரவர்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது. அந்தக் கோயில்கள் இப்போதும் கேரள மாநிலத்தை சேர்ந்த கொல்லத்தில் உள்ளது.
அதேபோல, காந்தாரியையும் வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இன்றும் உள்ளது. யீசன் அதாவது சிவன், மலைக்குரவர் என்பதால், மலைக்குரவர்களின் ஆதித் தலைவியாகிய காந்தாரியம்மனும் காளியாகவே வழிபடப்படவேண்டும். காந்தாரியம்மன் ஆசீவகத்தின் காளியே!
ஆதிச்ச நல்லூர் என்பது மகா பாரதத்தின் அஸ்தினாபுரமே! “ஆதி நற்புரம்” என்ற சொல்லே அஸ்தினாபுரம் ஆனது. “ஆதிச்ச நல்லூரும்”, “ஆதி நற்புரமும்” ஒரே பொருள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“குரவர் சேர் தரை” தான் குருஷேத்திரம் ஆனது.
சேர் + தரை –> சேர் + த்ர –> சேர்த்ர –> ஷேத்ர –> ஷேத்ரம்.

மக்கள் சேரும் இடம் தான் ஷேத்ரம். குரவர் சேரும் இடம் குரவர்ஷேத்ரம் –> குரஷேத்ரம் –> குருஷேத்ரம் ஆனது. ஆதாவது, பாண்டியரிடம் சண்டையிட மலையிலிருந்து இறங்கி தரையில் குரவர்கள் ஒன்று கூடிய இடம் குருஷேத்ரம்.

ஐந்து யுகங்களைப் பற்றிய தீரக்க தரிசனத்தைக் கூறியவர் கிருட்டினனே! அவர் சொன்ன நல்லக் கருத்துக்களைத் திருடியே, அதனோடு தங்களது வன்மங்களையும் சேர்த்து (அதாவது கொல்வது பாவமல்ல போன்ற அயோக்கியக் கருத்துக்களை), பகவத் கீதையை எழுதிக்கொண்டனர் யூத பிராமணர்கள்.

ஆக, குறிஞ்சி நில மக்கள் காந்தாரி அம்மனை வழிபடுவது வரலாற்று நியதி. குறிஞ்சாங்குளம் என்ற சொல்லிலேயே குறிஞ்சி நிலம் என்ற உண்மை உள்ளது. குறிஞ்சாங்குளம் ஆதிச்ச நல்லூர் அமைந்திருக்கும் தென் பகுதியிலே இருப்பது, வரலாற்றின் சுவடுகளை கன்னித் தமிழ் எப்படிக் காத்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

எனவே, மண்ணின் மைந்தர்கள் தங்களது ஆதி தெய்வத்தை வழிபடுவதைத் தடுக்க வந்தேறித் தெலுங்கருக்கு எள்ளளவும் உரிமை இல்லை. தெலுங்கரின் கொட்டம் ஒடுக்கப்படவேண்டும்.

பிரெஞ்சுப் புரட்சியின் இரத்த சரித்திரம்

கம்யூனிசத்தை வெறுக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகளிடம், சில புள்ளிவிபரங்கள் எப்போதும் கைவசம் இருக்கும். ஸ்டாலின் கால ரஷ்யாவில், இறந்தவர் எத்தனை? மாவோ கால சீனாவில் இறந்தவர் எத்தனை? பொல் பொட் கால கம்போடியாவில் இறந்தவர் எத்தனை? இதற்கான விடைகளை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.
 
 
சிலநேரம், ஸ்டாலின் கொன்ற ரஷ்யர்களின் தொகை, அன்றைய ரஷ்ய சனத்தொகையை விட அதிகமாக இருக்கலாம். அதே மாதிரி, மாவோவும் மொத்த சீன சனத்தொகையை விட அதிகமானோரை கொன்றிருக்கலாம். அப்படியான சந்தேகங்களை யாரும் எழுப்பக் கூடாது. அறிவுஜீவிகளின் மேதைமையை நாங்கள் சந்தேகப் பட முடியுமா?
 
அவர்களிடம், 1793 நடந்த பிரெஞ்சுப் புரட்சி கொன்ற, பிரெஞ்சு மக்களின் தொகை எவ்வளவு என்று கேட்டுப் பாருங்கள். பதில் தெரியாமல் திரு திரு என்று முழிப்பார்கள். பிரான்சில், 1793க்கும் 1794 க்கும் இடையிலான ஒரு வருடத்தில் மட்டும், மொத்தம் ஐந்து இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டார்கள்! சிலவற்றை “இனப்படுகொலை” என்ற வரையறைக்குள் அடக்கலாம். 
 
எந்தக் குற்றமும் புரிந்திராத, இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்.
பிரான்சில் நடந்த புரட்சியானது, இன்றைய முதலாளித்துவ – லிபரல் அரசுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. இன்று நாங்கள் “ஜனநாயகம்” என்று கூறிக் கொள்ளும் சிவில் சட்டம், அரசு நிர்வாகம், தேசிய இராணுவம், இன்னபிறவற்றை பிரெஞ்சுப் புரட்சி தான் தந்தது. பிரான்சில் புரட்சி நடந்திரா விட்டால், இன்று ஐரோப்பாவிலும், உலகம் முழுவதும் மன்னராட்சி நிலைத்து நின்றிருக்கும்.
 
பிரான்சில் புரட்சி நடந்தது பற்றி மட்டுமே, பல வரலாற்று நூல்களில் எழுதப் பட்டுள்ளது. ஆனால், புரட்சிக்குப் பிறகு என்ன நடந்தது என்ற விபரத்தை எங்கேயும் காண முடியாது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர் என்ன நடந்ததோ, அதை விட மிகவும் மோசமான சம்பவங்கள் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்துள்ளன. ஏனெனில், புரட்சி என்பது மாலை நேர தேநீர் விருந்து அல்ல.
 
ரஷ்யாவில் நடந்த புரட்சியில், தலைநகரான சென் பீட்டர்ஸ்பேர்க் மட்டுமே, லெனின் தலைமையிலான சமூக ஜனநாயக போல்ஷெவிக் கட்சியினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. ரஷ்யாவின் பிற பாகங்களில் மென்ஷெவிக் மற்றும் சார் மன்னனுக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் நிலவியது. அதனால், அங்கு ஓர் உள்நாட்டுப் போர் வெடித்தது. இந்த விபரங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அதே மாதிரியான வரலாற்று நிகழ்வுகள், பிரான்சிலும் நடந்தன என்ற விபரம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
 
பிரான்சில், தலைநகர் பாரிஸ் மட்டுமே புரட்சியாளர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தலைநகருக்கு வெளியே பல இடங்களில், மன்னருக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. வேறு சில அரசியல் சக்திகளும், பாரிஸ் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து கொண்டிருந்தன.
 
பிரான்சின் தெற்குப் பகுதிகளில், கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமான படையினரும், மேற்குப் பகுதிகளில் நிலப்பிரபுக்களுக்கு விசுவாசமான படையினரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். கிழக்குப் பகுதிகளில் சற்று வித்தியாசமான கிளர்ச்சி நடந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு ஆதரவான, ஆனால் பாரிஸ் அரசுக்கு எதிரான சமஷ்டிவாதிகளின் கை ஓங்கி இருந்தது.
 
பிரெஞ்சுப் புரட்சியானது, வெகு விரைவில் எதிர்ப்புரட்சியாளர்களினால் தோற்கடிக்கப் படும் அபாயம் நிலவியது. அதனால், மக்ஸ்மில்லியன் தெ ரொபெஸ்பியர் தலைமையில் ஒரு சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. அவர்கள் அதனை, “கொடுங்கோன்மைக்கு எதிரான சுதந்திரத்தின் சர்வாதிகாரம்” என்று நியாயப் படுத்தினார்கள்.
 
சோவியத் யூனியனை ஸ்தாபித்த கம்யூனிசப் புரட்சியாளர்கள், “பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்” நிலைநாட்டப் பட்டதாக கூறிய பொழுது, எத்தனை பேர் அதைப் பரிகசித்தார்கள்? சர்வாதிகாரம் என்ற சொல்லை சுட்டிக் காட்டியே எம்மைப் பயமுறுத்தியவர்கள் எத்தனை? அதே நேரம், பிரான்ஸ் நிலைநாட்டிய “சுதந்திரத்தின் (பூர்ஷுவா வர்க்க) சர்வாதிகாரம்” அவர்களின் கண்களுக்கு தெரியாமல் போனது எப்படி?
 
அது என்ன “சுதந்திரத்தின் சர்வாதிகாரம்”? இதைக் கேள்விப்படும் நீங்கள், “சர்வாதிகாரம் சுதந்திரத்திற்கு எதிரானது” என்றெண்ணி சிரிக்கலாம். உங்கள் எண்ணம் தவறானது. நாங்கள் நவீன உலகின் மனிதர்கள் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறோம். 
 
அன்றைய காலகட்டம் வேறு. புரட்சிக்கு முன்னர், மன்னர் குடும்பமும், நிலப்பிரபுக்களின் குடும்பங்களும் மட்டுமே சுதந்திரத்தை அனுபவித்து வந்தன. குடி மக்களுக்கு உரிமைகளே இருக்கவில்லை. அதனால், குடிமக்களுக்கான சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கு சர்வாதிகாரம் இன்றியமையாதது என்று கருதப் பட்டது.
 
நமது காலத்தில், இன்றைய சமூகத்தில் வசதியான வாழ்க்கை வாழும், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், அரசு ஊழியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் போன்றோர் நடுத்தர வர்க்கம் (பிரெஞ்சு மொழியில்: பூர்ஷுவா வர்க்கம்) என்று அழைக்கப் படுகின்றனர். அவர்கள் ஏதோ ஒரு வகையில், நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தெரிந்து வைத்துள்ளனர்.

புரட்சிக்கு முந்திய ஐரோப்பாவில், நடுத்தர வர்க்கத்தினர் வறுமையில் வாடினார்கள்.  நமது காலத்தில், நம் தாயகத்தில் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட, அன்றிருந்த ஐரோப்பிய மருத்துவர்களுக்கு கிடைக்கவில்லை. வைத்தியம் பார்ப்பது ஒரு கீழ்த்தரமான, வருமானம் குறைவாகக் கிடைத்த தொழிலாகக் கருதப் பட்டது. ஏனையோரைப் பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை.

பிரெஞ்சுப் புரட்சியானது, மேற்குறிப்பிட்ட நடுத்தர வர்க்க (பூர்ஷுவா) மக்களின் ஆதரவில் தான் வெற்றி பெற்றது. நிலப்பிரபுக்களுக்கு எதிரான அவர்களது கோபம், அரச மட்டத்திலும் எதிரொலித்தது. சோவியத் யூனியனில், ஸ்டாலின் காலத்தில் பிரபுக்கள், முதலாளிய, மேட்டுக்குடி வர்க்கங்களை சேர்ந்த எல்லோரும் சந்தேகப் பட்டு கொல்லப் பட்டதும், சிறையில் அடைக்கப் பட்டதும் தெரிந்திருக்கும்.
 
பிரான்சிலும் அதே தான் நடந்தது. பிரபுக்கள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்ல, பிரபு குலத்தில் பிறந்த அத்தனை பேரும் சந்தேகிக்கப் பட்டனர். கத்தோலிக்க மதகுருக்கள், மதத் தலைவர்கள் எல்லோரும் சந்தேகிக்கப் பட்டனர். புரட்சிப் படைகளின் கைகளில் அவர்கள் அகப்பட்டால் மரணம் நிச்சயம். யாருமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப் படவில்லை. கைது செய்யப் பட்டவர்கள் ஒன்றில் விடுதலை செய்யப் பட்டனர், அல்லது கொல்லப் பட்டனர்.
1793 ஆம் ஆண்டு, பிரெஞ்சுப் புரட்சியை பாதுகாப்பதற்காக “பொதுநல கமிட்டி” ஒன்று உருவாக்கப் பட்டது. பாரிசில் அதுவே “ஆளும் கட்சியாக” இருந்தது. முன்னாள் வழக்கறிஞரான ரொபெஸ்பியர் அதன் தலைவராக இருந்தார். உண்மையில் ரொபெஸ்பியரின் கையில் தான் அதிகாரம் குவிந்திருந்தது. பிரபுக்களினதும், கத்தோலிக்க மதத்தினதும் ஒடுக்குமுறையில் இருந்து, மக்களை விடுதலை செய்வதே தனது இலட்சியம் என்றவர், தானே ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். அதனால் தான், புரட்சியாளர்களில் ஒரு பிரிவினரும் அவருக்கு எதிராக திரும்பினார்கள்.
 
ஸ்டாலின் காலத்தில், “மக்கள் விரோதிகள்” என்ற குற்றச்சாட்டின் பேரில் பலர் கைது செய்யப்பட்டனர் அல்லது கொல்லப் பட்டனர். பிரான்சில் ரொபெஸ்பியர் காலத்திலும் அதே தான் நடந்தது. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், ஒன்றில் “துரோகிகள்” அல்லது “மக்கள் விரோதிகள்” என்று முத்திரை குத்தப் பட்டார்கள். என்ன விலை கொடுத்தேனும் எதிர்ப்புரட்சியாளர்களிடம் இருந்து புரட்சியை பாதுகாக்க வேண்டும் என்பது ரொபெஸ்பியரின் குறிக்கோள்.
 
“ஒரு மக்கள் அரசு, தார்மீக ஒழுக்கத்தாலும், பயங்கரவாதத்தாலும் நிலைநிறுத்தப் படும். குறுகிய காலத்திற்குள் எழுந்து நிற்பதற்கு பயங்கரவாதம் நியாயப்படுத்தப் படலாம்…” என்பது ரொபெஸ்பியரின் வாதம். “நாங்கள் துரோகிகளை மட்டுமல்லாது, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் அத்தனை பேரையும் தீர்த்துக் கட்டுவோம். வாள் மட்டுமே மக்களையும், அவர்களின் எதிரிகளையும் பிரித்து வைக்கும்….” இது 1793, செப்டம்பர் 5 அன்று ரொபெஸ்பியர் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி.
 
ரொபெஸ்பியரின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஜான் பால் மாராட் வெளியிட்ட “மக்களின் நண்பன்” (L’ Ami du Peuple) பத்திரிகை, பின்வருமாறு தலையங்கம் தீட்டியது: 
 
“துரோகிகளின் இரத்தத்தை ஆறாக ஓட வைப்போம். எமது நாட்டை மீட்பதற்கு அதுவே ஒரேயொரு வழி!”

Sunday, 15 November 2015

இந்த நூற்றாண்டின் தொழில்நுட்ப தோல்விகள்..!!

தொழில்நுட்ப சந்தையில் வெளியாகும் அனைத்து கருவிகளும் வெற்றி பெற வேண்டும் என எவ்வித அவசியமும் கிடையாது. ஒரு கருவி வெற்றி பெற அதன் பின் நிறைய காரணங்களும் அதற்கான தேவை மக்கள் மத்தியில் இருத்தல் மிகவும் அவசியமாகும்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாற்றில் பல கருவிகள் வெற்றி பெற்றுள்ளன, இதே போல் பல கருவிகள் மக்களுக்கு தெரியாமலே தோல்வியையும் தழுவியிருக்கின்றன. அந்த வகையில் மக்களுக்கு தெரிந்திராத மிகப்பெரிய தொழில்நுட்ப தோல்விகள் எவை என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

05-1446727226-01.jpg

3காம் எர்கோ ஆட்ரீ

2001 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட ஆட்ரீ மின்னஞ்சல்களை அனுப்புவது, இண்டர்நெட் ப்ரவுசிங் மேற்கொள்ளும் இந்த கருவி வெளியான சில காலத்திலேயே விற்பனை கைவிடப்பட்டது.

05-1446727227-02.jpg

தி செக்வே

2001 ஆம் ஆண்டு வெளியான இந்த கருவியும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்றே கூற வேண்டும். மிக குறைந்த விற்பனை காரணமாக இந்த கருவியும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

05-1446727229-03.jpg

மைக்ரோசாப்ட் ஸ்பாட் வாட்ச்

2004 ஆம் ஆண்டு வெளியான ஸ்மார்ட் பெர்சனல் ஆப்ஜக்ட்ஸ் டெக்னாலஜி ( Smart Personal Objects Technology) தான் ஸ்பாட் (SPOT). இந்த ஸ்மார்ட்வாட்ச் கருவியானது எஃப்எம் ரேடியோ சிக்னல், வானிலை, ஜிபிஎஸ் போன்ற சேவைகளை வழங்கியது, என்றாலும் இவை மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாமலேயே தோல்வியை தழுவியது.

05-1446727230-04.jpg

நோக்கியா என்-கேஜ்

கேமிங் மற்றும் மொபைல் போன் என இரு வித பயன்பாடுகளை வழங்கும் வகையில் வடிமைக்கப்பட்டாலும் மோசமான கேம், மற்றும் பயனற்ற பட்டன்கள் போன்றவை இந்த கருவியின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகின்றது.

05-1446727231-05.jpg

கிஸ்மோடோ டைகர்

டெலிமேடிக்ஸ் நிறுவனம் 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த கருவி சோனி மற்றும் நின்டென்டோ போன்ற நிறுவனங்களுடன் நேரடி போட்டியை ஏற்படுத்த நினைத்து மிகப்பெரும் தோல்வியை தழுவியது. இந்த கருவிகள் உலகம் முழுக்க 25,000 யுனிட்களுக்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டன.

05-1446727233-06.jpg

தி ஸூன்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் கருவிகளுக்கு போட்டியாக வெளியிடப்பட்ட ஸூன் சந்தையில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

05-1446727234-07.jpg

மைக்ரோசாப்ட் கின்

ஐபோன் மற்றும் ஆண்டிராய்டுகளுக்கு போட்டியாக வெளியான மைக்ரோசாப்ட் நிறுவனத்திந் கின் சந்தையில் சுமார் 72 நாட்கள் மட்டுமே நிலைக்க முடிந்தது.

05-1446727236-08.jpg

ஔயா

ஆண்ட்ராய்டு சார்ந்த கேமிங் சிஸ்டம் தான் ஔயா. அதிகம் எதிர்பார்க்கப்பட்டாலும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

05-1446727237-09.jpg

அமேசான் ஃபயர் போன்

அதிக விலையில் வெளியிடப்பட்ட இந்த கருவியானது ஐபோன் மற்றும் சாம்சங் கேலக்ஸி கருவிகளுக்கு போட்டியாக வெளியிடப்பட்டது. இருந்தும் மோசமான பேட்டரி, இன்டர்ஃபேஸ் என பல்வேறு கோளாறுகளின் காரணமாக தோல்வியடைந்தது.

05-1446727238-10.jpg

கூகுள் கிளாஸ்

கூகுள் நிறுவனத்தின் கிளாஸ் கருவியும் சந்தையில் தோல்வியை தழுவியது என்றே கூற வேண்டும். குதர்க்கமான வாய்ஸ் கமான்டு, செய்கைகளினால் இந்த கருவி தோல்வியை தழுவியதாக கூறப்படுகின்றது.

நாம் பயன்படுத்தும் பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு பின் மறைக்கப்பட்ட வரலாறுகள்

தொழில்நுட்ப யுகத்தில் இன்று நாம் பயன்படுத்தும் பல்வேறு அதி நவீன தொழில்நுட்பங்களுக்கு பின் மறைக்கப்பட்ட பல வரலாறுகள் இருக்கின்றன. இது போன்று மறைக்கப்பட்ட வரலாறுகளினால் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக கருதப்படும் பல்வேறு தொழில்நுட்ப சேவைகளின் தோற்றம் குறித்த பல திடுக்கிடும் தகவல்களும் மக்களுக்கு தெரியமாலே இருக்கின்றது.

அந்த வகையில் மக்களுக்கு தெரிய கூடாது என மக்களிடம் இருந்து மறைக்கப்பட்ட இன்றை தொழில்நுட்பங்களின் ஆதிகால கண்டுபிடிப்புகள் சார்ந்த தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

12-1447311373-01.jpg
ர்ந்த எஃப்.ஏ. முல்லர் ஆவார், இவர் 1887 ஆம் ஆண்டு இதை கண்டறிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

12-1447311378-03.jpg

காண்டாக்ட் லென்ஸ்

எஃப்.ஏ முல்லர் தான் காண்டாக்ட் லென்ஸ்களை முதலில் கண்டறிந்தார் என கூறப்பட்டாலும் ஸ்விஸ் நாட்டை சேர்ந்த அடால்ஃப் ஈ.ஃபிக் மற்றும் பாரிஸ் ஆப்டிஷியனான எடௌர்டு கால்ட் இணைந்து 1888 ஆம் ஆண்டு காண்டாக்ட் லென்ஸ்களை கண்டறிந்தனர் என்றும் கூறப்படுகின்றது.

12-1447311381-04.jpg

சமூக வலைதளம்

இன்று சமூக வலைதளங்களை பிரபலப்படுத்தியது மார்க் சூக்கர்பர்க் தான் என நினைத்து கொண்டிருப்போருக்கு இந்த தகவல் சற்றே ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.

12-1447311385-05.jpg

நெதர்லாந்து

1560களில் இன்று நெதர்லாந்து மற்றும் ரைன்லாந்து என அழைக்கப்படும் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் கல்வியை பயில உலகம் முழுக்க பயணித்தனர், இவ்வாறு பயணம் செய்வோர் தங்களுக்கு பிடித்தமானவர்கள் சார்ந்த தகவல்களை ஆங்காங்கே குறித்து வைப்பர், சில சமயங்களில் அவர்கள் சார்ந்த வரைபடங்களையும் படமாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

12-1447312749-06.jpg

தொலைபேசி

உலகின் முதல் தொலைபேசியை கிரஹாம் பெல் கண்டறிந்தார் என்ற செய்தி முற்றிலும் தவறு என கூறப்பட்டு வருகின்றது. உண்மையில் தொலைபேசியை கண்டறிந்தவர் யார் என்பது இன்று வரை குதர்க்கமான விஷயமாகவே இருக்கின்றது எனலாம்..

12-1447312750-07.jpg

தொலைபேசி

உண்மையில் தொலைபேசி கருவியானது 1200 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டது என்றும் இந்த கருவி சிமு நாகரீகத்தை சேர்ந்தவர்களால் கண்டறியப்பட்டது என கூறப்படுகின்றது.

12-1447312752-08.jpg

ஆதாரம்

சிமு நாகரீகத்தை சேர்ந்தவர்கள் கண்டறிந்த தொலைபேசியானது அமெரிக்க இந்திய தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனை கண்டறிந்தது பாரோன் வால்ராம் வி. வான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

12-1447312759-09.jpg

தொலைபேசி

மேலும் சிமு நாகரீகத்தினர் கண்டறிந்த தொலைபேசியில் 9 செ.மீ நாளம் கொண்ட இரு ரிசீவர்கள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

12-1447314795-10.jpg

வாகனம்

நீராவி மூலம் இயங்கும் உலகின் முதல் வாகனத்தை கண்டறிந்தவர் நிகோலஸ் ஜோசப் கஃனட் ஆவர், இவர் இந்த வாகனத்தை 1769 ஆம் ஆண்டு கண்டறிந்தார் என்பதோடு இந்த வாகனம் மணிக்கு 3 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

12-1447314797-11.jpg

நீர்மூழ்கி கப்பல்

முதல் உலக போரின் போது கண்டறியப்பட்டதாக கருதப்படும் நீர்மூழ்கி கப்பல்கள் வில்லியம் போர்ன் என்பவரால் 1580களில் கட்டமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

12-1447314798-12.jpg

பயன்பாடு

எனினும் 1890களில் ஜான் பி. ஹாலாந்து மற்றும் சைமன் லேக் முறையே அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்காக கண்டறிந்தனர்.

12-1447314799-13.jpg

குறுந்தகவல்

இன்று பெரும்பாலான இளைஞர்கள் குறுந்தகவல்களில் பயன்படுத்தும் சுருக்கெழுத்து முறையானது 1890களில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

12-1447314801-14.jpg

ஆப்பிள் 1

உலகெங்கும் ஆப்பிள் 1 கம்ப்யூட்டரை கண்டறிந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்றே நினைத்திருக்கின்றனர், ஆனால் ஆப்பிள் 1 கம்ப்யூட்டரை கண்டறிந்தது ஸ்டீவ் வோஸ்நியாக் என்பது பலரும் அறிந்திராத விஷயமாகவே இருக்கின்றது.

Friday, 14 August 2015

பிடல் காஸ்ட்ரோ - புரட்சியின் இடி முழக்கம்

கியூபாவை இன்றுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாத்தியத்திடம் இருந்து தனது தேசத்தை கட்டிக்காப்பாற்றி வந்த பெருமை கியூபாவின் புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோவையே சாரும்.
 

 
சே குவேரா உள்ளிட்ட பல தென் அமெரிக்கா நாடுகளின் இடதுசாரி தலைவர்களையும் அமெரிக்கா மற்றும் அதன் உளவு அமைப்பான சிஐஏ-வும் படுகொலை செய்து தனது ஏகாதிபத்திய வெறியை தீர்த்துக்கொண்டுள்ளது.
 

 
ஆனால், அவர்களால், எத்தனையோ சதிகளுக்கு மத்தியிலும் கியூபாவை தனது கொடிய அணு குண்டுகளாலோ, போர் பயங்கரவாதத்தாலோ அதன் நிழலைக்கூட அசைத்துக்கூட பார்க்க முடியாததற்கு ஒரே காரணம், அந்த தேசத்தின் நாயகன், மக்களின் ஆதர்ஷமாகவும், ஒரே மந்திரமாகவும் இன்றளவும் திகழ்ந்து வரும் ஃபிடல் காஸ்ட்ரோதான்.
 

 
அமெரிக்கா இதுவரையில் 634 முறை ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல செய்ய முயற்சி செய்யதுள்ளது. அவருக்கு பிடித்தமான சுருட்டு, மருந்து மாத்திரைகள், உணவுப்பொருட்கள், ஏன், அவரின் தாடியின் ரோமத்தை கொட்டவைக்கக்கூட முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களால், ஒரு ரோமத்தை உதிரவைக்க முடியவில்லை.
 
1926ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் தேதி கியூபாவின் கரும்புத் தோட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ பிறந்தார். 1941இல் தனது 15ஆவது வயதில், ஃபிடல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது.
 
காஸ்ட்ரோ  சிறு வயதில் ஒரு தீவிர கத்தோலிக்கர். ஆனால் பிறகு அவர் ஒரு நாத்திகராக மாறிவிட்டார். 1945ஆம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார். ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது.
 

 
காஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும். 1945ஆம் ஆண்டு ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகுதான், அரசியலால் ஈர்க்கப்பட்டு, கல்லூரி அரசியலிலும் பங்கு கொண்டார்.
 
அப்போது, கல்லூரியில் இரண்டு முக்கிய கட்சிகள் இயங்கி கொண்டிருந்தன. ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஹொசே மார்த்தியின் ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். 1952ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாள் பாடிஸ்டா கியூச அரசின் அரியணை ஏறினார்.
 

 
பாடிஸ்டா அரசில் அடக்குமுறைகளும், ஊழல்களும் நிறைந்திருந்தன. அதே வேளையில், தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் பிணியிலும், வறுமையில் உழண்டனர். இதனிடையே ஃபிடல் கல்லூரி மாணவர் தேர்தலில் வெற்றி கண்டார். பின்னர், பாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சியில் தோல்வியடைய அவரை ராணுவத்தினர் கைது செய்தனர்.
 
அப்போது, நீதிமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதுவே, பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்ற பெயரில் வெளிவந்தது.
 

 
”நீங்கள் என்னை தண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்” என்றார். பின்னர், 1955ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.
 
அதன் பின்னர், கொரில்லா பானியிலான தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். அப்போது அவருடன் வந்து சேர்ந்தவர்தான் அர்ஜெண்டைனாவை சேர்ந்த எர்னஸ்டோ சே குவேரா. இருவரும் இணைந்து பாடிஸ்டா அரசுக்கு எதிரான கொரில்லா போருக்கு தலைமை தாங்கினர்.
 
1953ஆம் ஆண்டு முதல் 1959 ஜனவரி முதல் தேதி வரை சுமார் ஐந்தரை ஆண்டுகள் இருவரும் பல தாக்குதலுக்குப் பிறகு, பனி, மழை என பொருட்படுத்தாது, குளிரிலும் வெயிலிலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக போராடினர். ஆயுதப்போரட்டத்தின் மூலம் கியூப புரட்சியை முன்னெடுத்துச் சென்றனர்.
 
சே குவேரா, ”லத்தீன் அமெரிக்காவின் எங்களுடைய இந்த புரட்சி அனைத்து அமெரிக்க உடைமைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நாங்கள் இந்த நாடுகளுக்கு சொல்கிறோம், இங்கே எங்களின் சொந்த புரட்சியை உருவாக்குகிறோம்” என்று முழங்கினார்.
 

 
1959ஆம் ஆண்டுக்கு பிறகு கியூபா தன்னை கம்யூனிஸ நாடாக அறிவித்துக்கொண்டது. தனது நாடு ஒருபோதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து போகாது என்று அறிவித்தார். தனது நாட்டின் செல்வ வளங்கள் அனைத்து கியூப மக்களுக்கே என்றார்.
 

 
1960ஆம் ஆண்டு, ஐநா மாமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. 4 மணி 29 நிமிடம் கொண்ட இந்த மிக நீண்ட உரையாகும். அதற்கும் மேலாக, 1986 ஆம் வருடம், ஹவானாவில் நடந்த கம்யுனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் அவர் பேசிய நேரம், 7 மணி நேரம், 10 நிமிடங்கள் ஆகும். கிட்டத்தட்ட இரண்டு கின்னஸ் சாதனையாகும்!
 

 
இந்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகள், கியூபாவை பணிய வைக்க முயற்சிகள் பலிக்கவில்லை. இதனால், கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நாடு என்ற முத்திரையையும் அபாண்டமாக சுமத்தியது. ஆனாலும், ஃபிடல் காஸ்ட்ரோ அசரவில்லை.
 
பனாமாவில் நடைபெற்ற மாநாட்டுக்காக கலந்துகொள்ள சென்றபோது, 50 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தற்போதைய கியூப அதிபர் ரால் காஸ்ட்ரோவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சந்தித்துக் கொண்டனர்.
 

 
1959 ஆம் ஆண்டிற்குப் பிறகு கியூப அதிபரும் அமெரிக்க அதிபரும் சந்தித்துக் கொள்வது இதுவே முதன் முறையாகும். கடைசியாக, கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ, 1959 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க துணை அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சனும் சந்தித்து பேசியதுதான் கடைசி தடவையாகும்.
 

 
இத்தனை பெருமைகளுக்கும், கியூப மக்களின், உலக மக்களின் உரிமைகளுக்கும் பேசிய, எழுதிய, போராடிய, வாழ்ந்த மகத்தான தோழர் ஃபிடல் காஸ்ட்ரோவின் பிறந்த நாளை [13-08-15] இன்று நினைவில் ஏந்துவோம்.
 

 
”உலகத்தில் எந்த மூலையிலும் சுரண்டப்படுபவர்கள் நமது தேசாபிமானிகளே, சுரண்டுபவர்கள் நமது எதிரிகள்… உண்மையில் உலகமே நமது நாடு, உலகம் முழுவதும் உள்ள புரட்சியாளர்கள் நமது சகோதரர்கள்” என்ற அவரின் வார்த்தைகளை கொண்டாடுவோம்..
 
 
 

Sunday, 12 July 2015

தவறாக மெயில சென்ட் பண்ணிட்டா? கவலை வேண்டாம் ஜிமெயிலில் புதிய சேவை அறிமுகம்

இதுவரை மின்னஞ்சல் சேவை நிறுவனங்களில் இல்லாத ஒரு வசதியை ஜிமெயில் இன்று அறிமுகம் செய்துள்ளது.



அதாவது, ஜிமெயிலில் தவறுதலாக மெயிலை அனுப்பிவிட்ட பிறகு, 30 நொடிக்குள் அதனை ரீ சென்ட் என்னும் ஆப்ஷன் மூலமாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வசதியை ஒவ்வொருவரும் ஜிமெயில் செட்டிங்கில் சென்று லேப்ஸ் ஆப்ஷனில் அன்டூ சென்ட் என்ற பிரிவில் அன்டூ என்ற சேவையை எனேபல் செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த மாற்றத்தை சேவ் செய்துவிட்டு வரவேண்டும்.

இதன்பிறகு, நீங்கள் ஒவ்வொரு மெயிலையும் அனுப்பிய பிறகு ஒரு ஆப்ஷன் வரும். அதில், அனுப்பிய மெயிலை திரும்பப் பெற வேண்டும் என்றால் அன்சென்ட் என்ற ஆப்ஷனை க்ளிக்கினால் போதும், உங்கள் மெயில் ரிட்டர்ன் வந்து விடும்.

Saturday, 27 June 2015

யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு

“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)

பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும்.

சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார்.

பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர்.

புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.

ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை).

அதன் படி, ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.

சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.

பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியாளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை.

மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.

1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.

கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர்.

முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.

டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை.

இருப்பினும், அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள். (யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், "யாஹ்வே" அல்லது "எல்" (ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர்.

கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும்.

இன்று, இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.

யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது.

முதலில், யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா (மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரையில்,  யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர்.

குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும் (அல்ஜீரியா-மொரோக்கோ), குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.

நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை.

யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன.

இன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது.

முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள்.

இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.

கஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது.

புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.

இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது.

உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது.

தமது ஆக்கிரமிப்பு, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமினை (அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.