தொழில்நுட்ப
சந்தையில் வெளியாகும் அனைத்து கருவிகளும் வெற்றி பெற வேண்டும் என எவ்வித
அவசியமும் கிடையாது. ஒரு கருவி வெற்றி பெற அதன் பின் நிறைய காரணங்களும்
அதற்கான தேவை மக்கள் மத்தியில் இருத்தல் மிகவும் அவசியமாகும்.
தொழில்நுட்ப
வளர்ச்சியின் வரலாற்றில் பல கருவிகள் வெற்றி பெற்றுள்ளன, இதே போல் பல
கருவிகள் மக்களுக்கு தெரியாமலே தோல்வியையும் தழுவியிருக்கின்றன. அந்த
வகையில் மக்களுக்கு தெரிந்திராத மிகப்பெரிய தொழில்நுட்ப தோல்விகள் எவை
என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
3காம் எர்கோ ஆட்ரீ
2001
ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட ஆட்ரீ மின்னஞ்சல்களை அனுப்புவது, இண்டர்நெட்
ப்ரவுசிங் மேற்கொள்ளும் இந்த கருவி வெளியான சில காலத்திலேயே விற்பனை
கைவிடப்பட்டது.
தி செக்வே
2001
ஆம் ஆண்டு வெளியான இந்த கருவியும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை
என்றே கூற வேண்டும். மிக குறைந்த விற்பனை காரணமாக இந்த கருவியும் தோல்வியை
தழுவியது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் ஸ்பாட் வாட்ச்
2004
ஆம் ஆண்டு வெளியான ஸ்மார்ட் பெர்சனல் ஆப்ஜக்ட்ஸ் டெக்னாலஜி ( Smart
Personal Objects Technology) தான் ஸ்பாட் (SPOT). இந்த ஸ்மார்ட்வாட்ச்
கருவியானது எஃப்எம் ரேடியோ சிக்னல், வானிலை, ஜிபிஎஸ் போன்ற சேவைகளை
வழங்கியது, என்றாலும் இவை மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாமலேயே
தோல்வியை தழுவியது.
நோக்கியா என்-கேஜ்
கேமிங்
மற்றும் மொபைல் போன் என இரு வித பயன்பாடுகளை வழங்கும் வகையில்
வடிமைக்கப்பட்டாலும் மோசமான கேம், மற்றும் பயனற்ற பட்டன்கள் போன்றவை இந்த
கருவியின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகின்றது.
கிஸ்மோடோ டைகர்
டெலிமேடிக்ஸ்
நிறுவனம் 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த கருவி சோனி மற்றும் நின்டென்டோ
போன்ற நிறுவனங்களுடன் நேரடி போட்டியை ஏற்படுத்த நினைத்து மிகப்பெரும்
தோல்வியை தழுவியது. இந்த கருவிகள் உலகம் முழுக்க 25,000 யுனிட்களுக்கும்
குறைவாகவே விற்பனை செய்யப்பட்டன.
தி ஸூன்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் கருவிகளுக்கு போட்டியாக வெளியிடப்பட்ட ஸூன் சந்தையில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
மைக்ரோசாப்ட் கின்
ஐபோன் மற்றும் ஆண்டிராய்டுகளுக்கு போட்டியாக வெளியான மைக்ரோசாப்ட் நிறுவனத்திந் கின் சந்தையில் சுமார் 72 நாட்கள் மட்டுமே நிலைக்க முடிந்தது.
ஔயா
ஆண்ட்ராய்டு சார்ந்த கேமிங் சிஸ்டம் தான் ஔயா. அதிகம் எதிர்பார்க்கப்பட்டாலும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
அமேசான் ஃபயர் போன்
அதிக
விலையில் வெளியிடப்பட்ட இந்த கருவியானது ஐபோன் மற்றும் சாம்சங் கேலக்ஸி
கருவிகளுக்கு போட்டியாக வெளியிடப்பட்டது. இருந்தும் மோசமான பேட்டரி,
இன்டர்ஃபேஸ் என பல்வேறு கோளாறுகளின் காரணமாக தோல்வியடைந்தது.
கூகுள் கிளாஸ்
கூகுள்
நிறுவனத்தின் கிளாஸ் கருவியும் சந்தையில் தோல்வியை தழுவியது என்றே கூற
வேண்டும். குதர்க்கமான வாய்ஸ் கமான்டு, செய்கைகளினால் இந்த கருவி தோல்வியை
தழுவியதாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment