நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
நேதாஜி என்றால் தலைவர் என்று பொருள். குவேரா அவர்களை சே என்றழைப்பது போல சுபாஷ் சந்திர போஸை நேதாஜி என்று வடநாட்டவர்கள் அழைக்கிறார்கள்.
போஸ் என்பது வங்காளத்தில் உள்ள பிராமண உட்பிரிவான கயஸ்தா என்ற பிரிவினர் பயன்படுத்தும் பெயராகும்.
நேதாஜி என்றால் தலைவர் என்று பொருள். குவேரா அவர்களை சே என்றழைப்பது போல சுபாஷ் சந்திர போஸை நேதாஜி என்று வடநாட்டவர்கள் அழைக்கிறார்கள்.
போஸ் என்பது வங்காளத்தில் உள்ள பிராமண உட்பிரிவான கயஸ்தா என்ற பிரிவினர் பயன்படுத்தும் பெயராகும்.
இவர் பிறந்த தினம் 1897 ஜனவரி 23.
இவர் இளம் வயதில் எதிலும் பற்றற்று
இருந்ததுடன் தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஆன்மிகபாதையை தேடி
அலைந்தார். அப்போது, தன்னை தேச பணியில் அர்ப்பணித்துக்கொள்ளுமாறு வாரணாசி
ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தர் தன்னிடம்
கேட்டுக்கொண்டதாக என்று கூறுகிறார்.
இவர் கல்லூரியில் பயிலும் போது ஆங்கில
இனவெறி மிக்க ஆசிரியரான சி. எப். ஓட்டன் என்ற ஆசிரியரை எதிர்த்து
சண்டையிட்டதற்காக இவர் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும்
ஆங்கிலேயனிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன்
படித்துப் பெற்ற தனது பதவியை துறந்தார்.
ஆங்கில ஆதிக்க ஆட்சிக்கு எதிராக ஆயுதம்
ஏந்தாமல் போராடியவர் காந்தி. ஆயுதம் ஏந்தி போராடியவர் நேதாஜி. இதற்காகவே,
சுதந்திர இந்திய இராணுவம் என்ற மாபெரும் அமைப்ைப ஆரம்பித்து நடத்தியவர்
தேதாஜி. இதற்காகவே ஆசாத்ஹிந்த் என்ற வானொலியையும் உருவாக்கினார்.
ஆயுதம் எடுத்து போராட்டம் செய்யக்கூடாது
என்ற கொள்கையில் உறுதியாய் இருந்ததால், ஜாலியன்வாலா பாக் படுகொலை நடத்திய
ஜெனரல் டயரை கொன்ற உத்தம் சிங்கிற்கு ஆட்சேபம் தெரிவித்தார் காந்தி. ஆனால்
போஸ், உத்தம் சிங்கைஅவரை பாராட்டினார்.
காந்தி எதிர்த்ததால் அவரைச் சமாதானப்படுத்த போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சுபாஷ் சந்திர போஸ் விலகினார்.
பின்னர், 1939 இல் அகில இந்திய பார்வார்டு
பிளாக் கட்சியை தொடங்கினார் நேதாஜி. அதன் அகில இந்திய தலைவராக நேதாஜியும்,
தமிழக தலைவராகபசும்பொன் முத்துராமலிங்க தேவர் உம் பதவியேற்று கொண்டனர்.
ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி தனது
உதவியாளராக்கிக்கொண்டார். 1937 டிசம்பர் 27ல் எமிலியை போஸ் ரகசியமாக
திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நவம்பர் 29, 1942-ல் அனிதா போஸ்
பிறந்தார்.
1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் சிறையில்
இருந்து நேதாஜி தப்பிச்சென்றார். 26 ஆம் நாள் நேதாஜி அவருடைய அறையில்
காணப்படவில்லை என்றும் இருப்பிடம் பற்றி இதுவரை தகவல் எதுவும்
கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியிடப்பட்டது.
நேதாஜி ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை
மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்ட பின்னர் தான் அவர்
இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விடயமே ஆங்கிலேய அரசுக்கு
தெரிய வந்தது
நேதாஜிக்கு விடுதலை போராட்டத்திற்கு ஜெர்மனி
இத்தாலியின் உதவி கிடைக்கவில்லை. அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக
செயல்பட்டனர். அதனால் நேதாஜி ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் உதவியை நாடினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களால் சுமார் ஆயரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நேதாஜியின் ராணுவத்தில் இணைந்தனர்.
பர்மாவில் இருந்தபடி தன் படையை இந்தியாவை
நோக்கி வந்தார். இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை கொத்து கொத்தாக
கொன்று குவித்தது ஆங்கிலேய படை
இரத்தத்தை தாருங்கள் உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன் என்பது நேதாஜியின் புகழ்பெற்ற சூளுரை.
நேதாஜி தன் சிறு பையொன்றில் மிகச்சிறிய
பகவத் கீதை புத்தகத்தையும், துளசி மாலையையும் மூக்குக் கண்ணாடியையும்
மட்டுமே வைத்திருந்தார். கீதை ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டத்திற்கு
பெரும் தூண்டுதலாக இருந்ததாக கருதினார்.
தன் ராணுவ படையில் பெண்களுக்கென தனிப் பிரிவான ஜான்சி ராணி படையை தொடங்கினார்.
நேதாஜியின் கடைசி புகைப்படம் வியட்நாமின் கோ சு மிங் நகரில் எடுக்கப்பட்டதாகும்.
தாய்பெய் நகரில் 18 ஆகஸ்ட் 1945 அன்று நடந்த
விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக ஜப்பான் பத்திரிகை ஆகஸ்ட் 23 ம் நாள்
செய்தி வெளியிட்டது. ஆனால் தைவான் நாடு அப்படி ஒரு விபத்து நடக்கவில்லை
எனக் கூறி மறுத்தது.
நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன் என்று இந்தியாவில் சாட்சி கூறியவர் ஹபிப்வுர் ரகிமான்.
ஆனாலும் பல தலைவர்கள் நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்றே கூறி வந்தனர். அதில் முக்கிமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
1956 ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட மூவர் கொண்ட
ஷாநவாஸ் விசாரணை குழுவில் இருவரும், 970 ஜுலை உயர்நீதிமன்றத் தலைமை
நீதிபதி ஜி. டி. கோசலாவைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையமும் நேஜாதி
விபத்தில் இறந்தது உண்மை என அறிக்கை தாக்கல் செய்தனர். இதை நேதாஜியின்
அண்ணன் ஏற்க மறுத்தார்.
1999 ல் வாஜ்பாய் ஆட்சியில், அமைக்கப்பட்ட
முகர்ஜி ஆணைய குழு நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் சோவியத்
ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறியது.
உத்திரப் பிரதேசத்தில் வாழ்ந்த துறவி
பகவான்ஜி ( 'கும்னமி பாபா' ) என்பது சுபாஷ் சந்திர போஸ் என சிலர்
நம்புகின்றனர். இருவரது கையெழுத்தும் ஒத்துப்போனது.
நேதாஜிக்கு 1992-ல் இந்தியாவின் மிக உயரிய
விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் அவர் இறப்பு குறித்த
ஆதாரங்களைத் தர முடியவில்லை என்பதால் உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது
திரும்ப வாங்கப்பட்டது.
நேதாஜியின் இறுது அறிக்கை 15 ஆகஸ்ட் 1945 அன்று வெளயிடப்பட்டது. அதில்
"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"
என்று கூறியிருந்தார்.
No comments:
Post a Comment