Sunday, 18 November 2018

உலகின் ஈடு இணையற்ற தலைவர்

உலகின் எந்த பகுதியிலும் ஒரு தலைவர் இறந்து விட்டால் அவர் கொள்கையை காப்பாற்ற இன்னொரு தலைவரை தேர்வு செய் வார்கள். 




தலைவரை தேர்வு செய்வ தற்குள் பலவித மான போட்டிகள் நிலவும், இதை தான் உலகம் பார்த்து வருகிறது.

1400 ஆண்டு களுக்கு முன்பு மக்காவிலும், மதீனாவிலும் ஓர் தலைவர் வாழ்ந்தார். அவர் மரணித்து 1400 ஆண்டுகள் ஆகி விட்டது.

ஆனால் அவர் விட்டு சென்ற கொள்கை அழிந்து விட வில்லை, 

மாறாக பிரம்மாண்ட மாக வளர்ந்து உலகம் முழுவதும் பரவி உலகின் 200 கோடி மக்களை வென்றெடுத் துள்ளது. தலைவரும் உயிரோடு இல்லை, தலைவரின் முகத்தை அன்றைய மக்களை தவிர யாரும் பார்த்தது இல்லை, 

தலைவரின் படங்கள் இல்லை, சிலைகள் இல்லை, தலைவரின் இடத்தில் வேறு தலைவரும் இல்லை, ஆனால் கொள்கை மட்டும் விஸ்வ ரூபம் எடுத்து வளர்ந்துள்ளது. 14 நூற்றா ண்டில் உலகின் கால்வாசி மக்களை ஈர்த்துள்ளது. 

அவருடைய கொள்கை நுழையாத நாடே உலகில் இல்லை.

உள்ளங் களை ஈர்த்தது மட்டுமல்ல, 200 கோடி மக்களும் தங்கள் உயிரை விட அவரையே அளவுக்கு அதிகமாக நேசிக்கி றார்கள்.  200 கோடி மக்களும் தங்களுடைய வாழ்வில் ஏற்படக் கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் 

அவர் காட்டிச்சென்ற வழியிலேயே தீர்வை எட்டுகின்றனர். இது வேறு எந்த சமுதாயத்திலும் இல்லாத தனிச் சிறப்பு.

இஸ்லாமி யர்கள் அதிகம் தர்மம் செய்பவர்கள் என்று பிரிட்டன் கூறுகிறது. 

உலகின் எந்த பகுதியில் சுனாமி, வெள்ளம், புயல், நிலநடுக்கம் என்று யார் பாதிக்கப் பட்டாலும்  இஸ்லாமியர்களின் மனிதநேய பணி மகத்தானது என்று ஐநாவின் அறிக்கை கூறுகிறது.

இஸ்லாமியர்கள் இந்த பெயரையும், பெருமையையும் பெற அவரே உண்மையான சொந்தக் காரர். 

அவர் தான் இஸ்லாமியர்களுக்கு மனித நேயத்தை ஊட்டினார்.

பொருளாதாரம், குடும்பவியல், வாழ்வியல், நீதித்துறை என்று அவர் வகுத்த கொள்கையே உலகின் பெரும் பாலான நாடுகள் பின் பற்றி கொண்டிருக் கிறது.

அவருடைய பெயர் இந்த உலகத்தில் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒரு பகுதியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

யார் அவர்..?

எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே..!!

ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

ஆனால், அவரது வீட்டிலோ வறுமை.

ஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும்.

இல்லையென்று வருவோர்க்கு "இதோ இந்த ஒட்டக த்தை ஓட்டிச் செல்", என்று 

சொல்லு மளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்தகாலத்திலும் கூட, ஜனாதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை. (ஆதாரம் புஹாரி 2567)

கோதுமை மாவை, சல்லடை செய்து பயன் படுத்த இயலாத அளவிற்கு வறுமை. (ஆதாரம் புஹாரி 5413)

அந்த மாவை கூட தண்ணீர் ஊற்றி பிசைந்து சாப்பிட வேண்டிய அளவிலான கொடிய வறுமை. (ஆதாரம் புஹாரி 5413)

வயிற்றில் கல்லை நிரப்பிக் கொண்டு பசியாற்றினார்.

பசியின் கொடுமையால் இரவில் இரவில் தூக்கமின்றி அமர்ந்திருந்த வறுமை. (ஆதாரம் முஸ்லிம் 3799)

உடுத்திய‌ உடைக்கு மாற்று உடை இல்லை என்கிற அளவிற்கு வறுமை. உடுத்தி ருக்கும் உடை கூட, வெறும் இரு போர் வைகள்.. (ஆதாரம் புஹாரி 3108)

ஒரு முறை சால்வையொன்றை நபிகள் நாயகத்திற்கு ஒருவர் பரிசளிக் கிறார், நபிகள் நாயகமோ, 

இதை நான் என் கீழாடையாக பயன் படுத்திக் கொள்கிறேனே என்று அதை அவ்வாறே பயன் படுத்து கிறார்கள்.

போர்வையை வேட்டியாக பயன் படுத்துகின்ற அளவிற்கு வறுமை. (ஆதாரம் புஹாரி 1277)

அவர் ஒரு போதும் தட்டில் வைத்து உணவு உண்டது கிடையாது. துணியை விரித்து  அதில் தான் உணவை வைத்து உண்டிருக்கிறார்கள். (ஆதாரம் புஹாரி 5386)

இரவில் படுத்துத் தூங்குவதற்கும், பகலில் அதையே முன் வாசல் கதவாய் பயன் படுத்துவ தற்கும் தான் பாய் வைத்தி ருந்தார்கள். (ஆதாரம் புஹாரி 730)

தோலினால் ஆன தலையணையை பயன்படுத்தினார்கள். (ஆதாரம் புஹாரி 6456)

ஒருவர் படுத்திருந்தால் இன்னொருவரால் நின்று தொழுகை செய்ய இயலாது. 

அந்த அளவிற்கு சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் வசித்தார்கள். (ஆதாரம் புஹாரி 382)

மேற்கூரை கூட இல்லாத வீட்டில் வசித்தார்கள். அவர்கள் எழுந்து நின்றால் வெளியில் இருப்பவர்களால் அவரது தலையை காண முடியும் (ஆதாரம் புஹாரி 729)

நாமெல்லாம் கற்பனை யில் கூட நினைத்து பார்த்திராத ஏழ்மை.

நபிகள் நாயகம் அனுபவித்த வறுமையில் 100 ஒரு பங்கினை நாம் இன்றைக்கு அனுபவிக் கிறோமா?

இன்று, பிளாட் ஃபாரத்தில் பிச்சையெடுப்பவனை தான் நாம் பரம ஏழை என்போம்.

நபிகள் நாயக த்தின் வாழ்க்கை, இன்றைக்கு நாம் கருதுகின்ற பரம ஏழையை விடவும் 

கீழ் நிலையில் தான் இருந்தது என்பதை நம்மால் ஜீரணிக்க இயலு கின்றதா?
இத்தனை க்கும் அப்போது அவர் மன்னர்.

நாட்டுக்கே ஜனாதிபதி.

போர்ப்படை தளபதி..

மார்க்க அறிஞர்.

இறைவனால் நியமிக்கப்பட்ட இறைத் தூதர்,

சமுதாயத்தை நன்னெறிப் படுத்த வந்த புரட்சி யாளர்,

என பல்வேறு பரிணா மங்களைக் கொண்ட மாமனிதராக அவர் திகழ்ந்தார்.

ஆக‌,

வறுமை யிலும் நேர்மை.

வறுமை யிலும் ஒழுக்கம்.

வறுமை யிலும் வீரம்

வறுமை யிலும் நீதி தவறாத நல்லாட்சி

வறுமை யிலும் சுய மரியாதை

வறுமை யிலும் மிகப்பெரும் புரட்சி..!

நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா??

எண்ணும் போதே உடலெல் லாம் சிலிர்க் கிறது..

மைக்கேல் ஹார்ட் என்கிற கிறித்தவ பாதிரியார், உலகில் மாற்றம் உரு வாக்கிய நூறு பேரின் வாழ்வை அலசி, 'The Hundred' என்கிற நூலை வரைந்தார்.

அதில் முதல் இடத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கே வழங்கி னார்.

நபிகள் நாயகம்... நாமெல்லாம் கற்பனையிலும் எண்ணிராத ஓர் உத்தம மனிதர் (தூதர்)...!

Saturday, 17 November 2018

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் !!!

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் அவுல் பகீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam)





(பிறப்பு – அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியிலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார் இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி“உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. 

நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது. ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு. உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல். உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்! 

கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.சுவாமி சிவானந்தா (ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாமுக்குக் கூறியது)“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.


நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி3000 ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலுமிருந்து அன்னியர் படையெடுத்து, எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று கூறுவாயா? அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ், பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு உரிமையானவற்றைக் கைப்பற்றினார். 




நாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க வில்லை. எந்த நாட்டையும் கைபற்ற வில்லை. யாருடைய நாட்டையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே திணிக்க வில்லை.”முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். 


வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!



”இந்திய விண்வெளி ராக்கெட்களைப் படைத்த விஞ்ஞான மேதைடாக்டர் அப்துல் கலாம் ராணுவ ராக்கெட்டுகளை விடுதலைப் பாரதத்தில் விருத்தி செய்த முன்னோடி விஞ்ஞானி. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனிக்கும், போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ராணுவ ராக்கெட்டுகளை விருத்தி செய்த முதல் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்னெர் ·பான் பிரௌன் [Wernher Von Braun].





அமெரிக்காவின் அண்டவெளிப் பயண ராக்கெட் விருத்தியிலும் அவர் முழுமையாக ஈடுபட்டார். பாரத நாட்டில் டாக்டர் ·பான் பிரௌனுக்கு இணையாகக் கருதப்படும் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம். அவரே பாரதத்தின் ராணுவ ராக்கெட் படைப்புக் பிதாவாகாப் போற்றப்படுகிறார். இந்திய ராணுவ ஏவுகணைகள் அக்கினி, பிருத்வி போன்றவை மூச்சு விட்டுப் பாய்ந்து செல்ல விதையிட்டு விருத்தி செய்தவர் அப்துல் கலாம். அவற்றை வெற்றிகரமாக ஏவச் செய்து பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளின் கவனத்தைப் பாரதம் கவர்ந்துள்ளது! 1980 ஆண்டுகளில் ஹைதிராபாத் ராணுவ ஆராய்ச்சி விருத்திக் கூடத்தை [Defence Research & Development Laboratory] தன்னூக்கத்துடன் இயங்கும் ஓர் உன்னதக் கூட்டுப்பணிக் குழுவாக மாற்றி அதை ஒரு பொறிநுணுக்கத் தொழிற்சாலையாக ஆக்கினார். உன்னத பாதுகாப்புப் பணி புரிந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு 1990 ஆம் ஆண்டில் பாரதம் மதிப்பு மிக்க “பாரத் ரத்னா” பட்ட வெகுமதி அளிக்கப் பட்டது.1931 அக்டோபர் 15 ஆம் தேதி அப்துல் கலாம் தமிழ்நாட்டின் இராம பூமியான இராமேஷ்வரத்தில் பிறந்தார். 



அங்குள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். திருச்சி ஸெயின்ட் ஜோஸ·ப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படைக் கல்வியைக் கற்றவர். தனது சிறப்புப் பொறிநுணுக்க டாக்டர் பட்டப் படிப்புச் சென்னை பொறியியல் துறைக் கல்லூரியில் [Madars Institute of Technology] சேர்ந்து (1954-1957) விமானவியல் எஞ்சினியரிங் துறையை [Aeronautical Engineering] எடுத்துக் கொண்டார். 


பட்டப் படிப்பின் போதே பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் [Hindustan Aeronautics Ltd] பயிற்சிக்குச் சேர்ந்தார். அங்கே விமானங்களை இயக்கும் பிஸ்டன் எஞ்சின், டர்பைன் எஞ்சின், ஆர அமைப்பு எஞ்சின் [Piston, Turbine & Radial Engines] ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்.1958 இல் ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் பட்டம் வாங்கிய பிறகு, தன் நெடுநாட் கனவான விமானப் பறப்பியலில் ஈடுபட நினைத்தார். அவருக்கு இரண்டு வித வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி பிறந்தன. முதலாவது வேலை இராணுவ அமைச்சகத்தின் தொழில் நுணுக்க விருத்தி & உற்பத்தித் துறைக் கூடத்தில் {Directorate of Technical Development & Production, (DTD&P) Ministry of Defence]. அடுத்தது இந்திய விமானப் படையில் ஊழியம் [Indian Air Force]. இரண்டுக்கும் விண்ணப்பித்து அவருக்கு நேர்காணல் தேர்வும் கிடைத்தது. முதலில் கூறிய இராணுவப் பணி அவரது திறமைக்குச் சவாலாக இருக்க வில்லை.


அடுத்து தேரா தூன் விமானப் படைத் தேர்வில் அவர் வெற்றி பெறவில்லை.தோல்வி மனதுடன் திரும்பி வரும் வழியில் ரிஷிகேஷில் தங்கிப் புனித கங்கா நதியில் நீராடிய போதுதான், அவருக்குப் புத்தரைப் போல் தோன்றிய சுவாமி சிவானந்தாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது! தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டதும், சுவாமி சிவானந்தா அவரோர் இஸ்லாமியர் என்று மனதில் கருதவில்லை! கவலைப் படுவது ஏனென்று சிவானந்தா கேட்டபோது, அப்துல் கலாம் தனது பறக்கும் கனவுகளை இந்திய விமானப் படை நேர்காணல் ஏமாற்றி விட்டெதெனக் கூறி வருந்தினார். 



அப்போது சிவானந்தா கூறினார், ” உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது. ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு. உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல். உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்! கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்டெல்லிக்கு மீண்டதும் DTD&P இல் சீனியர் சையன்டி·பிக் அஸ்ஸிஸ்டென்ட் வேலை கிடைத்தது. அப்போது அவர் தன்னோடு பணி செய்த குழுவுடன் முன்னோடி ஹோவர்கிரா·ப்டு [Prototype Hovercraft] ஒன்றைத் தயாரித்தார்.


அவர் முதன்முதல் அமர்ந்து இயக்கிய இந்திய ஹோவர்கிரா·ப்டில் முன்னாள் இராணுவ மந்திரி கிருஷ்ண மேனன் பயணம் செய்தார். அதற்குப் பிறகு 1962 இல் டாக்டர் அப்துல் கலாம் இந்திய விண்வெளித் திட்டத்தில் வேலை கிடைத்துச் சேர்ந்தார். சுமார் இருபதாண்டுகள் (1963-1982) அவர் இந்திய வெண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் [Indian Space Research Organization (ISRO)] பல பதவிகளில் பணியாற்றினார். பிறகு அவர் தும்பாவில் [திருவனந்தபுரம், கேரளா] துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் [Satellite Launch Vehicle Team (SLV)] சேர்ந்து, SLV-3 ராக்கெட் படைப்புத் திட்டத்தின் டைரக்டர் ஆக நியமிக்கப் பட்டார்..


SLV-3 ராக்கெட்டின் 44 துணைச் சாதனங்களை டிசைன் செய்து, பயிற்சி செய்து, மேன்மையாய் விருத்தி செய்து வெற்றிகரமாக ஏவிடப் பணிபுரிந்தார். 1980 ஜூலையில் இல் ரோகினி என்னும் முதல் விஞ்ஞானத் துணைக்கோளைத் தூக்கிக் கொண்டு SLV-3 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு, ரோகினி பூமியைச் சுற்றிவரும் சுழல்வீதியில் இடப் பட்டது. அவ்வரிய பணிக்குப் பாரத அரசாங்கம் 1981 இல் டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரதத்தின் மாபெரும் “பத்ம பூஷண்” பாராட்டு மதிப்பை அளித்தது.ஓர் ஆன்மீக முஸ்லீமாக அப்துல் கலாம் தினமும் இருமுறை இறைவனைத் துதிக்கிறார். 


அவர் அறையில் தஞ்சை நடராஜர் வெண்கலச் சிலை காணப்படுகிறது. மேலும் அவர் ஓர் இராம பக்தர். வீணை வாசிக்கிறார். ஸ்ரீராகத்தை ரசிக்கிறார். தமிழில் கவிதை புனைகிறார். தானோர் இந்தியன்ரென்று பெருமைப் படுகிறார். 1999 ஆண்டில் பொக்ரானில் சோதித்த அடித்தள அணு ஆய்த வெடிப்புகளில் பங்கெடுத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார்.


விடுதலை பெற்ற பிறகு இதுவரைச் சாதித்த விஞ்ஞானப் பொறியியற் துறைகளை எடுத்துக் காட்டி முன்னேறும் நாடாகக் கருதப்படும் பாரதம் விருத்தி அடைந்து 2020 ஆண்டுக்குள் முன்னேறிய நாடாக மாறப் போகிறது என்றோர் எதிர்காலவாதியாக [Forecasting Futurist] ஒளிமயமான எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டுகிறார். டாக்டர் அப்துல் கலாம் மெய்யாக ஒரு ராக்கெட் விஞ்ஞானி, படைப்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தேச நேசர். அவரே பாரதத்தின் ராணுவ ஏவுகணைப் பிதாவாகப் போற்றப் படுகிறார்.இந்தியாவைமுன்னேறிய நாடாக்கும்விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம்“ஏன் இங்கே செய்தியிதழ் ஊடகங்கள் இகழ்ச்சியாக எழுதி வருகின்றன? ஏன் இந்தியாவில் நமது வல்லமை ஆற்றல்களை, அடைந்த வெற்றிகளைச் சொல்ல மன உளைச்சல் அடைகிறோம்? நாம் பெருமைப்பட வேண்டிய உன்னத நாட்டைச் சேர்ந்தவர்! 


பிரமிக்கத்தக்க பல்வேறு வெற்றிக் கதைகள் நம்மிடம் உள்ளன. ஆனால் நாம் அவற்றை ஒப்புக்கொள்ள மறுக்கிறோமே. ஏன் ? மரணங்கள், பயங்கர மூர்க்கச் செயல்கள், நோய்கள், மனிதக் குற்றப்பாடுகள் போன்றவற்றை மட்டும் பெரிதாக அறிவித்து நமது மகத்தான வெற்றிச் சாதனைகள் அவற்றில் மூழ்கி விடுகின்றன.”“இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.


”“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். 


நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”இளைஞருக்குக் கூறியதுமுன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். 


வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!


தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

அம்பிகாபதி அமராவதி காதல்!!!

ரு காலத்தில் காதல் செய்கிறேன் என்று காதல் கடிதம் எழுதுவதற்கு
முயற்சித்து, முயற்சித்து இன்று பலர் கவிஞர்களாகவே மாறிவிட்டார்கள்.
இதில் இன்னும் சிலர் காதலுக்கு உதவுவதாக சொல்லி தூது போகிறேன் என்ற பெயரில் காதலித்தவனுக்கு ஆப்பு அடித்து, நண்பர்களின் காதலுக்கு டாடா காட்டியவர்களும் அதிகம். இதை நீ சொல்லக்கூடாது என்று சொல்வது எனக்கு நல்லா கேக்குது மக்கா ! . இன்னும் சிலர் காதல் கடிதம் எழுதுவதற்கு சிந்திக்கிறேன் என்று சொல்லி பக்கத்தில் ஓசி வாங்கிய பேனாவை வாயில் வைத்து கடித்து கடித்து பேனாக் கொடுத்தவனை கொலைகாரனாக மாற்றியவர்களும் பலர் உண்டு. என்ன யோசிக்கிறீங்க ? உங்களைப் பற்றி எப்படி சரியா எழுதி இருக்கேனா ?.




இதில், இன்னும் சிலர் அவள் கொடுத்த முதல் கடிதம் என்று சொல்லி, சொல்லி அந்த கடிதத்தில் பல ஓட்டைகள் விழுந்த பின்னரும் விட்டுவிட்டாமல் ஒட்டுப் போட்டு பொக்கிஷமென பாதுகாத்து புதிதாய் வந்த மனைவியிடம் மாட்டி நிறைய வாங்கி கட்டிக் கொண்டவர்களும் உண்டு. .. வானம், மானம், கானம், பூமி, காமி, குலம் குப்பை என இப்படி உருண்டு பிரண்டு பெரியகவிஞர் போல் கவிதை எழுதி இறுதியாக முகவரி எழுதாமல் தபால் பெட்டியை நிரப்பியவர்களும் உண்டு  .

துபோன்று காதலிப்பதற்காக ஏதேனும் ஒரு முயற்சி தினம் தினம் அரங்கேறிய வண்ணம்தான் இருக்கிறது. இதில் காதலில் சதியால் தோற்றவர்களும் உண்டு,காதலில் மதியால் வென்றவர்களும் உண்டு. எது எப்படி இருந்தாலும் காதலை ரோஜா மலர்போல் மென்மையாக ரசிப்பபவர்களாகட்டும் அல்லது காதலை வேற்றுக்கிரக வாசியாகப் பார்ப்பதுபோல் பார்த்து முறைப்பவர்களாகட்டும். இங்கு அனைவருக்குமே உண்மையான காதல் என்றால் உதாரணமாக உச்சரிக்கும் காதல் ஜோடிகளில் அம்பிகாபதி அமராவதி. காதலும் ஒன்று. சரி அப்படி என்னதான் இவர்கள் காதலுக்காக செய்தார்கள் எதற்க்காக எல்லோரும் உண்மையான காதலுக்கு உதாரணமாக இவர்களை சொல்கிறார்கள் என்று கேட்டால் எத்தனை பேருக்கு இவர்களின் காதல் கதை தெரியும் என்று தெரியவில்லை. அப்படி என்னதான் இவர்கள் காதலில் நடந்தது என்று நாமும் பார்த்துவிடுவோமே…??!! என்ற முயற்சியின் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு .

னி விஷயத்திற்கு வருவோம். ஒன்பதாம் நூற்றாண்டில் குலோத்துங்கச் சோழனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர்தான் இன்று கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவி பாடும் என்று நாம் அனைவராலும் புகழப்படும் கவி சக்கரவர்த்தி கம்பன் பெருமான். இவரின் மகன்தான் இன்று காதலுக்கு உதாரணமாக அனைவரின் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அம்பிகாபதி. இவர் வாழ்ந்த காலத்தில் ஆட்சியில் செல்வ செழிப்புடன் திகழ்ந்த மன்னன் குலோத்துங்கச் சோழனின் குடும்பத்து இளவரசிதான் இந்த அமராவதி.இவர்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது என்று நீங்கள் கேட்க நினைப்பது  புரிகிறது.

ந்த கால கட்டத்தில் அமராவதியை கல்வி கற்பதற்காக குலோத்துங்கச் சோழ மன்னன் கம்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அமராவதியும் தினமும் கல்வி கற்க கம்பன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஒரு நாள் கம்பன் ஒரு அவசர வேளையாக வெளியூர் செல்லவேண்டியது இருப்பதால் நான் வரும் வரை எனது மகன் அம்பிகாபதி உங்கள் மகளுக்கு கல்வி கற்றுத் தருவார் என்று மன்னனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அப்பொழுது கம்பரை விட அவரின் மகன் கவியில் சிறந்து விளங்கி இருக்கிறார் அதுதான் இந்த பொறுப்பை அவரிடம் கொடுக்க காரணமாம். கம்பன் சென்ற பிறகு அவர் சொன்னது போலவே பாடத்தை நடத்தத் தொடங்கினார் அம்பிகாவதியும். சில தினங்களில் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் பாடம் தொடங்கிவிட்டதாம். கம்பர் திரும்பி வந்து பார்த்தபொழுது இருவரும் மிகவும் காதலில் மூழ்கிப்போனது கம்பனுக்கு தெரிய வந்ததாம் .

வர்களின் காதல் விவகாரம் மன்னனின் காதுக்கும் எட்டியதாம் மிகுந்த கோபம் கொண்ட மன்னன் அம்பிகாவதியை சிறை பிடிக்க உத்திரவிட்டாராம். ஒட்டக்கூத்தர் அம்பிகாபதி தண்டனை பெற வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்ததால் அரசனிடம் அவனது கோபத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாகப் பல சட்டதிட்டங்கள்,
சம்பிரதாயங்கள் முதலியவற்றை எடுத்துக்கூறி நிலைமையை மிகவும் தீவிரமடையச்  செய்தார். கம்பரின் வேண்டுதல்கள் எதுவும் மன்னனின் செவியில் ஏறவில்லை. முடிவாக அம்பிகாபதிக்கு ஒரு சோதனை நடத்தி அவன் அதில் வெற்றி பெற்றால் அமராவதியை மணக்கலாம் என்றும், தோல்வியுற்றால் மரண தண்டனை எனவும் முடிவு செய்யப்பட்டது.

பையோர் முன்னிலையில் 100 பாடல்களை தொடர்ந்து இயற்றிப்பாடுவது என்பதுதான் நிபந்தனை. நூறு பாடல்களை அம்பிகாபதி இயற்றி அரங்கேற்ற வேண்டும். அதில் காமரசம் துளியும் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்களாம் . அப்பாடல்களில் பிழை ஏற்பட்டாலோ, காமரசம் கலந்தாலோ, குறிப்பிட்ட காலத்துக்குள் நூறு பாடல்களை இயற்றத் தவறினாலோ தோற்றதாக அர்த்தம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்களாம்.


ந்த நிபந்தனையை ஏற்று அம்பிகாபதி பாட ஆரம்பித்தான். சபையில் அரசன் உள்ளிட்ட பல அறிஞர்களுடன் கம்பரும், ஒட்டக்கூத்தரும் அமர்ந்திருந்தனர். அமராவதி ஒரு திரைமறைவில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சியைக் காண அனுமதிக்கப்பட்டாள். அவள் நூறு மலர்களை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு அம்பிகாபதி பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு மலர் வீதம் அருகிலிருந்த மற்றொரு தட்டில் போட்டு, அம்பிகாபதி பாடும் பாடல்களை எண்ணிக்கொண்டே வந்தாள். அமராவதி பிழையாக ஒரு மலரைக் கூட எறிந்ததால், அம்பிகாபதி ஒரு பாடல் குறைவாகவே பாடி நிறுத்திவிட்டாராம்.

100  பாடலும் முடிந்துவிட்டது தன் காதலன் வெற்றி பெற்றுவிட்டான் என்ற
எண்ணத்தில் அமராவதி அம்பிகாபதியை நோக்கி ஓடிவர அவளின் அழகில் மயங்கி சற்றே ”பருத்த தனமே துவளத் தரள வடந் துற்றே” என காமரசம் ததும்பும் பாடலொன்றைக் பாடிவிட்டாராம். இந்த பாடலுடன் அவன் 100 பாடல்களைப் பாடியிருந்தாலும் அவற்றுள் முதல் பாடல் கடவுள் வாழ்த்து ஆதலால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஆகவே அம்பிகாபதி மொத்தம் பாடிய பாடல்கள் 99 மட்டுமே. அமராவதி இதையறியாமல் அவசரப்பட்டுவிட்டாள்.ஒட்டக்கூத்தர் இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அம்பிகாபதிக்கு மரணதண்டனை என தீர்ப்பு விதித்தான். அம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில் விழுந்து உடன் அமராவதியும் இறந்துபோனாலாம்

ந்த உண்மையான காதலுக்காகத்தான் நாம் அனைவரும் அவர்களை காதலின் சிகரங்களாக இன்றும் நம் இதயங்களில் வைத்திருக்கிறோம் .

லினக்ஸ் பற்றி முக்கிய தகவல்கள்.

உலகம் முழுவதும் இன்று விண்டோஸை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தாலும் லினக்ஸ் என்ற ஒன்றையும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். லினக்ஸ் ஆரம்ப காலத்தில், தொழில் நுட்ப ஆய்வாளர்கள் மட்டுமே விரும்பிப் பயன்படுத்திய சிஸ்டமாக லினக்ஸ் இருந்து வந்தது.




பின்னர் சாதாரணப் பயனாளரும் இதனைப் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவாகிப் பலரின் விருப்பமான சிஸ்டமாக லினக்ஸ் உருவானது. இன்று கம்ப்யூட்டர் உலகில் உலா வரும் பெரும்பாலான வைரஸ்கள் மற்றும் மால்வேர் தொகுப்புகள் விண்டோஸ் இயக்கத்தினையே குறி வைத்து உருவாக்கப்பட்டு இயங்குகின்றன. இவை லினக்ஸ் சிஸ்டத்தில் ஊடுறுவிச் செயல்படுவது அரிதாகவே உள்ளது. லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இன்னொரு சிறப்பு, இது முழுமையாக இலவசமாகக் கிடைப்பதுதான்.

லினக்ஸ் சிஸ்டத்தின் பலவகையான பதிப்புகள் இன்று அதிக அளவில், வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை மிக எளிய வகையில் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தலாம். விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்த இலவசம் என்பது அனைவரையும் ஈர்க்கும் காரணமாகவே இருந்து வருகிறது.


 

01. லினக்ஸ் சிஸ்டம் இயங்க எடுத்துக் கொள்ளும் நேரம் மிக மிகக் குறைவு. விண்டோஸ் இயக்கத்துடன் ஒப்பிடுகையில் இதன் பயனை நாம் அனுபவிக்கலாம். எடுத்துக் காட்டாக, அண்மையில் பலராலும் விரும்பிப் பயன்படுத்தும் லினக்ஸ் உபுண்டு பதிப்பு இயங்க 10 விநாடிகளே எடுத்துக் கொள்கிறது. வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த வேகம் இல்லை என்பது உண்மை.

02. எந்த பிரச்னையும் லினக்ஸ் சிஸ்டத்தில் இல்லை என்பதே உண்மை. இன்ஸ்டால் செய்து பல மாதங்கள் பயன்படுத்திய பின்னரும், பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னரும், லினக்ஸ் சிஸ்டத்தின் இயங்கும் வேகம் அப்படியே குறையாமல் இருக்கும்.

03. உங்கள் கம்ப்யூட்டர் எப்போது வாங்கப்பட்டிருந்தாலும், எந்த சிப் கொண்டு வடிவமைக்கப் பட்டிருந்தாலும், அதில் லினக்ஸ் சிஸ்டத்தைப் பதிந்து இயக்க முடியும். விண்டோஸ் இயக்கம் தனக்கென குறைந்த பட்சம் சில தகுதிகள் கொண்ட ஹார்ட்வேர் இருந்தாலே இயங்கும். உங்கள் கம்ப்யூட்டர் பழைய ஹார்ட்வேர் ஆக இருந்தாலும், குறைவான மெமரி கொண்டு இருந்தாலும் அதற்கேற்ற லினக்ஸ் பதிப்பினை இலவசமாக இறக்கிப் பதிந்து பயன்படுத்தலாம்.

04. லினக்ஸ் எந்த வேளையிலும் முடங்கிப் போகாத ஒரு இயக்கம். எனவே அடிக்கடி கிராஷ் ஆகி விட்டது என்ற பாடலைப் பாடும் விண்டோஸ் பயனாளர்களுக்கு இது ஒரு மாற்று மருந்தாக உள்ளது.

05. லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கென குழுக்களை அமைத்துக் கொண்டு, இந்த சிஸ்டம் குறித்த தகவல்களை அளித்து வருகின்றனர். சந்தேகங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு தீர்த்துக் கொள்கின்றனர். சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டி, தீர்வுகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

06. பல லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், நம் தேவைகளுக்கேற்ப, பலவகையான பதிப்புகளில் இலவசமாகவே கிடைக்கின்றன. ஒவ்வொன்றின் வகை மற்றும் இயங்கும் தன்மையும் பலவிதமாக இருக்கின்றன. 32 பிட், 64 பிட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கானவை, சர்வர்களில் வெவ்வேறு திறனுக்கானவை என இவை கிடைக்கின்றன

07. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த GNOME and KDE என இரு வகைகள் உள்ளன. இவ்வாறு பலவகை இருப்பதனால், லினக்ஸ் பயன்படுத்த விரும்பும் ஒருவர் சற்று குழப்பத்திற்கு ஆளாகலாம். ஆனால் ஒருவர் தன் தேவைகளை முன்னிறுத்தினால், மேலே சுட்டிக் காட்டியபடி, லினக்ஸ் பயன் பாட்டுக் குழுவினர் இதற்கான அறிவுரையை வழங்குவார்கள்

08. டோர்வால்ஸ் முதலில் லினக்ஸ் சிஸ்டத்தை உருவாக்கிய போது, அது இந்த அளவிற்கு பயன்பாட்டிற்கும், ஆய்விற்கும் உள்ளாகும் என எண்ணவில்லை. இன்று ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள், லினக்ஸ் சிஸ்டத்தினை அனைவரின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கி தருகின்றனர். லினக்ஸ் பயன்படுத்துவதனை ஒரு நல்ல அனுபவமாக இவை முன்னிறுத்துகின்றன.

09. லினக்ஸ் பதிப்பினைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர், இதற்கென தனியே எந்த ஒரு பயிற்சியையும் மேற்கொள்ளத் தேவையில்லை. தேர்ந்தெடுத்த சிஸ்டத்தினைப் பயன்படுத்தி பழகினாலே போதும்.

10. ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கப்படும் திறவூற்று தன்மைக்கு லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர் பெற்றது. அதாவது, இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்ட குறியீட்டு வரிகளை எவரும் எளிதாகப் பெற்று, தங்கள் தேவைக்கேற்றபடி இந்த சிஸ்டத்தினை உருவாக்க முடியும். இந்த தன்மைதான், இன்று லினக்ஸ் சிஸ்டத்தில் பல பயன்பாடுகளுடன் கூடிய தொகுப்புகள் உருவாகக் காரணமாக உள்ளது. தொடர்ந்து புதிய பதிப்புகளும் தயாராகிக் கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை இலவசமாகவே தரப்படுகின்றன.