சமீபத்தில்,
டிமிட்ரி டே (Dmitriy Dey) தன்னார்வ தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் எகிப்து
பிரமிட்களை கூகுள் எர்த் மேப் மூலம் தேடிய போது, சுமார் 8000 ஆண்டுகளாக
எவர் கண்ணிலும் சிக்காத சில மர்மமான பண்டைய சூப்பர்ஸ்ட்ரக்சர்கள்
தென்பட்டுள்ளது.
மேலும் இது சார்ந்த தகவல்களையும், கிடைக்கப்பெற்ற பண்டைய சூப்பர்ஸ்ட்ரக்சர்களையும் கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
கஜகஸ்தான் :
இந்த பண்டைய கால நிலப்படைப்புகள் முன்னாள் சோவியத் பிராந்தியத்திற்கு அருகில் உள்ள கஜகஸ்தானில் உள்ளன.
சதுரங்கள், சிலுவைகள் :
இந்த நில படைப்புகளில் நூற்றுக்கணக்கான அடிகள் அளவிடும் சதுரங்கள், சிலுவைகள், கோடுகள் மற்றும் வளையங்கள் உள்ளன.
வடிவியல் புள்ளிவிவரம் :
மேலும் நில படைப்புகள் ஆனது மகத்தான வடிவியல் புள்ளிவிவரங்களை உள்ளடக்கியது போல் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
200 பண்டைய கால நில படைப்புகள் :
தீவிர ஆய்விற்க்கு பின் சுமார் 200 பண்டைய கால நில படைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அளவில் பெரியதாக :
கிடைக்கப்பற்ற
நில படைப்புகளில் ஒன்றான மாபெரும் குறுக்கு வடிவ நில படைப்பானது எகிப்தில்
இருக்கும் மாபெரும் பிரமிடை விட அளவில் பெரியதாக உள்ளது.
கோட்பாடு :
இந்த
சூப்பர்ஸ்ட்ரக்சர்கள் சார்ந்த துல்லியமான தெளிவு கிடைக்கப்படவில்லை
என்றாலும் கூட, இவைகள் சூரிய மண்டலம் சார்ந்த அக்கால கோட்பாடுகளாய்
இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நாஸி :
ஹிட்லரின் நாஸிப்படையின் அடையாளமான ஸ்வஸ்திகா வடிவத்தில் இருக்கும் சூப்பர்ஸ்ட்ரக்சர் ஒன்றும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
புதிர் :
சில சூப்பர்ஸ்ட்ரக்சர்கள் பற்றிய தெளிவு ஓரளவு கிடைத்தாலும், ஏனைய அனைத்துமே இன்றளவும் புதிராகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment