Thursday, 16 October 2014

பொப் இசையுலகின் மன்னன் : மைக்கல் ஜக்சன்

மைக்கேல் ஜாக்சன் 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி அமெரிக்காவில் உள்ள சிறிய மாகாணங்களில் ஒன்றான இண்டியானா மாகாணத்தில் இருக்கும் கேரி என்ற ஊரில் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர். இதில் ஆண்கள் 5, பெண்கள் 4.

ஜாக்சன் சகோதரர்கள் 5 பேரும் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற பெயரில் பாப் இசைக்குழுவை தொடங்கி நடத்தினார்கள். ஒரு பாப் பாடல் போட்டியில் ஜாக்சன் குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது. அப்போது மைக்கேல் ஜாக்சனுக்கு 6 வயது.

1969-ம் ஆண்டு தன் 11-வது வயதில் மைக்கேல் ஜாக்சன் தனக்கென தனி பாப் இசைக்குழுவைத் தொடங்கினார். 14-வது வயதிலேயே (1972-ல்) தன் முதல் பாப் பாடல் ஆல்பத்தை வெளியிட்டார். அதற்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்தது.

பாப் உலகில் மிகச்சிறிய வயதிலேயே அவர் சிகரத்தை எட்டிப் பிடித்தார். இசைக் கச்சேரி மேடைகளில் அவரது ஆட்டமும், பாட்டமும் பாப் இசைப்பிரியர்களின் மனதை கொள்ளையடித்தது. அவரது கச்சேரிகளுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.



இது தவிர அவரது பாப் இசை பாடல் ஆல்பங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் பரபரப்பாக விற்றன. ஆப்த வால் (1979), த்ரில்லர் (1982), பேடு (1987), டேஞ்சரஸ் (1991) ஆகிய 4 பாப் இசை பாடல் ஆல்பங்களும், விற்பனை உலகில் சாதனை ஏற்படுத்தின. குறிப்பாக த்ரில்லர் ஆல்பம் 2 1/2 கோடி அளவுக்கு விற்று உலக சாதனை படைத்தது.

மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் பட்டியல்

 
  • Ain’t No Sunshine
  • Another Part of Me
  • Bad
  • Beat It
  • Ben
  • Billie Jean
  • Black or White
  • Blood on the Dance Floor
  • Butterflies
  • Come Together
  • Cry
  • D.S.
  • Dangerous
  • Dirty Diana
  • Don’t Stop ‘til You Get Enough
  • Earth Song
  • Ease on Down the Road
  • Get It (song)
  • The Girl Is Mine
  • Girlfriend
  • Give In to Me
  • Gone Too Soon
  • Got to Be There
  • HIStory/Ghosts
  • Happy
  • Heal the World
  • Human Nature
  • I Just Can’t Stop Loving You
  • I Wanna Be Where You Are
  • In the Closet
  • Jam
  • Just a Little Bit of You
  • Leave Me Alone
  • Liberian Girl
  • Man in the Mirror
  • Off the Wall
  • One Day in Your Life
  • One More Chance
  • P.Y.T.
  • Remember the Time
  • Rock with You
  • Rockin’ Robin
  • Say Say Say
  • Scream/Childhood
  • She’s out of My Life
  • Smile
  • Smooth Criminal
  • Stranger in Moscow
  • Tell Me I’m Not Dreamin’ (Too Good to Be True)
  • They Don’t Care About Us
  • Thriller
  • Wanna Be Startin’ Somethin’
  • The Way You Make Me Feel
  • We Are the World
  • We’re Almost There
  • What More Can I Give
  • Who Is It
  • Why
  • Will You Be There
  • With a Child’s Heart
  • You Are Not Alone
  • You Can’t Win
  • You Rock My World

சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சி வழங்குபவர் என்ற பிரிவில் இவர் உலகில் ஏராளமான விருதுகளை வாங்கி உள்ளார். 13 கிராமி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இது உலக சாதனை புத்தகமான கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இவரது ஆல்பகங்கள் உலகம் முழுவதும் 750 மில்லியனுக்கு மேல் விற்று இருப்பதும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 1993-ம் ஆண்டு இவர் தன் பண்ணை வீட்டில் சிறுவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஆதாரம் இல்லாததால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.


2005-ம் ஆண்டு அவர் மீது மீண்டும் செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மேலும் சில குற்றச்சாட்டுக்களும் அவர் மீது சுமத்தப்பட்டன. அவருக்கு தோல் புற்று நோய் தாக்கி இருப்பதாக இடையில் வதந்தி பரவியது.

அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவர் சில மாதங்கள் பாப் இசை மேடை நிகழ்ச்சி நடத்தாமல் இருந்தார். கடந்த ஆண்டு அவர் மீண்டும் மேடை நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்தார்.

லண்டனில் அடுத்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி முதல் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 50 பாப் இசை கச்சேரி நடத்த அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் ஜாக்சனின் 50 கச்சேரிக்கான டிக்கெட்டுக்களும் விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

லண்டன் இசை நிகழ்ச்சிக்காக அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேடை நிகழ்ச்சி நடத்துவதால் ரசிகர்களை கவர பல புதுமைகளை புகுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் அவர் மரணம் அடைந்தார்.


பாப் இசை மூலம் பல ஆயிரம் கோடி சம்பாதித்த மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை துரஷ்டவசமாக முழு திருப்தி இல்லாமல் போய் விட்டது. 1994-ம் ஆண்டு அவர் விசாமேரி என்ற பெண்ணை திருமணம் செய்தார். 1996-ல் அவரை ஜாக்சன் விவாகரத்து செய்தார்.

அதே ஆண்டு டெப்பி ரோவ் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவரும் ஜாக்சனுடன் நீண்ட நாள் வாழவில்லை. 1999-ம் ஆண்டு ஜாக்சனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் கடந்த 10 ஆண்டுகளாக ஜாக்சன் தனிமையில்தான் வாழ்ந்து வந்தார். 2 திருமணம் மூலம் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன், பாரிஸ் மைக்கேல் கேத்ரீன் ஜாக்சன், பிரின்ஸ் பிளான்ஜெட் மைக்கேல் ஜாக்சன்-2 ஆகிய வாரிசுகள் உள்ளனர்.

No comments:

Post a Comment