Sunday 27 March 2016

ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போதும் புகைப்படம் எடுக்க தெரியவில்லையா இதோ உங்களுக்கான டிப்ஸ்.

இன்றைய ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசிய அம்சங்களில் முதன்மையாக இருப்பது கேமரா என்றே கூறலாம். ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் முதலில் கேட்பது போனில் நல்ல கேமரா இருக்கின்றதா என்பதாகவே இருக்கின்றது.

அவ்வாறு நீங்களும் நல்ல ஸ்மார்ட்போனினை வாங்கி விட்டீர்களா. அதிக எம்பி கொண்ட கேமரா இருந்த போதும் தரமான புகைப்படம் எடுக்க தெரியவில்லையா. கவலை வேண்டாம். இதோ உங்களுக்கான டிப்ஸ். 

oBhMTUr.jpg

டிஜிட்டல் zoomஐ தவிர்க்கவும்

இப்படி செய்வதால் போட்டோவை பெரிதுபடுத்த முடியுமே தவிர துல்லியமான படத்தை எடுக்க முடியாது. இப்படி டிஜிட்டல் zoom செய்வதால் புகைப்படம் தெளிவாக இருக்காது. ஆகவே zoom out மோடில் படத்தை எடுத்து எடிட் செய்து கொள்ளவும். 

HSrqPFU.jpg

ப்ளாஷ் தேவையில்லை

ப்ளாஷ் கொடுப்பதால் படம் தெளிவாக தெரியாது தவிர துல்லியமாகவும் இருக்காது. உங்கள் புகைப்படம் ஆழமாக இருக்க வேண்டுமென்றால் ப்ளாஷ் அம்சத்தை தவிர்த்து இயல்பான வெளிச்சத்தை கொடுத்து எடுக்கவும். ஆனால் இருட்டான அறையில் இருந்தால் ப்ளாஷ் அம்சத்தை பயன்படுத்தலாம். அப்பொழுது மிக அருகில் வைத்து படம் எடுக்காமல் தூரத்தில் வைத்து எடுத்தால் நல்லது. 

E2YUJxZ.jpg

Rule of Thirds

போட்டோ எடுப்பதில் தெளிவு இல்லாமல் இருப்பவர்கள்தான் பொருளை நடுவில் வைப்பவர். ஆனால் அதில் தெளிவு இருப்பவர்கள் எங்கு வைத்தால் அது அழகாக இருக்கும் என்பதை நன்கு அறிவர். Rule of thirds frameஐ மூன்று பகுதிகளாக பிரிக்கின்றது. அது கிடைமட்டம் மற்றும் செங்குத்தாக பிரிக்கின்றது. ஆகவே இதன் கோடுகளில் போட்டோவை பொருத்தினால் போட்டோ நன்றாக இருக்கும்.

9DHGjVD.jpg

லைட்டிங் & போக்கஸ்

முதலில் வெளிச்சம் எங்கு இருக்கின்றது என்பதை பார்த்து படத்தை ஃபோகஸ் செய்யவும். எடுத்துக்காட்டாக, வெளிச்சம் வரும் திசையில் வைக்க வேண்டும். சில நேரத்தில் இயல்பான மற்றும் போலியான வெளிச்சத்தை பயன்படுத்தி படத்தை எடுக்க வேண்டும். யாருக்கும் தெளிவில்லாத படம் பிடிக்காது. இதற்கு காரணம் நடுங்கும் கை அல்லது சரியாக முறைப்படுத்தப்படாத ஷட்டர் வேகம். எப்பொழுதும் இரண்டு கைகளை கொண்டு கேமராவை பிடிக்க வேண்டும். ஷட்டர் பொத்தானை பாதி கீழே விழும்படி பிடிக்க வேண்டும். பின்பு மெதுவாக ஷட்டர் பொத்தானை மெதுவாக ரிலீஸ் செய்யவும். நகரும் படத்தை எடுக்க sport scene ஆப்ஷனை பயன்படுத்தவும். 

Djmod6L.jpg

கம்போசிஷன்

Rule of thirdsஐ தவிர கோணங்கள் மற்றும் சமச்சீர் composition முக்கியத்துவம் இருக்கின்றது. சரியான கோணத்துடன் போட்டோவை எடுப்பதால் போட்டோவை துல்லியமாக எடுக்க முடியும். அதனால் தான் செல்ஃபீஸ் எப்பொழுதும் மேலிருந்து எடுக்கப்படுகின்றது. 

TDAhwHL.jpg

எப்பொழுது, எப்படி HDR மோட் பயன்படுத்தப்பட வேண்டும்

HDR மோடை எப்பொழுது எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிந்தால் அழகான படம் எடுக்க முடியும். ஏன் என்றால் இதில் ஒரே படத்தை பல காப்பிகளில் ஒரே நேரத்தில் எடுக்க முடியும். ஆகவே சரியான முறையில் இதை பயன்படுத்தினால் பிரகாசமான துல்லியமான படத்தை எடுக்க முடியும். 

KZGGVSo.jpg

எடிட்டிங்

கருவிகள் சில சூழ்நிலையில் உங்கள் போன் கேமரா எடுக்கவில்லை என்றால் கவலை வேண்டாம் போட்டோ capturing மற்றும் எடிட்டிங் ஆப்ஷன் செல்லவும். இதில் உள்ள Pro HDR, ProCapture Free, Camera FV-5 & Snapseed நீங்கள் அழகான போட்டோ எடுக்க உதவும்.

WQVwXRc.jpg

லென்ஸை சுத்தம் செய்யவும்

கேமராவின் லென்ஸில் தூசி இருந்தாலும் போட்டோ அழகாக வராது. ஆகவே போட்டோ எடுக்கும் முன்பு லென்ஸ் சுத்தமாக இருக்கின்றதா என்று பார்த்து பின்பு போட்டோ எடுக்கவும். 

Dv80sxx.jpg

லேண்ட்ஸ்கேப் வகை போட்டோ பயன்படுத்தவும்

Portrait மோடில் போட்டோ எடுப்பதை விட லேண்ட்ஸ்கேப் வகை புகைப்படம் தெளிவாகவும் அழகாகவும் இருக்கும். இதன் widescreen revolution துணையாக இருக்கும். நம் கண்கள் லேண்ட்ஸ்கேப் வகை காட்சிகள் பார்க்க பழகி இருக்கின்றன. ஆகவே சில காரணங்களுக்காக எப்பொழுதும் லேண்ட்ஸ்கேப் வகை புகைப்படங்களை எடுக்கலாம்.

cyAuVU9.jpg

Monochrome

கலர் புகைப்படங்கள் வந்த காரணத்தால் கருப்பு வெள்ளை படங்களை நாம் மறந்தே விட்டோம். இந்த கேமராவில் உள்ளே பொருத்தப்பட்டுள்ள ஆப் filter உதவியுடன் கருப்பு வெள்ளை படங்களை எடுக்க முடியும். இதை போட்டோ எடுக்க தெரியாதவர்கள் கூட எடுக்க முடியும். 


cyAuVU9.jpg Dv80sxx.jpg    Djmod6L.jpg 9DHGjVD.jpg   

No comments:

Post a Comment