Friday, 25 December 2015

ஸ்மார்ட் போன் முடக்கிய சாதனங்கள்!

இன்றைய தொழில் நுட்பம் வழங்கிய சாதனங்களில், ஸ்மார்ட் போன் மட்டுமே நாம் ஏற்கனவே மேற்கொண்ட வாழ்க்கையின் சில பரிமாணங்களை மாற்றிப் போட்டுள்ளது. நாம் மிக ஆர்வத்துடனும், பெருமையுடனும் பயன்படுத்திய சாதனங்களை மூலைக்கு அனுப்பிவிட்டது. இதுவரை வேறு எந்த சாதனமும் இந்த அளவிற்கு மாற்றங்களைத் தந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு, ஸ்மார்ட் போன் நம் வாழ்வில் இடம் பிடித்துவிட்டது. பெரும்பாலானவர்களுக்கு, அவர்களின் அன்றாட வாழ்வின் இன்றியமையாத ஒரு சாதனமாக மாறிவிட்டது.

சமூக ஊடகங்களுடன் இதனை இணைத்துப் பார்த்தால், இதுவரை சென்ற சந்ததியினர் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளக் கையாண்ட வழிகளை அடியோடு புரட்டிப் போட்டது இந்த ஸ்மார்ட் போன் எனலாம். இதனை 'போன்' என அழைத்தாலும், நாம் போனாக இதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவுதான் எனலாம். ஸ்மார்ட் போன் பயன்பாட்டுப் பட்டியலில், அழைப்புகள் ஏற்படுத்த இதனைப் பயன்படுத்துவது இறுதியாகத்தான் உள்ளது. மற்ற செயல்பாடுகளே அதிகம் உள்ளன. எனவே, ஒரு சிலர், இதனை 'போன்' என்று சொல்வதைக் காட்டிலும், 'டேப்ளட்' அல்லது 'பேப்ளட்' என அழைக்கலாமே என்று கருத்து தெரிவிக்கின்றனர். 


இன்றைய பயனாளர்கள், குறிப்பாக இளைஞர்கள், இதனைப் போனாகப் பயன்படுத்தாமல், அப்ளிகேஷன்களைப் பதிந்து, அவற்றின் மூலம், குறுஞ்செய்திகளைத் தொடர்ந்து பரிமாறிக் கொண்டு, தங்கள் தகவல்கள் பரிமாற்றத்தை முடித்துக் கொள்கின்றனர். மேலும், இளவயதினர் ஆசைப்படுவது போல, ஒரே நேரத்தில், பலருடன் எளிதாக தகவல் தொடர்பு கொள்ள முடிகிறது. போனில் பேசும் போது, நம் முழு கவனத்தையும் அதில் செலுத்த வேண்டும். ஆனால், டெக்ஸ்ட் டைப் செய்து தகவல்களைப் பரிமாறும் போது, அந்த அளவிற்குக் கவனம் செலுத்த வேண்டியதில்லை. இதனால் தான், பல வீடுகள், தங்கள் தரைவழி தொடர்பில் உள்ள தொலைபேசி தொடர்புகளை ரத்து செய்து வருகின்றனர்.  ஸ்மார்ட் போன்கள் எந்த சாதனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டன என்று இங்கு பார்க்கலாம்.
 


பொருள் பார்த்து போட்டோ எடுக்கும் கேமரா:


image.jpg


ஸ்மார்ட் போன்கள் முதலில் ஒழித்துவிட்ட சாதனம், நாம் ஏதேனும் ஒரு பொருளை அல்லது நபரை இலக்காகக் கொண்டு, பார்த்து போட்டோ எடுக்கும் Point and Shoot Camera தான். கடந்த பத்து ஆண்டுகளாகவே, இந்த கேமரா சிறிது சிறிதாக மறைந்து வந்தது. தற்போது ஸ்மார்ட் போன் வைத்துள்ள யாரும், இந்த வகை கேமராவில் எடுக்கும் போட்டோக்களைக் காட்டிலும் மிகவும் துல்லியமாக போட்டோ எடுக்க முடிகிறது. எனவே, தனியாக கேமரா ஒன்றை யாரும் வாங்கிப் பயன்படுத்துவதில்லை. இதனை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவதாலேயே, இதனைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இதில் புதிய சில வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த வகை கேமராக்களில், இணையத் தொடர்பு கொள்ளும் வை பி இணைப்பினை இயக்க முடியும். நம் ஸ்மார்ட் போனையும், இந்த வகை Point and Shoot கேமராவினையும், வை பி வழியாக இணைத்து, கேமராவில் எடுத்துள்ள போட்டோக்களைப் பார்க்க முடியும். கேமராவினை தொலைவில் வைத்துவிட்டு, ஸ்மார்ட் போனில் உள்ள திரையை அழுத்துவதன் மூலம், போட்டோ எடுக்க முடியும். எடுத்த போட்டோவை, கேமராவிலிருந்து நேரடியாக, வை பி மூலம் சமூக இணைய தளங்களுக்கு அனுப்ப முடியும். இந்த வசதிகள் இருந்தால் தான், இந்த வகை கேமராக்கள் தற்போது விற்பனையாகும். இருப்பினும், இந்த வசதிகள் இருந்தாலும், சில ஆண்டுகளில் இவையும் மறைந்துதான் போகும் என கேமரா தயாரிப்பவர்கள் எண்ணுகிறார்கள்.

ஸ்மார்ட் போன்களில் போட்டோ எடுப்பது மட்டுமின்றி, அவற்றை எடிட் செய்திடும் வசதிகளும் இப்போது கிடைக்கின்றன. உடனடியாக, எடுத்த மற்றும் எடிட் செய்த போட்டோக்களை உடனே, நண்பர்களுக்கு அனுப்ப முடியும். அல்லது, க்ளவ்ட் சர்வர்களுக்கு அனுப்பி, அதன் வழியாக நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம். போட்டோ மட்டுமின்றி, வீடியோ பதிவினையும் ஸ்மார்ட் போன்கள் திறனுடன் மேற்கொள்வதால், ஸ்மார்ட் போன்கள் கேமராவினை ஓரங்கட்டியதில் வியப்பில்லை.
 


மியூசிக் பிளேயர்கள்:

walkman_girl4.jpg வாக்மேன், ஐ பாட், எம்பி3 பிளேயர்கள் என ஒரு காலத்தில் நம் இளைஞர்கள் தங்கள் இடுப்பில் கட்டிக் கொண்டு, பாடல்களைக் கேட்டுக் கொண்ட காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இசை கேட்க விரும்புபவர்கள், அதற்கான பைல்களை, ஸ்மார்ட் போனில் பதிந்து, அல்லது மைக்ரோ எஸ்.டி. கார்ட்களில் பதிந்து, கேட்டு ரசிக்கின்றனர். விரும்பும் பாடல்களைக் கட்டணம் செலுத்தி, ஸ்மார்ட் போனில் டவுண்லோட் செய்து, ரசிப்பதும் இப்போது பழக்கமாகிவிட்டது. எனவே, மியூசிக் பிளேயர்கள் என தனியே ஒரு சாதனத்தைக் கொண்டு செல்வது என்பது இனி நடைமுறையில் இருக்காது.
 


பெர்சனல் கம்ப்யூட்டர்:


தங்கள் ஸ்மார்ட் போனையே, பெர்சனல் கம்ப்யூட்டராகப் பயன்படுத்தும் பழக்கம் தற்போது மெல்ல மெல்ல பரவி வருகின்றது. இமெயில், இணைய தேடல் மற்றும் கேம்ஸ் விளையாட ஸ்மார்ட் போன்கள் பயன் படுத்தப்படுகின்றன. கம்ப்யூட்டரில் பணம் முதலீடு செய்திட முடியாதவர்கள், கூடுமானவரை, தங்கள் ஸ்மார்ட் போனையே, கம்ப்யூட்டருக்குப் பதிலாகப் பயன்படுத்துகின்றனர். வீடுகளில் வைத்து பயன்படுத்தும், ஹோம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இயக்கும் செயலிகள் அனைத்தையும் ஈடு செய்திடும் வகையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த அப்ளிகேஷன்கள் தற்போது கிடைக்கின்றன. அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் அதிக திறன் கொண்டு பார்க்கும் வேலைகள் அனைத்தையும், ஸ்மார்ட் போனில் பார்க்க முடியாது என்றாலும், அன்றாட கம்ப்யூட்டிங் பணிகளை, நம்மால், ஸ்மார்ட் போனில் மேற்கொள்ள முடியும். எனவே, ஸ்மார்ட் போன்கள், ஓரளவிற்கு, பெர்சனல் ஹோம் கம்ப்யூட்டரை ஓரங்கட்டி விட்டன என்ற கூற்றும் உண்மையே.
 


டேப்ளட் பி.சி:


பல ஆண்டுகளாக உயர்ந்து வந்த டேப்ளட் பி.சி.க்கள் விற்பனை, தற்போது, அதிகத் திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களால் குறைந்து வருகிறது. அதாவது, மக்கள் டேப்ளட் பி.சி.க்களை வாங்கிப் பயன்படுத்தாமல் இல்லை. அவர்கள், சிறிய அளவிலான டேப்ளட் சாதனங்களை வாங்கி, ஸ்மார்ட் போன் போலப் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் போனின் பரிமாணம், மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்து, தற்போது 5 அல்லது 6 அங்குல அளவிலான திரை, ஸ்மார்ட் போன்களின் ஒரு நிச்சயிக்கப்பட்ட அம்சமாக அமைந்துவிட்டது. இந்த அளவிலான திரை கொண்ட ஸ்மார்ட் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் போலவே செயல்படுகின்றன. இவற்றைச் சட்டைப் பைகளில் வைத்து எடுத்துச் செல்லவும் முடியவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், கம்ப்யூட்டரில் வைத்து முன்பு விளையாடப்பட்ட விளையாட்டுகள் எல்லாம், ஸ்மார்ட் போன்களுக்கென வடிவமைக்கப்பட்டு, அதற்கான ஸ்டோர்களில் கிடைக்கின்றன

No comments:

Post a Comment