Sunday 28 February 2016

கூகுள் இன்புட் டூல்ஸ் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் தமிழ் மொழியை மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யலாம்

ஒரு சந்தர்பத்தில் தமிழ் மொழியை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதென்றால் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

ஆண்ட்ராய்டு தமிழ் தட்டச்சு

எனினும் தகவல் தொழில்நுட்பத்தின் பாரிய வளர்ச்சியின் காரணமாக அவரவருக்கு தெரிந்த மொழியில் தத்தமது சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளும் நிலைமை இன்று உருவாகியுள்ளது.

அந்தவகையில் தமிழ் மொழியில் கூகுள் தேடலை மேற்கொள்ளவும், தமிழ் மொழியில் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பவும், பேஸ்புக், கூகுள் பிளஸ், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் என எந்த ஒரு சந்தர்பத்திலும் எந்த ஒரு இடத்திலும் தமிழ் மொழியை மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.
எமது ஸ்மார்ட் போனின் திரையில் எழுதக்கூடிய தமிழ் எழுத்துக்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றித்தரும் Google Handwriting input எனும் செயலியை கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தது.

இனி தமிழ் மொழியை தட்டச்சு செய்ய கூகுள் இண்டிக் கீபோர்ட் 

தற்பொழுது "கூகுள் இண்டிக் கீபோர்ட்" எனும் செயலியையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியானது ஆரம்பத்தில் "கூகுள் ஹிந்தி இன்புட்" என கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து வந்தது.
இருப்பினும் இதன் அண்மைய பதிப்பில் "கூகுள் ஹிந்தி இன்புட்" எனும் பெயரை "கூகுள் இண்டிக் கீபோர்ட்" என கூகுள் நிறுவனம் மாற்றி அமைத்திருந்ததுடன் தமிழ் உட்பட இன்னும் 10 இந்திய மொழிகளையும் இதில் சேர்த்துள்ளது.
தமிழ் மொழியை தட்டச்சு செய்வதற்கு என கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கக்கூடிய ஏனைய செயலிகளையும் விட முற்றிலும் வேறுபட்ட இடைமுகத்தை கொண்டுள்ள இது புதிய வழியில் தமிழ் மொழியை தட்டச்சு செய்து கொள்வதற்கான வசதியை தருகிறது.

இந்த செயலியில் தமிழ் மொழியை தட்டச்சு செய்வதற்கு இரண்டு வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.

முறை 1:

கூகுள் இன்புட் டூல்ஸ் அப்ளிகேஷன்

ஒலிப்பு முறை எனப்படும் முறையாகும். இந்த முறையில் நீங்கள் தமிழ் மொழியை தட்டச்சு செய்யும் போது "Amma" என்ன தட்டச்சு செய்தால் "அம்மா" என்ற தமிழ் சொல்லை தட்டச்சு செய்ய முடியும்.

முறை 2:

ஆண்ட்ராய்டு தமிழ் தட்டச்சு

மற்றைய முறையானது நாம் தமிழ் எழுத்துக்களை சுட்டுவதன் மூலம் தட்டச்சு செய்யக்கூடிய பொதுவான முறையாகும். இந்த வழிமுறையில் தட்டச்சு செய்வதற்கு கூகுள் புதியதொரு இடைமுகத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த இடைமுகத்தில் தோன்றக்கூடிய எழுத்துக்கலானது இரு வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதன் வலது பக்கத்தில் "க, ச, த, ம, ப, ந, ர.......... " போன்ற அகர மெய் எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு எழுத்தை நீங்கள் சுட்டும் போது அந்த எழுத்தோடு தொடர்புடைய ஏனைய எழுத்துக்கள் இடது பகுதியில் தோன்றுகின்றன.
உதாரணத்திற்கு நீங்கள் வலப்பக்கத்தில் உள்ள "க" என்பதை சுட்டும் போது Keyboard செயலியின் இடது பக்கத்தில் "க" "கா" "கீ" "கு" "கெ".... போன்ற அதனோடு தொடர்புடைய எழுத்துக்கள் தோன்றுகின்றன.

மேலும் இடப்பக்கத்தில் உள்ள தரப்பட்டுள்ள "க", "ப", "ம" போன்ற எழுத்துக்களை தொடர்ச்சியாக அழுத்தும் போது அதனோடு தொடர்புடைய மெய் எழுத்துக்களை இலகுவாக தட்டச்சு செய்து கொள்ள முடியும்.
அதாவது நீங்கள் "க" என்ற எழுத்தை தொடர்ச்சியாக அழுத்தும் போது "க்" என்ற எழுத்து தட்டச்சு செய்யப்படும். இந்த வசதியானது வேகமாக தட்டச்சு செய்ய உதவியாக அமையும்.

ஸ்மார்ட் போன் தமிழ் தட்டச்சு
மேலும் இந்த செயலியின் மேற்பகுதியில் தோன்றும் "abc" மற்றும் "அ" எனும் குறியீடுகளை சுட்டுவதன் மூலம் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கும் மிக இலகுவாக கீபோர்டின் அமைப்பை மாற்றிக் கொள்ள முடியும்.
அத்துடன் "அ" எனும் குறியீட்டை மீண்டும் சுட்டுவதன் மூலம், மேற்குறிப்பிட்ட வகையில் தமிழ் மொழியை தட்டச்சு செய்யும் இரு வேறு வழிமுறைகளில் உங்களுக்கு இலகுவான முறையை தெரிவு செய்து கொள்ள முடியும்.
இவைகள் தவிர இந்திய ரூபாய் குறியீடு, நட்சத்திர குறியீடுகள், மற்றும் ஏனைய விசேட குறியீடுகளை பயன்படுத்துவதற்கான வசதிகளுடன் இமொஜி போன்றவற்றை பயன்படுத்துவதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

கூகுள் இண்டிக் கீபோர்ட் செயலியை நிறுவுவது எப்படி?

கீழே தரப்பட்டுள்ள இணைப்பு மூலம் இந்த செயலியை தரவிறக்கி உங்கள்  ஆண்ட்ராய்டு  ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்ளுங்கள்.

Tamil google input tools
பின்னர் நிறுவப்பட்ட கூகுள் இண்டிக் கீபோர்ட் செயலியை திறந்து கொள்க.
இனி Select Google Indic Keyboard என்பதை சுட்டுவதன் மூலம் English & Indic Languages என்பதை சுட்டுக.

கூகுள் இன்புட் டூல்ஸ் Application
பின் Select Languages என்பதை சுட்டுவதன் மூலம் தமிழ் மொழியை தெரிவு செய்க.

ஆண்ட்ராய்டு கூகுள் இன்புட் டூல்ஸ்  Tamil

அவ்வளவுதான்....!

கூகுள் இண்டிக் கீபோர்ட் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்க இங்கே சுட்டுக
இந்த செயலி உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் கூகுள் ப்ளே ஸ்டோரில் தமிழ் மொழியில் பின்னூட்டங்களை எழுத மறவாதீர்கள். இதன் மூலம் தமிழ் மொழிக்கு கூகுள் அதிக முக்கியத்துவத்தை கொடுக்க இடமுண்டு.

No comments:

Post a Comment