Sunday 7 February 2016

பில் கேட்ஸ் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்

ஆனா.. ஊனா... "நீ என்ன பெரிய பில் கேட்ஸ்-ஆ..?!" என்று கேட்டு ரொம்ப அசிங்கப்படுத்துகிறார்களா.?? பரவாயில்ல.. அசிங்கப்படுத்தட்டும்..! உண்மை என்னவென்றால் அசிங்கப்பட்டத்தான் பில்கேட்ஸ் ஆக முடியும்..! 

பில் கேட்ஸ் பற்றி அப்படி என்னதான் தெரியும் உங்களுக்கு..? உலகிலேயே மிகவும் பெரிய பணக்கார்காளின் பட்டியலில் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பவர், தொடங்கிய காலத்தில் இருந்தே நிலையான வெற்றியை பெற்று கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர், அவ்வளவு தானே தெரியும்..!! 

ஆனால் அவர் எப்படி 'பில் கேட்ஸ்' ஆனார் என்பது பற்றி தெரியுமா..?! 

eQ99Qao.jpg734jlIc.jpg

முதல் கம்ப்யூட்டர் ப்ரோகிராம் : 

பில் கேட்ஸ், பள்ளி மாணவராக இருக்கும்போதே ஒரு ஜென்ரல் கம்ப்யூட்டரில் தனது முதல் கம்ப்யூட்டர் ப்ரோகிராமை எழுதி அசத்தினார்..! 

Fn2Gkt9.jpg

கில்லாடி : 

பில் கேட்ஸ் கம்ப்யூட்டர் கோட் எழுதுவதில் கில்லாடி என்று தெரிய வந்ததும் அவரை ஸ்கூல் கம்ப்யூட்டர் ப்ரோகிராம்களை எழுத வைத்தது பள்ளி நிர்வாகம்..! 

7IIZmSD.jpg

வேர்ல்ட் புக் ஆஃப் என்சைக்லோபீடியா : 

பில் கேட்ஸ் தனது பள்ளிப்பருவத்திலேயே 'வேர்ல்ட் புக் ஆஃப் என்சைக்லோபீடியா'வை முழுமையாக படித்து முடிததிருந்தார். 

5Tr9Nku.jpg

சாட் பரீட்சை : 

பில் கேட்ஸ் சாட் பரீட்சையில் 1600க்கு 1590 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

PBnqArc.jpgPBnqArc.jpg

ட்ராப் அவுட் :

பில் கேட்ஸ் ஒரு காலேஜ் ட்ராப் அவுட் ஆவார், 1975 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இருந்து தனது படிப்பை நிறுத்திக்கொண்டார். 

KvmckzS.jpg7NG9HqK.jpg

கைதி :

ட்ராப் அவுட் ஆன இரண்டு ஆண்டுகள் கழித்து லைசன்ஸ் இல்லாததற்கும், சிக்னலில் நிற்காமல் சென்றதுக்கும் மெக்ஸிகோ காவல் துறையினரால் கைதி செய்யப்பட்டார். 

UVCbW7a.jpg

பழக்கம் : 

பில் கேட்ஸ், ஆண்டுக்கு சுமார் 50 புத்தகங்கள் வரை படிக்கும் பழக்கம் கொண்டவர். 

uQ51wLl.jpg

பொர்ஸ்ச்சே : 

பில் கேட்ஸ், பொர்ஸ்ச்சே கார்கள் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர்.

Y83KNud.jpg

சொந்த விமானம் :

பில் கேட்ஸ் தனது சொந்த விமானத்திற்காக அதிகப்படியான செலவு செய்யும் பழக்கம் கொண்டவர் என்பதும், 1997-ஆம் ஆண்டில் இருந்து பில் கேட்ஸ் தனது சொந்த விமானத்தை தான் பயன்படுத்துகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

GRjwXWX.jpg

கோடக்ஸ் லீசெஸ்டர் :

விமானத்திற்கு அடுத்தப்படியாக பில் கேட்ஸ் அதிகம் செலவு செய்வது லியோனார்டோ டா வின்சியின் எழுத்துக்களில் ஒரு தொகுப்புப்பான 'கோடக்ஸ் லீசெஸ்டர்' சேகரிப்புகாக..! 

0Jz4NX2.jpg

மரபுரிமை : 

பெரிய அளவிலான சொத்துக்களை பிள்ளைகளுக்கு விட்டு செல்வதில் எந்த விதமான பயனும் இல்லை என்ற நம்பிக்கையை பின்பற்றும் பில் கேட்ஸ் அவர் தனது குழந்தைகளுக்கு மரபுரிமையாக 10 மில்லியன் டாலர்கள் சேரும்படியாக வழிவகைச் செய்துள்ளார்.

eQtHMEc.jpg

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் : 

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மீது பில் கேட்ஸ் பெரிய அளவிலான ஆர்வம் கொண்டவர். 

5aborNw.jpg

மியூசிக் பேண்ட் :

பில் கேட்ஸ்க்கு மிகவும் பிடித்த மியூசிக் பேண்ட் - வீஸர். 

Iv0GFYe.jpg

குறை : 

பில் கேட்ஸ்க்கு எந்தவொரு வெளிநாட்டு மொழியும் தெரியாது, இதை ஒரு பெரும் குறையாக பில் கேட்ஸ் கருதுவதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment