Sunday 28 February 2016

கீபோர்டை பயன்படுத்தாமல் கூகுள் தளத்தில் தமிழ் மொழியில் தகவல்களை தேடிப்பெறுவது எப்படி? (ஸ்மார்ட் போன்களுக்கு மாத்திரம்)

கூகுள் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். இன்றைய இணைய ஜாம்பவான் "கூகுள்" பற்றி அதிகமானவர்கள் அறிந்திருந்தாலும் கூட அதில் இருக்கக் கூடிய பல வசதிகளை நாம் இது வரை அறிந்ததில்லை.

கூகுளில் தமிழ் தட்டச்சு செய்ய

அந்த வகையில் கூகுள் தேடியந்திரத்தில் மறைத்திருக்கக் கூடிய பல வசதிகளையும் கூகுளின் யூடியூப் தளத்தில் இருக்கக் கூடிய பல வசதிகளையும் எமது முன்னைய பதிவு மூலம் பார்த்திருந்தோம்.

அதே போல் நீங்கள் கூகுள் தேடியந்திரத்தை ஸ்மார்ட் போன் மூலம் பயன்படுத்துபவர் எனின் உங்கள் தேடலை இலகு படுத்துவதற்கு இன்னும் ஒரு வசதியையும் தருகிறது கூகுள்.

அதாவது நீங்கள் உங்களது ஸ்மார்ட் சாதனத்தின் திரையில் கையால் எழுதுவதன் மூலம் கூகுள் தளத்தின் ஊடாக உங்களுக்குத் தேவையான எந்த ஒன்றையும் தேடிப் பெறுவதற்கான வசதியே அதுவாகும்.

இதில் இனிப்பான விடயம் என்னவெனில், இந்த வழிமுறையில் ஆங்கில சொற்களை மாத்திரம் அல்லது தமிழ் உட்பட எந்த ஒரு மொழியிலும் சொற்களை எழுதி தேடலை மேகொள்ள முடியும்.
நீங்களும் இந்த வசதியை செயற்படுத்திக் கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

கூகுளில் தமிழ்
1. உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் www.google.com எனும் கூகுளின் முகப்புப் பக்கத்திற்கு செல்க.

ஸ்மார்ட் போனில் கூகுள் தேடியந்திர அமைப்புக்கள்
2. பின் அதன் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Settings ===> Search Settings என்பதை சுட்டுக.
3. இனி தோன்றும் பகுதியில் Handwriting என்பதற்குக் கீழ் இருக்கும் Enable என்பதை தெரிவு செய்க.

கூகுள் தேடல் அமைப்புக்கள்
4. பின்னர் Language in Google products என்பதில் தமிழ் மொழியை தெரிவு செய்க.

கூகுளில் தமிழ்

5. இறுதியாக குறிப்பிட்ட பகுதியின் கீழே தரப்பட்டிருக்கும் Save என்பதை சுட்டுக. 
அவ்வளவுதான்.
இனி கூகுளின் முகப்புப் பக்கத்துக்குச் சென்று உங்கள் ஸ்மார்ட் போனின் திரையில் கையால் எழுதுவதன் மூலம் உங்களுக்குத் தேவையானவற்றை தேடிப்பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் கூகுளின் முகப்புப் பக்கத்தின் கீழே தோன்றும் புதிய பகுதி மூலம் எழுதிய எழுத்துக்களை நீக்கிக் கொள்ளவும் Space Bar மூலம் எழுத்துக்களுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.

No comments:

Post a Comment