Sunday 28 February 2016

5 நொடியில் படத்தை டவுன்லோடு செய்யலாம், 5ஜி சோதனையில் சாதனை.

ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் உலகளவில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடும் வேகமாக வளர்ந்து வருகின்றது. மக்கள் பயன்பாடு அதிகரிக்க துவங்கும் நிலையில் இன்னும் இண்டர்நெட் சார்ந்த டேட்டா கட்டணங்களின் விலை குறையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நம்ம ஊர்களில் இன்னும் 3ஜி சேவையை முழுமையாக கிடைக்க பெறாத நிலையில் வெளிநாட்டில் 5ஜி சேவையை வழங்கும் சோதனை நிறைவடைந்து அவை விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது. 

Wn4YVLD.jpg

சோதனை 

ஆய்வு கூடங்களில் மட்டும் ஆய்வு செய்யப்பட்டு வந்த 5ஜி சேவை தற்சமயம் வெரிசான் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களில் சோதனை செய்ய துவங்கியுள்ளன. 

GfwMpiI.jpg

கருவி

இந்த சோதனை சாதாரண ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியாது, இதற்கென பிரத்யேக கருவிகள் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்திருக்கின்றது என கூறப்பட்டுள்ளது. 

DMJs85L.jpg

வீடியோ

சோதனைகளில் அதிக ரெசல்யூஷன் கொண்ட 4கே வீடியோக்களை எவ்வித சிரமமும் இன்றி பார்க்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LRDV81o.jpg

இடையூறு

5ஜி சோதனையில் அதிவேக இண்டர்நெட் கிடைத்தாலும் திடீரென வேகம் குறைந்து கனெக்ஷனில் இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது. 

FVcxAyx.jpg

சோதனை

தற்சமயம் பலகட்ட சோதனைகளை செய்து வரும் வெரிசான் நிறுவனம் 5ஜி சேவையை 2017 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

1lbzxGG.jpg

வேகம்

4ஜி சேவையில் ஒரு திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய அதிகபட்சம் 8 நிமிடங்கள் வரை ஆகும் நிலையில் சீரான 5ஜி கனெக்ஷனில் நொடிகளில் திரைப்படத்தை பதிவிறக்கம் செய்திட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

mzwEkzG.jpg

சர்ரே பல்கலைக்கழகம்

5ஜி சேவைக்கான ஆய்வுகள் 2011 ஆம் ஆண்டு சர்ரே பல்கலைக்கழகத்தில் துவங்கியது. இந்த ஆராய்ச்சிக்கு சாம்சங், புஜித்சு உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவளித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது. 

o980apo.jpg

நிறுவனங்கள் 

5ஜி சேவையை வழங்க டொகோமோ, AT&T, NTT, எரிக்சன், ஹூவாய் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்சமயம் ஆர்வம் காட்டி வருகின்றதும் குறிப்பிடத்தக்கத்து.

No comments:

Post a Comment