Sunday 29 November 2015

2021 இப்படி தான் இருக்கும்..!?

உலக மக்களை வியப்பில் ஆழ்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் தொழில்நுட்ப துறை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை விளக்கும்  தொகுப்பு தான் இது.

தொழில்துறையில் ஏற்படும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு வாக்கில் மக்கள் பயன்பாட்டிற்கு எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

tooopen_sy_130269757698.jpg

2016 விண்வெளி சுற்றுலா

இன்றைய காலக்கட்டத்தில் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது. ஸ்பேஸ் ஐலேண்டு, கேலக்டிக் சூட் மற்றும் ஆர்பிட்டல் டெக்னாலஜீஸ் போன்ற நிறுவனங்கள் எதிர்காலத்தில் விண்வெளி சுற்றுலாவை சாத்தியமாக்குவதோடு, ஐந்து நாட்களுக்கு சுமார் $1 மில்லியன் வரை கட்டணம் நிர்ணயிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

07-1446878553-02.jpg

சன்ஸ்கிரீன் மாத்திரை
அல்ட்ரா வைலட் கதிர்களில் இருந்து மனித தோல் மற்றும் கண்களை பாதுகாக்கும் சன்ஸ்கிரீன் மாத்திரைகள் அடுத்த ஆண்டு வாக்கில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

07-1446878555-03.jpg

2017 லேசர் பேனா

உடலில் ஏற்படும் காயங்களை சரி செய்யும் லேசர் பேனா வகைகள் விரைவில் சாத்தியமாகும் என்பதோடு இதன் மூலம் ரத்தம் கசிவதை விரைவில் தடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

07-1446878556-04.jpg

2018 லைட் பீக்

ஒரு நொடியில் சுமார் 100 ஜிபி டேட்டாகளை பறிமாற்றம் செய்யும் வழி முறை தான் டைல் பீக்.

07-1446878558-05.jpg

ரோபோட் உளவாளி

பூச்சி வடிவில் இருக்கும் ரோபோட் உளவாளிகள் எதிர்காலத்தில் மிகவும் சாதாரணமான தொழில்நுட்பங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

07-1446878559-06.jpg

2019 கணினி

இதற்கு முன் இல்லாத அளவு மனித மூளைக்கு சமமான கணினி வகைகள் வாடிக்கையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இதன் பயன்பாடுகள் தற்சமயம் இருப்பதை விட அதிக மேம்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

07-1446878561-07.jpg

வெப் 3.0

முற்றிலும் ஹைப்பர்லின்க்கள் சார்ந்த வெப் 1.0, சமூகம் சார்ந்த தகவல் பறிமாற்றம் வெப் 2.0 தற்சமயம் பயன்பாட்டில் இருக்கின்றது. எதிர்காலத்தில் வெப் 3.0 வாடிக்கையாளர்களை சமூகம் சார்ந்த தகவல்களை அதிகம் மேம்படுத்தப்பட்ட, தனித்துவம் வாய்ந்த அல்காரிதம் போன்றவைகளை கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

07-1446878563-08.jpg

பியுஷன் ரியாக்டர்

மிகவும் சிறிய அளவு மூலபொருட்களை கொண்டு அதீத சக்தியை உருவாக்குவதே பியுஷன் ரியாக்டர் ஆகும். இதற்கான ஆய்வுகள் ஏற்கனவே துவங்கியிருந்தாலும் இவை முழுமையாக நிறைவடைய 2030 வரை காத்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

07-1446878564-09.jpg

2020 கார்

வால்வோ நிறுவனம் உறுதியளித்திருக்கும் க்ராஷ்-ப்ரூஃப் கார்கள் 2020 ஆம் ஆண்டு வாக்கில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வகை தொழில்நுட்பமானது ரேடார், சோனார் மற்றும் டிரைவர் அலெர்ட் சிஸ்டம் போன்றவைகளை கொண்டு சாத்தியமாக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

07-1446878566-10.jpg

எதிர்பார்ப்பு

எதிர்கால தொழில்நுட்பங்களும் மக்கள் நலன் சாந்தே இருக்கும் என முந்தைய ஸ்லைடர்களின் மூலம் புரிந்து கொண்டிருப்பீர்கள். இதே போல் தொழில்நுட்ப துறையில் எவ்வாறான வளர்ச்சிகளை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.

No comments:

Post a Comment