Sunday 9 August 2015

புகைப்பழக்கம் தடுக்கும் சூப்பர் பாக்டீரியா

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஸ்கிரிப் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த உதவும் புதிய பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். அதன் பெயர் சூடோமோனாஸ் புடிடா. இது புகையிலை விளையக் கூடிய மண்ணிலிருந்தே பெறப்படுகிறது.

இந்த பாக்டீரியா மற்ற பாக்டீரியாவிலிருந்து சற்று வித்தியாசமாக உள்ளது. இவை புகைப்பிடிப்பதால் மனிதனின் ரத்தத்தில் கலக்கும் நிகோடினையே உண்டு வாழக் கூடியவை. ரத்தத்தில் கலந்த நிகோடின் மூளையை சென்றடையும் முன்பே இந்த பாக்டீரியாக்கள் நிகோடினை தின்று விடும். அதனால், புகைப்பிடிககும் பழக்கத்திற்கு மூளை அடிமையாக்கப்படுவது குறையும். இந்த வகை பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டத்தில் இருக்கக் கூடிய நிகோடினையும் கட்டுப்படுத்துவதையும் கண்டு பிடித்தனர்.

இதை நிரூபிக்க ஒரு எலியின் ரத்த மாதிரியில், ஒரு சிகரெட்டில் இருக்கக்கூடிய நிகோடினை கலந்தனர். தொடர்ச்சியாக இந்த பாக்ட்டீரியாக்களைச் சேர்த்ததில் ரத்தத்தில் இருந்த நிகோட்டினை 10 நிமிடங்களிலேயே காலி செய்தது.


சிகரெட் பிடிப்பவர்கள் தங்கள் மனோ பலத்தால் பழக்கத்திலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்தாலும். இவ்வகை பாக்டீரியாக்கள் மிக உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment